பொப் டெய்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொப் டெய்லர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பொப் டெய்லர்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பங்குகுச்சக்காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 449)பிப்ரவரி 25 1971 எ நியூசிலாந்து
கடைசித் தேர்வுமார்ச்சு 24 1984 எ பாக்கித்தான்
ஒநாப அறிமுகம் (தொப்பி 25)செப்டம்பர் 5 1973 எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாபபிப்ரவரி 25 1984 எ நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 57 27 639 333
ஓட்டங்கள் 1,156 130 12,065 2,227
மட்டையாட்ட சராசரி 16.28 13.00 16.92 14.84
100கள்/50கள் 0/3 0/0 1/23 0/1
அதியுயர் ஓட்டம் 97 26* 100 53*
வீசிய பந்துகள் 12 0 117 0
வீழ்த்தல்கள் 0 1
பந்துவீச்சு சராசரி 75.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 1/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
167/7 26/6 1473/176 345/75
மூலம்: கிரிக்இன்ஃபோ, நவம்பர் 17 2008

பொப் டெய்லர் (Bob Taylor, பிறப்பு: சூலை 17 1941), இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 57 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 1,156 ஓட்டங்களை எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 97 ஓடங்களை எடுத்துள்ளார். 27 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 130 ஓட்டங்களையும் அதிகபட்சமாக இறுத்வரை ஆட்டமிழக்காமல் 26* ஓட்டங்களையும் எடுத்துள்ள இவர் 639 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 12,065 ஓட்டங்களாஇயும் எடுத்துள்ளார். 333 பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1971 - 1984 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெற்றிகரமான ஆஷஸ் வென்ற சுற்றுப்பயணத்தின் முடிவில் டெய்லர் 1971 இல் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். மிகவும் மதிக்கப்படுபடும் துடுப்பாட்ட வீரராக இருந்தபோதிலும் சிறந்த இழப்பு கவனிப்பாளர் மற்றும் சிறந்த மட்டையாளரான அலன் நொட்டின் இடத்தினை இவரால் நிரப்ப இயலவில்லை. 1977 ஆம் ஆண்டில் நாட் உலகத் தொடர் துடுப்பாட்ட த்தில் சேர்ந்தபோதுதான் டெய்லர் அதிக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 1977 ஆம் ஆண்டின் சிறந்த விசுடன் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1970 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளின் இழப்புக் கவனிப்பாளராகத் தேர்வானார். 1978-79 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆஷஸ் துடுப்பாட்டத் தொடரோடு இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் 1988 ஆம் ஆண்டில் அனைத்து முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வினை அறிவித்தார்.[1]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

டெய்லர் ஸ்டாஃபோர்ட்ஷையரின் ஸ்டோக்-ஆன்-ட்ரெண்டில் பிறந்தார். 12 வயதிற்குட்பட்ட மற்றும் 15 வயதிற்குட்பட்ட தனது பள்ளித் துடுப்பாட்ட அணிக்காக விளையாடுவதற்கு முன்பு, ஸ்டோக் சிட்டி கால்பந்து சங்க அணியின் மைதானத்திற்கு அடுத்த ஒரு கார் பூங்காவில் இவர் ஆரம்பத்தில் துடுப்பாட்டம் விளையாடத் தொடங்கினார். இவர் போர்ட் வேல் எஃப்சியின் ஒரு பயிற்சி பெறும் நபராக இருந்தார், இருப்பினும் இவர் ஒருபோதும் தொழில் ரீதியாக கால்பந்து விளையாடியதில்லை. [2] 15 வயதில் இவர் தெற்கு செஷயர் லீக்கில் பிக்னால் எண்ட் துடுப்பாட்ட சங்க அணிக்காக மற்றும் மைனர் கவுன்டிஸ் துடுப்பாட்ட லீக்கில் ஸ்டாஃபோர்ட்ஷையர் துடுப்பாட்ட அணிக்காகவும் துடுப்பாட்டம் விளையாடினார். அறிமுகமானபோது இவர் இளமையாக இருந்ததால் பார்வையாளர்கள் இவர் துடுப்பாட்ட வீரர் என்பதில் குழப்பமடைந்தார். [3] இவர் 1958 முதல் 1960 வரை ஸ்டாஃபோர்ட்ஷையர் துடுப்பாட்ட அணிக்காக தொடர்ந்து விளையாடினார், அதன்பிறகு இவர் டெர்பிஷையருக்குச் சென்று டெர்பிஷைர் கவுண்டி துடுப்பாட்ட சங்க அணிக்காக இரண்டாவது லெவன் அணியில் சேர்ந்தார். [4]

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

எம்.சி.சி உடனான இவரது அனுபவத்துடனும், இழப்புக் கவனிப்பாளராக இவர் சிறப்பாக செயல்பட்டதாலும் டெய்லர் இங்கிலாந்து கேப்டன் ரே இலிங்வர்த்தின் கவனத்தினை ஈர்த்தார். நாட் ஓய்வு பெற்ற பிறகு இவர் தேர்வுத் துடுப்பாட்ட வீரராகத் தேர்வானார். [5] டெய்லர் பிப்ரவரி 25, 1971 அன்று கிறிஸ்ட்சர்ச்சில் நியூசிலாந்திற்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். அதில் சிறப்பாக விளையாடி ஒரு ஸ்டம்பிங் மற்றும் இரண்டு பிடிபடுதலைப் பிடித்தார். மட்டையாட்டத்தில் 4 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 8 இழப்புகளில் வெற்றி பெற்றது.[6]

சான்றுகள்[தொகு]

  1. Andrew McGlashan and Brydon Coverdale (8 May 2008). "Welcome back, we weren't expecting you". CricInfo. http://www.cricinfo.com/magazine/content/story/350260.html. 
  2. Sherwin. The Port Vale Miscellany. The History Press. பக். 19. 
  3. "Bob Taylor – Wisden Cricketer of the Year". 1977. http://www.cricinfo.com/ci/content/story/154501.html. 
  4. "Teams Bob Taylor played for". Cricket Archive. https://cricketarchive.com/Archive/Players/1/1376/all_teams.html. 
  5. Thicknesse, John (October 2004). "Player Profile: Bob Taylor". CricInfo. http://www.cricinfo.com/ci/content/player/21494.html. 
  6. "England in New Zealand Test Series – 1st Test New Zealand v England". CricInfo. http://www.cricinfo.com/ci/engine/match/63071.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொப்_டெய்லர்&oldid=3007148" இருந்து மீள்விக்கப்பட்டது