பேரி மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பேரி மண்டலத்தின் மாவட்டங்கள்

பேரி மண்டலம் (Bheri zone) (நேபாளி: भेरी अञ्चलAbout this soundகேட்க ) தெற்காசியாவின் நேபாள நாட்டின் பதினான்கு மண்டலங்களில் ஒன்றாகும். இம்மண்டலம் மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில் அமைந்துள்ளது. பேரி மண்டலத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் நேபாள்கஞ்ச் ஆகும்.

மாவட்டங்கள்[தொகு]

இம்மண்டலத்தில் ஐந்து மாவட்டங்கள் அமைந்துள்ளது. பேரி மண்டலத்தின் வெளித் தராய் சமவெளியில் பாங்கே மற்றும் பர்தியா மாவட்டங்களும், உள் தராய் சமவெளியில் சுர்க்கேத் மாவட்டமும், வடக்கின் குன்றுப் பகுதிகளில் தைலேக் மற்றும் ஜாஜர்கோட் மாவட்டங்களும் உள்ளது.

நகரங்கள்[தொகு]

பேரி மண்டலத்தின் மலைப்பாங்கானப் பகுதிகளில் அமைந்த நாராயண், ஜாஜர்கோட் மற்றும் சிஞ்சு, இந்திரப்பூர் சிறுநகரங்களும் உள் மற்றும் வெளித் தராய் சமவெளிகளில் நேபாள்கஞ்ச், குலாரியா, கோஹல்பூர் மற்றும் பீரேந்திரநகர் நகரங்களும் அமைந்துள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பேரி மண்டலத்தின் மக்கள் தொகை 17,01,767 ஆகும். [1] இங்கு அவதி மொழி, நேபாளி மொழி, உருது, நேவாரி மொழி மற்றும் பழங்குடி மலைவாழ் மக்கள் மொழிகளும் பேசப்படுகிறது. இம்மண்டலத்தில் பஹூன் இன மக்கள், சத்திரிய இன மக்கள், மகர் மக்கள், நேவார் மக்கள், தாரு மக்கள், சுன்னார் மக்கள் மற்றும் காமி இன மக்கள் உள்ளனர். இந்து சமயம், பௌத்தம் மற்றும் இசுலாமிய சமயம் இங்கு பின்பற்றப்படுகிறது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]

பேரி மண்டலத்தின் தெற்கில் இந்தியா எல்லையாக அமைந்துள்ளது. பேரி மண்டலம், தராய் சமவெயில் 124 மீட்டர் உயரத்திலிருந்து வடக்கே மலைப்பாங்கான பகுதிகளில் 5,000 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மண்டலத்தின் தட்ப வெப்பம் கீழ் வெப்ப மண்டலம், மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை என நான்கு நிலைகளில் காணப்படுகிறது. [2] சிவாலிக் மலைகளில் அமைந்த பர்தியா தேசியப் பூங்கா 968 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இம்மண்டலத்தின் பர்தியா மாவட்டத்தில் கர்னாலி ஆறு பாய்கிறது. இவ்வாற்றில் காணப்படும் அரிய மீன் டால்பின்கள் அழிவின் விளிம்பு நிலையில் உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

ஆள்கூறுகள்: 28°30′N 81°35′E / 28.500°N 81.583°E / 28.500; 81.583

  1. Nepal - General Information
  2. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system, Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:87-7903-210-9, http://curis.ku.dk/ws/files/20497354/de2_001.pdf, பார்த்த நாள்: Nov 22, 2013 
  3. "River dolphins under threat in Nepal". WWF. 26 May 2006. http://www.wwfnepal.org/?70540/river-dolphins-under-threat-in-nepal. பார்த்த நாள்: 26 May 2006. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரி_மண்டலம்&oldid=2170346" இருந்து மீள்விக்கப்பட்டது