பைஜ்நாத் கோயில்
பைஜ்நாத் கோயில் | |
---|---|
இமாச்சலப் பிரதேசத்தில் அமைவிடம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம்: | காங்ரா |
ஆள்கூறுகள்: | 32°05′01″N 76°57′59″E / 32.08361°N 76.96639°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | Nagara style |
வரலாறு | |
அமைத்தவர்: | அகுகா - மன்யுகா |
இணையதளம்: | https://bababaijnath.in/ |
பைஜ்நாத் கோயில் (Baijnath Temple) என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தில் அமைந்துள்ள பைஜ்நாத் என்னும் ஒரு சிறிய நகரத்தில் அமைந்துள்ள நாகரா பாணி இந்துக் கோயில் ஆகும். இது 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (கி.பி. 1204 ) இரண்டு உள்ளூர் வணிகர்களான அகுகா, மன்யுகா என்பவர்களால் இக்கோயில் கட்டப்பட்டது . இங்கு சிவன் வைத்தியநாதர் என்ற பெயரில் உள்ளார். [1] இன்றைய பைஜ்நாத் கோயில் அமைப்பில் உள்ள கல்வெட்டுகளின்படி, தற்போதைய கோயில் கட்டடம் கட்டப்படுவதற்கு முன்பு இங்கு ஒரு சிவன் கோயில் இருந்துள்ளது. கருவறையில் சிவலிங்கம் உள்ளது. மேலும் சுவர்களிலும் வெளிப்புறத்திலும் முக்கிய இடங்களில் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
தொல்லியல்
[தொகு]பிரதான மண்டபத்தில் உள்ள கல் பலகைகளில் இரண்டு நீண்ட கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த கல்வெட்டுகள் சமசுகிருதத்தில் சாரதா எழுத்துக்களையும், உள்ளூர் பகாரி மொழியை தக்கிரி எழுத்துக்களையும் பயன்படுத்தி செதுக்கப்பட்டுள்ளன. இந்த கல்வெட்டுகளில் எட்டாம் நூற்றாண்டில் இந்திய தேசிய நாட்காட்டியில் (சக) வணிகர்களான மன்யுகா, அகுகா ஆகியோரால் கோயில் கட்டப்பட்டது பற்றிய விவரங்கள் உள்ளளன. [2] இந்தக் கல்வெட்டுகள் சிவனைப் போற்றுவது மட்டும் அல்லாமல், அப்போதைய ஆட்சியாளரான ஜெய சந்திரனின் பெயரையும், கட்டடக் கலைஞர்களின் பெயர்களையும், கட்டுமானத்தின் போது நன்கொடை வழங்கிய வணிகர்களின் பெயர்களையும் குறிப்பிடுகின்றன. மற்றொரு கல்வெட்டு காங்கரா மாவட்டத்தின் பழைய பெயரான நகரகோட் என்பதைக் குறிப்பிடுகிறது.
சிற்பங்கள்
[தொகு]கோயிலின் சுவர்களில் எண்ணற்ற சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில தற்போதைய கோவிலுக்கு முற்காலத்தவை. சிலைகளில் பின்வருவன அடங்கும்: பிள்ளையார், மாலொருபாகன் (பாதி விஷ்ணு, பாதி சிவன்), கல்யாணசுந்தரர் (சிவன், பார்வதியின் திருமணம்), சிவனால் அசுரன் அந்தகாசூரன் தோற்கடிக்கபடுதல்.
காட்சியகம்
[தொகு]-
தோட்டமும் நுழைவாயிலும்
-
கோயிலின் குவிமாடத்தின் நெருக்கமான தோற்றம்
-
சிவலிங்கம்
-
நுழைவாயிலின் மற்றொரு படம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cradling beauty" இம் மூலத்தில் இருந்து 2011-06-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110606111514/http://www.hinduonnet.com/businessline/2001/08/27/stories/102772a5.htm.
- ↑ "Archaeological Survey of India Dehradun Circle -Bageshwar". பார்க்கப்பட்ட நாள் 2021-03-10.