மசக்காளிப்பாளையம்

ஆள்கூறுகள்: 11°01′03″N 77°00′00″E / 11.017400°N 77.000100°E / 11.017400; 77.000100
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மசக்காளிப்பாளையம்
புறநகர்ப் பகுதி
மசக்காளிப்பாளையம் is located in தமிழ் நாடு
மசக்காளிப்பாளையம்
மசக்காளிப்பாளையம்
மசக்காளிப்பாளையம் (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 11°01′03″N 77°00′00″E / 11.017400°N 77.000100°E / 11.017400; 77.000100
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர் மாவட்டம்
ஏற்றம்426 m (1,398 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்641015
தொலைபேசி குறியீடு+91422xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்கோயம்புத்தூர், பீளமேடு, காந்திபுரம், ஆவாரம்பாளையம், கணபதி, சிங்காநல்லூர்
மாநகராட்சிகோயம்புத்தூர் மாநகராட்சி

மசக்காளிபாளையம் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.

அமைவிடம்[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 426 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மசக்காளிப்பாளையம் ஊரின் புவியியல் ஆள்கூறுகள் 11°01'02.6"N 77°00'00.4"E (அதாவது, 11.017400° N 77.000100° E) ஆகும்.

அருகிலுள்ள ஊர்கள்[தொகு]

கோயம்புத்தூர், காந்திபுரம், ஆவாரம்பாளையம், சிங்காநல்லூர், கணபதி, பீளமேடு ஆகியவை மசக்காளிப்பாளையம் ஊருக்கு அருகில் அமைந்துள்ள ஊர்களாகும்.

கல்வி[தொகு]

பள்ளி[தொகு]

மசக்காளிப்பாளையம் ஊரில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஓர் அரசுப் பள்ளி. தனியார் பள்ளிகளுக்கு இணையான தரத்துடன் திகழும் இப்பள்ளியில் 530 மாணவர்கள் பயில்கின்றனர். 50 கணினிகள், மாணவர்கள் பயன்பாட்டுக்காக உள்ளன. தரமான கல்வி, ரோபோடிக்ஸ், யோகா, சதுரங்கம், பறையிசை, பாரம்பரிய விளையாட்டுகள், கராத்தே போன்ற கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகள், உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றினால் முன்னணியில் இருக்கும் இப்பள்ளியில், மிக முக்கியமான நபர்களின் சிபாரிசுக் கடிதங்கள் இருந்தும் இடம் கிடைக்காமல் திரும்பும் பெற்றோர்கள் அதிகம்.[1] வளர்க்கப்பட்ட மரங்கள் மற்றும் செடிகள் காரணமாக பசுமையாகவும் குளிர்ச்சியாகவும் காணப்படும் இப்பள்ளியின் உட்புற சுவற்றில் கலைநயம் மிக்க சிவப்பு, நீல மற்றும் பச்சை நிறங்களில் தொடருந்து ஒன்றின் ஓவியம் வரையப்பட்டுள்ளது. மேலும், இன்னொரு சுவற்றில் மாணவர்களின் பிறந்தநாள் குறித்த அறிவிப்புக்கான இடம் ஒன்றும் உள்ளது.[2] மழைமானி பொருத்தப்பட்ட அமைப்பு ஒன்றின் மூலமாக, மழையின் அளவு எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ளுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.[3] மாணவர்கள் சேர்க்கைக்கான விளம்பரங்களில், பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இதர நன்மைகள் குறித்த செய்திகள் தெரியப்படுத்தப்ட்டுள்ளன.[4]

கல்லூரிகள்[தொகு]

அருகிலுள்ள பீளமேட்டில் பூ. சா. கோ. (PSG) குழும கல்லூரிகள் (கலை, அறிவியல் மற்றும் பொறியியல் துறைகள்) அமைந்துள்ளன.

போக்குவரத்து[தொகு]

சாலைப் போக்குவரத்து[தொகு]

மசக்காளிப்பாளையம் அருகே செல்லும் அவினாசி சாலை வழியாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் பெரும்பாலானவை செல்கின்றன.

தொடருந்து போக்குவரத்து[தொகு]

பீளமேடு தொடருந்து நிலையம், மசக்காளிப்பாளையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திலேயே உள்ளது. இங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம் இருக்கிறது.

வான்வழிப் போக்குவரத்து[தொகு]

இங்கிருந்து கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் சுமார் 7 கி.மீ. தூரத்திலேயே இருக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மசக்காளிப்பாளையம்&oldid=3628108" இலிருந்து மீள்விக்கப்பட்டது