போர்ட்டர் கந்தன்
போர்ட்டர் கந்தன் | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. வேம்பு |
தயாரிப்பு | வி. எல். நரசு நரசு ஸ்டூடியோஸ் |
கதை | கதை செங்கைய்யா |
இசை | விஸ்வநாதன்-ராமமூர்த்தி |
நடிப்பு | எம். கே. ராதா எம். கே. முஸ்தபா கே. துரைசாமி எஸ். வி. சுப்பையா நம்பியார் ஜி. வரலட்சுமி ஆர். லலிதா டி. பி. முத்துலட்சுமி |
வெளியீடு | ஏப்ரல் 14, 1955 |
நீளம் | 17126 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
போர்ட்டர் கந்தன் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வேம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, எம். கே. முஸ்தபா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
பாடல்கள்[தொகு]
திரைப்படத்துக்கு இசையமைத்தவர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இரட்டையர். பாடல்களை அ. மருதகாசி, அழ. வள்ளியப்பா, கா. தொ. சண்முகசுந்தரம் ஆகியோர் இயற்றினர். திருச்சி லோகநாதன், எஸ். சி. கிருஷ்ணன், செல்லமுத்து, மாதவன், வி. என். சுந்தரம், கண்டசாலா, ஜிக்கி, கே. ராணி, பேபி ராஜகுமாரி, கிருஷ்ணவேணி, பேபி ஜெயா ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]
எண். | பாடல் | பாடியவர்/கள் | பாடலாசிரியர் |
---|---|---|---|
1 | கொண்டாட்டம் கொண்டாட்டம் | திருச்சி லோகநாதன், எஸ். சி. கிருஷ்ணன் செல்லமுத்து, மாதவன் கே. ராணி |
அ. மருதகாசி |
2 | எழுதிச் செல்லும் விதியின் கை.. வருந்தாதே மனமே | எஸ். சி. கிருஷ்ணன் | |
3 | வினையா, விதியா, உலகின் சதியா | கண்டசாலா | |
4 | ஆதியாய் உலகுக்கெல்லாம் | வி. என். சுந்தரம் | அம்பிகாபதி |
5 | நல்ல நல்ல சேவை நாட்டுக்குத் தேவை | ஜிக்கி | அழ. வள்ளியப்பா |
6 | விடுமுறை, விடுமுறை, விடுமுறை | பேபி ராஜகுமாரி, கிருஷ்ணவேணி & பேபி ஜெயா |
கா. தொ. சண்முகசுந்தரம் |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-06-01 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170601132450/http://www.lakshmansruthi.com/cineprofiles/1955-cinedetails24.asp. பார்த்த நாள்: 2022-05-12.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 96.