பைலான் கானாங்கோழி
பைலான் கானாங்கோழி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Kingdom: | விலங்கு |
Phylum: | முதுகுநாணி |
Order: | நாரை |
Family: | இராலிடே |
Genus: | Zapornia |
இனம்: | Z. pusilla |
இருசொற் பெயரீடு | |
Zapornia pusilla (பல்லாசு, 1776) | |
![]() | |
Range of Z. pusilla Breeding Resident Non-breeding | |
வேறு பெயர்கள் | |
Porzana pusilla |
பைலான் கானாங்கோழி [Baillon's crake (Zapornia pusilla)] என்பது ராலிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறு நீர்ப்பறவை. இது உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகின்றது. இந்த கானாங்கோழி இனத்திற்கு பிரென்சு இயற்கை ஆர்வலர் லூயி பைலானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
உடலமைப்பு[தொகு]

இக் கானாங்கோழி காடைகளைச் சற்று பெரிய, நாகணவாயை விட சிறியது. நீளம் -- 17 முதல் 19 cm[2]. மேற்பாகம் நல்ல செம்பழுப்பு நிறம்: அதில் ஆங்காங்கு கருங்கீற்றுகளும் பின்பகுதியில் வெண்புள்ளிகளும் காணப்படும். அடிப்பாகம் வெளிர் நிறம்; மங்கலான பச்சை நிறத்தில் அலகும் கால்களும் இருக்கும்[3]. பெண், ஆண் பெரும்பாலும் ஒரே மாதிரி இருப்பினும், பெண் கோழியின் கண்ணிற்குப் பின் செம்பழுப்பு நிறப் பட்டை இருக்கும்.
பரவலும் வாழ்விடமும்[தொகு]
பரவல்[தொகு]
வட அமெரிக்க, தென் அமெரிக்கக் கண்டங்கள், வட/வட மேற்கு ஆப்பிரிக்கா, ரஷ்யா, ஸ்காண்டினேவியா உள்ளிட்ட சில பகுதிகள் நீங்கலாக உலகின் பல்வேறு இடங்களிலும் இவை காணப்படுகின்றன[4]. மத்திய இந்தியா, வடமேற்கு இந்தியா நீங்கலாக இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இக்கானாங்கோழிகள் தென்படுகின்றன. தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இவை அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இவற்றின் எண்ணிக்கையும் பதிவு செய்யப்படும் நெருக்கமும் குறைவாகவே உள்ளன.
வாழ்விடம்[தொகு]
இடம்பெயர்வும் வலசையும்[தொகு]
ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்திய துணைக் கண்டத்தில் உள்ள பைலான் கானாங்கோழியின் திரள்கள் அங்கேயே வசிப்பவையாக இருந்தாலும் அருகிலிருக்கும் பகுதிகளுக்கு அவை வலசை செல்கின்றன. ஐரோப்பாவிலும் வடக்கு மற்றும் மத்திய ஆசியாவிலும் இருக்கும் கானாங்கோழித் திரள்கள் முழுமையாக வலசை செல்பவை[5].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ BirdLife International (2012). "Zapornia pusilla". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22692667/0. பார்த்த நாள்: 2 June 2015.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).