உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மீட்டர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதன் சரியான எழுத்து வடிவம் மீற்றர் என்பதகும் என்பத்து என் தாழ்மையான கருத்து. .இப்பக்கத்தை மீற்றர் என நகர்த்த முன்மொழிகிறேன்.ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் தெரிவிக்கவும். --டெரன்ஸ் 03:34, 13 ஜூன் 2006 (UTC)

தமிழில் மீற்றர் என எழுதினால் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் Mee-tr-tr-ar எனப் பலுக்குவர் (உச்சரிப்பார்கள்). மீட்டர் என எழுதினால் இலங்கைத் தமிழர்கள் எப்படிப்பலுக்குவார்கள் என்று ஆங்கில எழுத்தில் எழுதிக்காட்டுங்கள். --C.R.Selvakumar 04:06, 13 ஜூன் 2006 (UTC)செல்வா

முதல் உங்கள் கேள்விக்கான பதில்: mee-t(r)-rar இவ்விடயம் தொடர்பில் பல இணையதளங்களை பார்வையிட்டேன்

மேலும் யாகூ போன்ற தேடல் தளத்துக்கு சென்று மீட்டர்,மீற்றர் என்றசொற்களை தேடினால் இரண்டு சொற்களுக்குமே பல உதரணங்களை காணலாம். எனவே இப்போது இக்கட்டுரையை மாற்றாது.மீற்றர் என புது கட்டுரையை தொடங்கி அதில் மீட்டர் கட்டுரைக்கு இணைப்பையும் இச்சொற்கள் தொடர்பான விளக்கத்தையும் கொடுக்கலாம் என நினைக்கிறேன்.

--டெரன்ஸ் 04:33, 15 ஜூன் 2006 (UTC)\பேச்சு


இது பலமுறை தமிழ்நாட்டுத் தமிழர்களும், இலங்கைத் தமிழர்களும் பலவாறு கலந்துரையாடிய தலைப்பு. நானும் 20 ஆண்டுகளாக இங்கே கனடாவிலே நூற்றுக்கணக்கான இலங்கைத் தமிழர்களிடையே இது பற்றி உரையாடி களைத்து இருக்கிறேன் என்றே சொல்லாம். அறிவின் அடிப்படையில் கருத்துக்களை முன் வைத்தால் மிகத் தெளிவாக இக்குழபத்தை தீர்த்து விடலாம். ஒரு பொதுவான பயன்பாட்டிற்கு உள்ளதில் ஏரண (logical) முறைப்படி நிறுவுவதுதான் முறை என்பது என் முவைப்பு. என் கேள்விக்கு உங்கல் விடை தெளிவாக காட்டுகிறது என்ன குழப்பம் என்று. தமிழில் மீட்டர் என்று எழுதினால், இலங்கைத் தமிழர் எப்படி பலுக்குவார்கள் (உச்சரிப்பார்கள்)? ஆங்கிலத்தில் எழுதிக் காடட முடியுமா? ஏன் மீட்டர் என்று எழுதுவதை எதிர்க்கிறீர்கள்? இதே போல Gate, City என்பதை கேட், சிட்டி என்று எழுதினால் இலங்கைத் தமிழர்கள் எவ்வாறு பலுக்குவார்கள்? இவைகளை கேற், சிற்ரி என்று எழுதினால், 60 மில்லியன் தமிழர்கள் GaTR, ciTRi பலுக்குவார்கள். இவை முற்றிலும் தவறான ஒலிப்புகளாயிற்றே! ஒருக்கால் கேட், சிட்டி என்பதை இலங்கைத் தமிழர்கள் வேறு விதமாக பலுக்குவார்கள் எனில், ஓரளவிற்கேனும் விளங்கிக்கொள்ள இயலும். இது முற்றிலும் தேவையே இல்லாத குழப்பம். இலங்கைத் தமிழர்கள் ரகரத்தை மெல்லிய நுனி நாக்கு டகரம் போல் ஒலிக்கிறார்கள் என்பதை அறிவேன். ஆனால் அதல்ல என் குழப்பம். டகரத்தை எப்படி இலங்கைத் தமிழர்கள் பலுக்குகிறார்கள்? விடை பகர வேண்டுகிறேன். நன்றி--C.R.Selvakumar 04:58, 15 ஜூன் 2006 (UTC)செல்வா

