மக்பூல் செர்வாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மக்பூல் செர்வாணி (Maqbool Sherwani) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சம்மு காசுமீர் மாநிலத்தின் தேசிய மாநாட்டு கட்சியின் உறுப்பினராக இருந்தார்.[1] 1947 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காசுமீரின் பாரமுல்லாவில் பாக்கித்தானிலிருந்து பசுதூன் பழங்குடியினரின் படையெடுப்பை தாமதப்படுத்தினார் [2] இந்த முறையில், சிறீநகரில் சேருதல் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் தரையிறங்கிய இந்திய இராணுவத்தின் சீக்கியப் படைப்பிரிவு துருப்புக்களுக்கு நேரத்தை வாங்குவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.[2] செர்வாணி பழங்குடியினரால் இவர் கொல்லப்பட்டார்.

1947 நிகழ்வு[தொகு]

காசுமீரை ஆக்கிரமிக்கத் திட்டமிட்ட பழங்குடியினரை அப்போது மக்பூல் கண்டார். சிறீநகர் விமான நிலையத்திற்குச் செல்லும் பாதையில் அவர்களை வழிநடத்தச் சொன்னபோது இவர் அவர்களை தவறான பாதையில் வழிநடத்தினார். தங்கள் அணிவகுப்பை தாமதப்படுத்த அவர் தவறாக வழிநடத்தினார் என்பதை உணர்ந்தபோது கோபமான கிளர்ச்சிப் படைகளால் அவர் சிலுவையில் அறையப்பட்டார். மக்பூல் செர்வாணியை இந்திய இராணுவம் ஒரு கதாநாயகனாகக் கருதுகிறது.[3]

சிறப்புகள்[தொகு]

மக்பூல் செர்வாணி நினைவாக, மக்பூல் செர்வாணி அரங்கம் என்ற பெயரில் ஓரு கலையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. பாரமுல்லாவில் உள்ள முகமது மக்பூல் செர்வாணி நினைவிடத்தில், காசுமீரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் அஞ்சலி செலுத்துகின்றனர்.[4][5][6][7] சம்மு மற்றும் காசுமீர் காலாட்படையின் தியாகத் தூண் நினைவுச்சின்னம் மக்பூல் செர்வாணியின் பெயரையும் கொண்டுள்ளது.[8] எழுத்தாளர் முல்க் ராச் ஆனந்த் தனது நாவலான ஒரு கதாநாயகனின் மரணம் என்ற நாவலில் மக்பூல் செர்வாணியின் கதையை எழுதினார்.[9] ஆனந்தின் நாவல் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியான மக்பூல் கி வாப்சியாக மாற்றப்பட்டது. இது 2011 ஆம் ஆண்டில் டிடி காசிர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.[10]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Choudhry, Shabir (2013-07-01) (in en). Tribal Invasion and Kashmir: Pakistani Attempts to Capture Kashmir in 1947, Division of Kashmir and Terrorism. AuthorHouse. பக். 59–60. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781481769808. https://books.google.com/books?id=_GTqy8SfmR4C. 
  2. 2.0 2.1 "Who changed the face of '47 war? - Times of India". பார்க்கப்பட்ட நாள் 2016-07-14.
  3. Chakravarty, Ipsita (2017-10-27). "The contested legacies of Maqbool Sherwani, the Kashmiri who stalled invaders in 1947". Scroll.in. பார்க்கப்பட்ட நாள் 2020-10-15.
  4. "J&K Guv Lays Wreath At War Memorial in Baramulla". Outlook Magazine. 2011-10-27. பார்க்கப்பட்ட நாள் 2020-10-15.
  5. "JKFFA pays tributes to Abdul Darji, Maqbool Sherwani". State Times. 2017-11-07. பார்க்கப்பட்ட நாள் 2020-10-15.
  6. "GANDERBAL STUDENTS VISITED JAK LI REGIMENTAL CENTRE : Valley News". valleynews.in. பார்க்கப்பட்ட நாள் 2020-10-15.
  7. "It's Been 70 Years Since Tribal Forces Poured Into Kashmir". Kashmir Observer. 2017-11-02. பார்க்கப்பட்ட நாள் 2020-10-15.
  8. "A Monument of Sacrifice". Daily Excelsior. 2019-07-20. பார்க்கப்பட்ட நாள் 2020-10-15.
  9. George, C. J. (1994-01-01) (in en). Mulk Raj Anand, His Art and Concerns: A Study of His Non-autobiographical Novels. Atlantic Publishers & Dist. பக். 129–130. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788171564453. https://books.google.com/books?id=M7LSHdlvRtcC. 
  10. ""Maqbool Ki Vaapsi" Title Song" (in ஆங்கிலம்). M S Azaad. Aug 28, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்பூல்_செர்வாணி&oldid=3837914" இலிருந்து மீள்விக்கப்பட்டது