பேச்சு:2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@Dineshkumar Ponnusamy: 2017 ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் என தலைப்பிட பரிந்துரைக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:47, 18 சனவரி 2017 (UTC)

சல்லி என்றால் பணம், விடலைத்தனம். பண முடிப்பை காளையின் கமுத்தில் கட்டுவதை எண்ணுங்கள்.(எ. கா. சல்லி பைசாவுக்கு பலன் இல்லை; இந்த பொண்ணுங்க, இப்ப சல்லி பசங்களை தான், நம்புறாங்க!) ஏறுதழுவுதல் என்று இலக்கியங்கள் கூறுகின்றன. தவறான சொல்லை, தமிழரல்லாதவர் பயன்படுத்தலாம். நாமே நமது கலாச்சாரத்தை மறக்கலாமா? சில மணிநேரம் பக்கத்து கிராமத்தில் நடந்த சல்லிக்கட்டையும், அதில் எங்களது கருப்பனின் துள்ளலையும் நிகழ்படமாக இணைப்பேன். இன்று இரண்டு மணி நேரத்திற்கு முன் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் 250 நண்பர்களுடன் காவலர் ஒப்புதலுடன் அறப்போரட்டம்/விழப்புணர்வு முழக்கம் செய்தோம். அதையும் இணைப்பேன். எந்த அரசியல் கட்சியையும் உடன் அனுமதிக்க வில்லை. ஆனந்த விகடனில் அவ்வபோது இதற்கென தனிப்பக்கத்தில் செய்திகள், இணையத்தில் இற்றைப்படுத்தப்படுகன்றன--உழவன் (உரை) 09:17, 18 சனவரி 2017 (UTC)

@Info-farmer: தலைப்பினை சல்லிக்கட்டு என மாற்றி எழுத வேண்டும் என்பது தங்களின் பரிந்துரையா? அவ்விதம் மாற்ற எனக்கும் சம்மதமே. நகர்த்திவிடுங்கள்.கட்டுரையை விரிவுபடுத்தி உதவுங்கள்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:51, 18 சனவரி 2017 (UTC)

Yes check.svgY ஆயிற்று --Surya Prakash.S.A. (பேச்சு) 12:41, 19 சனவரி 2017 (UTC)

சென்னை தவிர்த்து, பிற இடங்களில் நடக்கும் போராட்டங்கள் குறித்த ஒளிப்படங்கள் தேவை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:53, 21 சனவரி 2017 (UTC)

தொடருந்து மறியல் இரண்டு இடங்களில் பெரிய அளவில் நடந்தது. 1. மதுரை 2. சேலம்-விருதாச்சலம் தொடருந்து வழி. சேலத்தில் நடந்ததை நிகழ்படமாக எனது நண்பர் எடுத்து உள்ளார். தொகுத்தல் பணி முடிந்தது பதிவேற்றுகிறேன். ஏற்கனவே, குறிப்பிட்ட படி, காவலர்களுக்கு போக்கு காட்டி சில நாட்களுக்கு முன் நடத்திய மஞ்சுவிரட்டு நிகழ்படங்களையும் தொகுத்து அளிக்கிறேன்.--உழவன் (உரை) 16:58, 21 சனவரி 2017 (UTC)

கருத்து[தொகு]

தமிழக அரசின் மறைமுக செயல்கள் எனும் துணைத் தலைப்பின்கீழ் உள்ள தகவல்கள், தேவையற்றதும் பொருத்தமற்றதும் ஆகும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:13, 21 சனவரி 2017 (UTC)

உரிய சான்றுகள் இல்லாத அனுமானச் செய்திகளை தவிர்க்க வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:41, 22 சனவரி 2017 (UTC)

நீக்கி விடுங்கள்.--Kanags \உரையாடுக 02:43, 22 சனவரி 2017 (UTC)

ஐயம்...[தொகு]

பகுப்பு:மரநாய் சொற்களால் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் என்பது இக்கட்டுரையின் பக்கத்தில் தோன்றுகிறது. இது எதைக் குறிக்கிறது? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:14, 22 சனவரி 2017 (UTC)

பீட்டா இராதாராஜன்[தொகு]

திருமதி இராதாராஜன் அவர்கள் பீட்டா உறுப்பினரோ ஆதரவாளரோ கிடையாது[1]. மேலும் அவர் இந்திய விலங்கு நல வாரியத்தைச் சேர்ந்தவரோ, வேறு எந்த அமைப்பைச் சேர்ந்தவரோ கிடையாது. அவர் விலங்கு நல ஆர்வலர் மற்றும் தீவிர இந்துத்துவா ஆதரவாளர்கள்[2].

"நடுவண்/மத்திய அரசு" -> "ஒன்றிய அரசு"[தொகு]

இக்கட்டுரையில் இந்திய நாட்டின் ஒன்றிய அசினை (Union Govt) நடுவண்/மத்திய அரசு (Central Govt) என குறிப்பிட்டிருந்தனர். இந்திய அரசமைப்புச்சட்டமானது இந்தியாவை "ஒன்றியம்" என்றே அழைக்கிறது, அதுபோல அரசையும் ஒன்றிய அரசு, மாநில அரசு என்றே குறிப்பிடுகிறது. மேலும், இந்திய அரசானது பண்புரீதியாகவும் ஒரு "ஒன்றிய அரசே". ஆதலால், "நடுவண்/மத்திய அரசு" என வரும் இடங்களை "ஒன்றிய அரசு" என மாற்றியுள்ளேன் - பத்மாக்சி (உரையாடுக) 11:42, 24 சூன் 2017 (IST)

  1. https://twitter.com/PetaIndia/status/822744884012580865
  2. https://www.youtube.com/watch?v=h9QgmlwhQhA