மஞ்சு மேக்வால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சு மேக்வால்
மஞ்சு மேக்வால்
இராசத்தான் சட்டப் பேரவை
பதவியில்
திசம்பர் 2018 – 3 திசம்பர் 2023
முன்னையவர்மஞ்சு பாக்மார்
பின்னவர்மஞ்சு பாக்மார்[1]
தொகுதிஜயல்
பதவியில்
2008 - 2013
முன்னையவர்மதன் லால் மக்வால்
பின்னவர்மஞ்சு பாக்மார்
தொகுதிஜயல்
இராஜஸ்தான் முதலமைச்சர்அசோக் கெலட்
பின்னவர்அனிதா பாதல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 ஏப்ரல் 1977 (1977-04-20) (அகவை 46)
புஷ்கர், அஜ்மீர், இராசத்தான்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
கல்விமுனைவர்
தொழில்அரசியல்வாதி

மஞ்சு தேவி மேக்வால் (Manju Meghwal) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்தவரும் ஆவார். இவர் இராசத்தானின் நாகவுர் மாவட்டத்தின் ஜெயல் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.[2][3][4]

சாதனைகள்[தொகு]

மஞ்சு மேக்வாலுக்கு ஜெய்ப்பூரில் உள்ள மகாத்மா ஜோதி ராவ் பூலே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. நாகவுர் மாவட்ட ஊராட்சி மக்கள் பிரதிநிதிகளின் பங்கு பற்றிய ஆய்வுக் கட்டுரையை இவர் தயாரித்தார்.[5]

2021ஆம் ஆண்டிற்கான சிறந்த சட்டமன்ற உறுப்பினர் விருது மஞ்சு தேவி மேக்வாலுக்கு வழங்கப்பட்டது. சட்டசபை சபாநாயகர் சிபி ஜோஷி மற்றும் முதல்வர் அசோக் கெலாட், எதிர்க்கட்சித் தலைவர் குலாப் சந்த் கட்டாரியா ஆகியோரால் வழங்கப்பட்ட பாராட்டுக் கடிதம் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார். சபையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காகவும், அதிகபட்சப் பிரச்சினைகளை எழுப்பியதற்காகவும் இவருக்கு இந்த சிறந்த சட்டமன்ற உறுப்பினர் விருது வழங்கப்பட்டது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jayal Assembly Election Results 2023 Highlights: BJP's Dr. Manju Baghmar with 70468 defeats INC's Dr. Manju Devi". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-31.
  2. "Rajasthan ministers hold public hearings on schemes". http://daily.bhaskar.com/news/RAJ-JPR-rajasthan-ministers-hold-public-hearings-on-schemes-2896510.html. பார்த்த நாள்: 8 July 2015. 
  3. "Women with same first names fight it out". http://www.deccanherald.com/content/371058/women-same-first-names-fight.html. பார்த்த நாள்: 8 July 2015. 
  4. "Jayal Elections Results 2014, Current MLA, Candidate List of Assembly Elections in Jayal, Rajasthan". Elelections.in. பார்க்கப்பட்ட நாள் 8 July 2015.
  5. "Mla Manju Meghwal Gets Phd Degree". dainik bhaskar.
  6. "विधायक डॉ मेघवाल को मिला सर्वश्रेष्ठ विधायक पुरस्कार". zee rajsthan.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சு_மேக்வால்&oldid=3891413" இலிருந்து மீள்விக்கப்பட்டது