மடகாசுகர் வானம்பாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மடகாசுகர் வானம்பாடி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
எரிமாப்டெரிக்சு
இனம்:
எ. கோவா
இருசொற் பெயரீடு
எரிமாப்டெரிக்சு கோவா
(ஹார்ட்லாப், 1860)
வேறு பெயர்கள்
  • மிராப்ரா கோவா

மடகாசுகர் வானம்பாடி (Madagascar lark)(எரிமாப்டெரிக்சு கோவா) என்பது மடகாசுகரில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி ஆகும். இது அலாடிடே குடும்பத்தில் உள்ள ஒரு வானம்பாடி சிற்றினம் ஆகும்.

வகைப்பாட்டியல்[தொகு]

மடகாசுகர் வானம்பாடி முன்பு 2014-ல் எரிமாப்ட்டெரிக்சு பேரினத்திற்கு மாற்றப்படும் வரை மிராப்ரா பேரினத்தில் வைக்கப்பட்டது.[2] மடகாசுகர் வானம்பாடியின் மாற்றுப் பெயர்களாகக் கோவா வானம்பாடி, மடகாசுகர் புதர் வானம்பாடி, மடகாசுகர் பாடும் வானம்பாடி மற்றும் மடகாசுகர் சிட்டு வானம்பாடி உள்ளன.[3]

பரவலும் வாழிடமும்[தொகு]

மடகாசுகர் வானம்பாடி வாழிட வரம்பு பெரியது. உலக அளவில் 100,000க்கும் அதிகமான சதுர கி.மீ. பரப்பளவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1] இதன் இயற்கையான வாழிடங்கள் வறண்ட சவன்னா மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் புதர்க்காடுகள் ஆகும்.

மடகாசுகரின் மொரோண்டாவாவுக்கு அருகில்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 BirdLife International (2016). "Eremopterix hova". IUCN Red List of Threatened Species 2016: e.T22717018A94518220. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22717018A94518220.en. https://www.iucnredlist.org/species/22717018/94518220. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Taxonomy 4.1 to 4.4 « IOC World Bird List". பார்க்கப்பட்ட நாள் 2016-11-14.
  3. "Eremopterix hova - Avibase". பார்க்கப்பட்ட நாள் 2016-12-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மடகாசுகர்_வானம்பாடி&oldid=3857731" இலிருந்து மீள்விக்கப்பட்டது