ஆம். இந்த கேள்விக்கு இலங்கைத் தமிழர் தயவு செய்து தங்கள் பதிலைக் கூறுங்கள். இதேபோல் june போன்ற ஆங்கிலச் சொற்களுக்கான எழுத்துப்பெயர்ப்பு தமிழ் நாட்டில் ஜூன் என்று வழங்குவர், இலங்கையில் யூன் என்று வழங்குகிறீர்கள். பல ஜெர்மனிய பிறப்புக் கொண்ட சொற்களிலும் பிரெஞ்சு பிறப்புக் கொண்ட சொற்களிலும் இது பொருந்தும். ஒருவேளை இங்கு புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் பெற்ற அனுபவத்தால் 'j' என்ற எழுத்தில் துவங்கும் எல்லா ஆங்கிலச் சொற்களுக்குமே இவ்வழக்கு ஏற்பட்டு விட்டதோ எனத் தோன்றுகிறது. இலங்கைத் தமிழ் தமிழ் நாட்டுத் தமிழ் எனப் பாராமல், செல்வா குறிப்பிட்டுள்ளதுபோல் எப்பயன்பாடு பெரும்பாலான தமிழர்களுக்கு விளங்கக் கூடியது என்றும் எது ஒலிப்பியல் அடிப்படையில் சரியானது என்றும் பார்க்க வேண்டும் என்பது என் கருத்து. -- Sundar \பேச்சு 07:20, 15 ஜூன் 2006 (UTC)
மேலும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் எந்த வழக்கைப் பயன்படுத்தினாலும் அடைப்புக்குறிகளுக்கிடையே மற்ற வழக்கையும் தரலாம். தவிர, தலைப்புகளில் இக்கேள்வி எழும்போது மற்ற வழக்கிலிருந்து வழிமாற்றம் செய்யலாம். -- Sundar \பேச்சு 07:24, 15 ஜூன் 2006 (UTC)
காலாகாலமாக பழக்கத்திலிருக்கும் இந்த வழக்கை மாற்றுவது கடினம், அத்துடன் ஈழத்தமிழர்களால் பல்லாண்டுகளாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நடைமுறைக்கு விளக்கம் கேட்பதும் சரியல்ல. என்னைப் பொருத்த வரையில் மீற்றர் சரியெனப்படுகிறது:-). சுந்தர் சொல்வதுபோல், //ஒரு குறிப்பிட்ட இடத்தில் எந்த வழக்கைப் பயன்படுத்தினாலும் அடைப்புக்குறிகளுக்கிடையே மற்ற வழக்கையும் தரலாம். தவிர, தலைப்புகளில் இக்கேள்வி எழும்போது மற்ற வழக்கிலிருந்து வழிமாற்றம் செய்யலாம்.// இதனையே நானும் பரிந்துரைக்கிறேன்.--Kanags 08:36, 15 ஜூன் 2006 (UTC)


அடைப்புக்குறிக்குள் மாற்று எழுத்துக்கூட்டலை தருவதும் பக்கங்களை வழி மாற்றி விடுவதும் ஏற்கத்தக்கது தான். ஆனால், அடுத்த கட்ட குழப்பம் ஒன்று உள்ளது. எந்த வழக்கை முதன்மையாக பயன்படுத்துவது என்பது? பெரும்பான்மை தமிழ் நாட்டுத் தமிழர்களின் வழக்கைப் பயன்படுத்டுவது தர்க்கமாகத் தோன்றினாலும், அது விக்கிபீடியா போன்ற கூட்டு முயற்சிகளில், அருமையான பங்களிப்புகளைத் தந்து கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களின் விருப்பங்களை இரண்டாம் பட்சம் ஆக்குவது போன்றதாகி விடும். நீண்ட கால நோக்கில் விக்கிபீடியாவின் வளர்ச்சிக்கும் ஏற்புக்கும் அது உகந்தது அல்ல. இந்த விடயத்தில் முதலில் கட்டுரை எழுதுபவரின் எழுத்துக்கூட்டலுக்கு மதிப்புக் கொடுத்து அடுத்து அக்கட்டுரையை திருத்துபவர் அவர் விரும்பும் எழுத்துக்கூட்டலை அடைப்புக்குறிக்குள் தரலாம். வழிமாற்றுக்கும் இதே விதியை கொண்டு வரலாம். இதனால், தான் விரும்பும் எழுத்துக்கூட்டலை முதன்மையாக பார்க்க விரும்புவோர், விரைந்து அக்கட்டுரைகளை உருவாக்குவதை தூண்டும்.

