பொக்சிங் நாள்
பாக்சிங் நாள் | |
---|---|
கடைபிடிப்போர் | இன்றைய மற்றும் முந்தைய பொதுநலவாய நாடுகளில் சிலவற்றில் |
வகை | வங்கி விடுமுறை / பொது விடுமுறை |
நாள் | 26 திசம்பர் |
தொடர்புடையன | புனித இசுடீபன் நாள் |
பாக்சிங் நாள் (Boxing Day), அல்லது பொக்சிங் நாள் திசம்பர் 26 அல்லது தேசிய / வட்டார சட்டங்களுக்கிணங்க கிறித்துமசு நாளுக்கு அடுத்த முதல் அல்லது இரண்டாவது வேலைநாள் அன்று வழங்கப்படும் வங்கி விடுமுறை நாள் அல்லது பொது விடுமுறை நாள் ஆகும். இந்த விடுமுறை பெரிய பிரித்தானியா, ஆத்திரேலியா, கனடா, நியூசிலாந்து, மற்றும் வேறுசில பொதுநலவாய நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது.
ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில் ஒரே சட்டத்தின் கீழ் - வங்கி விடுமுறைகள் சட்டம் 1871- இந்த விடுமுறை வழங்கப்பட்டாலும் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, வேல்சு அடங்கிய பெரிய பிரித்தானியாவில் கிறித்துமசிற்கு அடுத்த நாள் பாக்சிங் நாள் என அழைக்கப்பட்டாலும் அயர்லாந்தில் இது புனித ஸ்டீபன் விருந்து நாளாக வரையறுக்கப்பட்டுள்ளது[1]. வட அயர்லாந்தில் மட்டுமே திசம்பர் 26க்கு மாற்றாக மாற்று வங்கி விடுமுறை விடப்படக்கூடும்; இது புனித ஸ்டீபன் நாளை பாக்சிங் நாளைப் போலன்றி தானாக அடுத்த திங்கட்கிழமைக்கு மாற்றவியலாது என்ற சட்டச்சிக்கலைத் தவிர்ப்பதற்காக இவ்வாறு உள்ளது.
அயர்லாந்தில் இது புனித ஸ்டீபன் நாளாக (ஐரிய மொழி: Lá Fhéile Stiofáin) அல்லது ரென்னின் நாளாக (ஐரிய மொழி:Lá an Dreoilín}}) என அழைக்கப்படுகின்றது.
தென் ஆபிரிக்காவில், பாக்சிங் நாள் 1994ஆம் ஆண்டு முதல் நன்மதிப்பு நாளாக பெயரிடப்பட்டுள்ளது. நெதர்லாந்து, லித்துவேனியா, ஆஸ்திரியா, செருமனி, எசுக்காண்டினாவியா மற்றும் போலந்தில் திசம்பர் 26 இரண்டாம் கிறித்துமசு நாளாகக் கொண்டாடப்படுகிறது.[2]
கனடாவில் திசம்பர் 26 பாகசிங் நாளாக அறிவிக்கப்பட்டு அன்று அனைத்து தொழிலாளர்களும் ஊதியத்துடன் விடுமுறை பெறுமாறு கூட்டமைப்பு சட்டபூர்வ விடுமுறையாக வரையறுக்கப்பட்டுள்ளது.[3]
பெயர்க்காரணம்
[தொகு]இந்த விடுமுறைக்கு எவ்வாறு "பொக்சிங்" (பெட்டி) என்ற பெயர் எழுந்தது என்பது குறித்த தெளிவில்லாதபோதும் பல ஊகங்கள் வழங்கப்படுகின்றன [4] கிறித்துமசு வழமையாக தேவையுற்றோருக்கு பணமும் பரிசுகளும் வழங்குவது பழங்காலம் முதல் நடப்பில் உள்ளது. ரோமன்/துவக்க கிறித்தவ காலங்களிலிருந்தே தேவாலயங்களுக்கு வெளியே வைக்கப்படும் உலோக பெட்டிகளில் (தமிழக வழக்கு:உண்டியல்) புனித ஸ்டீபன் விருந்து பங்களிப்புகளாக இவற்றை சேகரிப்பது வழக்கமாக இருந்துள்ளதாகத் தெரிகிறது.[5]
ஐக்கிய இராச்சியத்தில் கிறித்துமசு நாளை அடுத்த பணிநாளில் தாங்கள் ஆண்டு முழுமையும் செய்த சேவைகளுக்காக பணியாளர்கள் பணம் அல்லது பரிசுப்பொருள் அடங்கிய கிறித்துமசுப் பெட்டிகளை பெறுவது வழமையாக இருந்தது.[6][7] தங்கள் முதலாளிகளின் கிறித்துமசு நன்றாக கழிந்தமைக்காக அவர்களது ஊழியர்கள் திசம்பர் 26 அன்று விடுமுறை எடுத்துக்கொண்டு தங்கள் குடும்பத்தினரைக் காண அனுமதிக்கப்பட்டனர்.முதலாளிகள் அப்போது அவர்களுக்கு பரிசுகளையும் பணம் மற்றும் (சில நேரங்களில் மீந்த விருந்து உணவையும்) ஒரு பெட்டியில் கொடுத்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Directgov. "Bank Holidays and British Summertime". பார்க்கப்பட்ட நாள் 17 December 2009.
- ↑ Second Christmas Day
- ↑ "Public holidays in Canada". Canadian Heritage. பார்க்கப்பட்ட நாள் 26 December 2010.
- ↑ Boxing Day. Snopes.com.
- ↑ Collins, 2003, p. 38.
- ↑ Encyclopedia Britannica, 1953 "Boxing day"
- ↑ "Saturday 19 December 1663 (Pepys' Diary)". Pepysdiary.com. பார்க்கப்பட்ட நாள் 26 December 2010.