மங்காயா மீன்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மங்காயா மீன்கொத்தி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
தோடிராம்பசு
இனம்:
தோ. ரோபிகலாரிசு
இருசொற் பெயரீடு
தோடிராம்பசு ரோபிகலாரிசு
(கோலியாக், 1974)

பூனையொலி மீன்கொத்தி (Mewing kingfisher) அல்லது மங்காயா மீன்கொத்தி (தோடிராம்பசு ரோபிகலாரிசு) என்பது அல்செடினிடே எனும் மீன்கொத்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவைச் சிற்றினமாகும். இது குக் தீவுகளில் உள்ள மங்காயாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இதன் இயற்கையான வாழ்விடங்கள் மித வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் தோட்டங்கள் ஆகும்.

விளக்கம்[தொகு]

மங்காயா மீன்கொத்தியின் உடல் நீளம் 22 செ.மீ. ஆகும். இது பெரிய தலையினையும் பெரிய கருப்பு நிற அலகினையும் கொண்டது. வேறு சில தோடிராம்பசு மீன்கொத்திகளைப் போலவே, இது நீல-பச்சை மேல் பகுதிகளைக் கொண்டுள்ளது. மஞ்சள்-ஆரஞ்சு கழுத்துப்பட்டையும் தலை-பட்டையும் நீல-பச்சை தலைப்பட்டையினையும் கொண்டுள்ளது. உடலின் கீழ்ப்பகுதிகள் வெள்ளை நிறத்தில் இருக்கும்.

பாதுகாப்பு[தொகு]

மங்காயா மீன்கொத்தி வாழ்விட இழப்பு, இது கூடு கட்டும் இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட மைனாக்களால் அச்சுறுத்தப்படுகிறது. குக் தீவுகளில் உள்ள பறவை பன்னாட்டு வாழ்க்கையின் கூட்டாளி அமைப்பான தாபோரோபோரொங்கா இபுகேரியா சமூகம், மங்காயாவிலிருந்து மைனாக்களை ஒழிக்கும் திட்டத்தை முன்மொழிந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2022). "Todiramphus ruficollaris". IUCN Red List of Threatened Species 2022: e.T22683465A209393532. https://www.iucnredlist.org/species/22683465/209393532. பார்த்த நாள்: 29 July 2022. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்காயா_மீன்கொத்தி&oldid=3945517" இலிருந்து மீள்விக்கப்பட்டது