போசோசு பட்டு அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போசோசு பட்டு அருங்காட்சியகம்
Bsous Silk Museum
متحف الحرير
The Silk Museum.jpg
1960ல் பட்டு அருங்காட்சியகம்
Map
அமைவிடம்போசோசு, ஆலெ மாவட்டம்
லெபனான் லெபனான்
வகைபட்டு
தலைமைஜியார்ஜ் & அலெக்சாண்ட்ரா ஆசுலே
வலைத்தளம்Official site

போசோசு பட்டு அருங்காட்சியகம் (Bsous Silk Museum)(அரபு மொழி: متحف الحرير بسوس‎) என்பது லெபனானின் வாடி சாகரோர் அருகே போசோசு நகரில் உள்ள பட்டு அருங்காட்சியகம் ஆகும். இது பெய்ரூட்ற்கு கிழக்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

இன்று அருங்காட்சியமாக உள்ள கட்டிடம் முதலில் ஃபயாத் குடும்பத்தினரால் கட்டப்பட்டது. 1901 முதல் 1954 வரை இது பட்டு தொழிற்சாலையாக இயங்கியது.[1] 1990ஆம் ஆண்டில், ஒரு குறுகிய காலத்திற்கு, தொழிற்சாலை மற்றும் மைதானம் சிரிய இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டன.[2] ஜீன் லூயிஸ் மாங்கே உதவியுடன் அதன் உரிமையாளர்களான ஜார்ஜ் மற்றும் அலெக்ஸாண்ட்ரா அஸ்ஸெய்லி ஆகியோரால் இது ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.[3] இந்த அருங்காட்சியகம் 2000ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. லெபனானில் 1,500 ஆண்டுகள் பழமையான பட்டு உற்பத்தியின் வரலாற்றை இந்த அருங்காட்சியகத்தில் உள்ள காட்சிகள் எடுத்துக்காட்டுகிறது. லெபனானின் பட்டு ஆலை 1970ஆம் ஆண்டு மூடப்பட்டது.[4]

பாரிஸைச் சேர்ந்த தியரி ஹுவா மற்றும் பிராங்கோயிஸ் லு நோபல் பிரிடின் ஆகியோர் தோட்டங்களைக் கட்டிடத்திற்கு மறுவடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தனர். லு நோபல் மடகாஸ்கரில் இருந்து காட்டுப் பட்டினைக் கொண்டுவந்தார், மோனா சதர் இசாவுடன் இணைந்து நினைவகம் மற்றும் மேம்பாட்டுச் சங்கத்தினை நிறுவ உதவினார்.[2] பிரான்சில் உள்ள செயிண்ட் ஜெர்மைன் என் லேயின் லைசீ அக்ரிகோல் மற்றும் ஹார்டிகோல் மற்றும் சங்கத்தின் மாணவர்கள் போசோசு கிராமத்திலும் பெய்ரூட்டைச் சுற்றியுள்ள பைன் காடுகளிலும் பல சுற்றுச்சூழல் திட்டங்களுக்குச் செயல்படுத்தினர்.[2] சாமி ஃபெகாலியின் நிர்வாகத்தின் கீழ் கட்டிடக் கலைஞர் ஜாக் அபோ கலீத், இக்கட்டிடத்தை ஒரு அருங்காட்சியகமாக மறுவடிவமைக்கப் பொறுப்பேற்றார்.[2]

கண்காட்சிகள்[தொகு]

பட்டு அருங்காட்சியகத்தில் நிரந்தர சேகரிப்பின் ஒரு பகுதியாகப் பட்டுப்புழுக்கள் உயிருடன் உள்ள பகுதியினை உள்ளடக்கியது.[5] கண்காட்சிகள் பட்டுப்புழு "குஞ்சு பொரிக்கும்" செயல்முறையை இங்கு நாம் காணலாம். இதனால் பட்டு நூல் உற்பத்திக்கு மற்றும் பல்வேறு நிலைகளில் நெசவு முறையினையும் பார்வையாளர்கள் காண வழிசெய்கிறது.[3] பாரம்பரியமாக லெபனான் மாலைநேர ஆடைகள் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இளவரசிகள் அணிந்திருந்த பட்டு கால்சட்டை போன்ற உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பட்டுத் தயாரிப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கிழக்கு பட்டு மற்றும் தங்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட தனிப்பிரிவும் உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டு[3] மற்றும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அலெப்போவின் பைகள் அன்டகி குடும்பத்தின் பொக்கிஷங்களை வைத்திருக்கும் ஒரு தனிப்பிரிவும் உள்ளது.[3] அருங்காட்சியகத்தினை காணவரும் பார்வையாளர்கள் பட்டு மற்றும் பட்டுப்புழு உற்பத்தியில் பணியாற்றும் விவசாயிகளின் படங்களையும் பார்க்கலாம்.[6]

இந்த அருங்காட்சியகம் தொடர்ந்து தற்காலிக கண்காட்சிகளையும் நடத்துகிறது. உதாரணமாக, கடந்த காலங்களில், இது மே முதல் அக்டோபர் வரை சுமார் 6 மாதங்களுக்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கம்போடியா, லாவோஸ் மற்றும் வியட்நாமில் இருந்து கைவினைப் பட்டுகள் மற்றும் நெசவு துணிகள், பட்டுப் பாதை சேகரிப்புகள் சீனா, யப்பான், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து காட்சிக்கு வைக்கப்பட்டன.[7] இங்கு எரிக் போடாட் மற்றும் தெரசா கோல்மேன் ஆகியோரின் பழங்குடி ஆடைகளின் தனியார் சேகரிப்பு கண்காட்சிகளும் நடைபெற்றுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Dalila Mahdawi (21 July 2008). "Bsous museum highlights Lebanon's history as major silk producer". The Daily Star. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 2.3 "Welcome to the Silk Museum and its Gardens". Discover Lebanon. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 3.2 3.3 "Silk Museum in Bsous". Army Magazine (Lebanon). No. 228 - June 2004. 2010-01-05 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
  4. Linda Dahdah (28 May 2004). "Bsous museum offers journey into Lebanon's silk heritage". 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Books: Maya Zankoul". Time Out Beirut. Issue no. 14. 2013-12-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-01-05 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
  6. Nicolas Tohme (11 May 2009). "Museum salutes the image of the silk industry extinct in Lebanon". Al Jazeera. 2010-01-07 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Exhibitions". The Silk Museum. 2016-03-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-05 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]