அடைப்புக்குறிகளுக்குள் மாற்று எழுத்துக்கூட்டலை தருவதில் அடுத்து உள்ள குழப்பம் - ஒரு கட்டுரையில் எத்தனை முறை இப்படி அடைப்புக்குறிகளுக்குள் தருவது? அடிக்கடி தந்தால் சலிப்பூட்டாதா? கட்டுரையில் முதன் முறை அச்சொல் வரும் போது மட்டும் தந்தால் போதுமா? இக்கேள்விக்கான விடை நடைக்கையேட்டை வகுக்க உதவும்


வேறு ஏதேனும் இணக்க முடிவு சாத்தியமா?--ரவி 09:08, 15 ஜூன் 2006 (UTC)

"ற்ற" என்பதை இந்தியத் தமிழரும், இலங்கைத் தமிழரும் வேறுபாடாக உச்சரிப்பதிலேயே பிரச்சினை. இந்தியாவில் இதை "ttra" என ஒரு "r" கொடுத்து உச்சரிக்கிறீர்கள். இலங்கையில் "tta" என உச்சரிக்கின்றோம். "ட்ட" என்பதை உச்சரிப்பதில் இரு பாலாருக்கும் வேறுபாடு கிடையாது. ஆனால் "metre" (meter) என்பதை உச்சரிக்க விழையும்போது, இலங்கையரைப் பொறுத்தவரை "மீட்டர்" என்பதைவிட "மீற்றர்" சரியான உச்சரிப்புக்குக் அண்மையாக உள்ளது. இந்தியர்களுக்கு "மீற்றர்", "மீட்டர்" ஐ விடத் தொலைவுக்குப் போய்விடுகிறது. ஆங்கிலத்தில் "metre" என்பதை உச்சரிக்கும் போது இலங்கையர்கள் நாக்கு பல்லின் அடிப்பாகத்தைத் தொடும் வகையில் உச்சரிக்கிறார்கள். இந்தியர்களும் அவ்வாறுதான் உச்சரிக்கிறார்கள் என நினைக்கிறேன். ஆனால் "மீட்டர்" என்பதை உச்சரிக்கும்போது நாக்கு சற்றுக் குவிந்து பல்லைத் தொடாமல் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடும். இதனாலேயே இலங்கைத் தமிழர் "மீட்டர்" என்பதை "metre" க்குச் சரியான உச்சரிப்பாகக் கொள்வதில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை இங்கே சரி பிழை எதுவும் கிடையாது. இதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றிய எனது கருத்தை சற்றுப் பின்னர் எழுதுகிறேன். Mayooranathan 10:10, 15 ஜூன் 2006 (UTC)


இலங்கை உச்சரிப்பு????

  • ட - da
  • ர - ta
  • ற - ra
  • ற் - 'it'
  • யு - 'you'
  • யூ - 'ju'
  • ய - 'jah',
  • ஜ - 'ja'
  • ஜி - g ?


இதில் தர்க்க ரீதிதியில் சரியான உச்சரிப்பு என்ற ஒன்று உள்ளதா?

--Natkeeran 10:50, 15 ஜூன் 2006 (UTC)

  • ஆங்கிலத்தில்லுள்ளது போல (அமெரிக்க/பிரித்தானிய)வேறுபாடுகளை கட்டுரையின் முதலாவது வாக்கியத்தில் தந்துவிட்டு.பின்னர் தொகுனரின் இயல்பான வழக்குக்கு அமைய எழுதலாம்.உதாரணமாக மீட்டர் பற்றிய கட்டுரையை பின்வருமாரு ஆரம்பிக்கலாம்.
  • முதல் தொகுனர் இந்தியராக இருப்பின்:

மீட்டர்(இலங்கை வழக்கு: மீற்றர்) என்பது International system of Unitsல் நீள அளவின் அடிப்படை அலகு ஆகும்........

  • முதல் தொகுனர் இலங்கையராக இருப்பின்:

மீற்றர்(இந்திய வழக்கு: மீட்டர்) என்பது International system of Unitsல் நீள அளவின் அடிப்படை அலகு ஆகும்........

  • பின்வரும் தொகுனர்களும் முதலாவது தொகுனரின் வழக்கையே பயன்படுத்தல்
  • யார் சரி யார் பிழை என்பதை விட அவரவர் வழக்குகளை அப்படியே தருவது நன்று

--டெரன்ஸ் 10:58, 15 ஜூன் 2006 (UTC)

அதுவே தற்போதைய த.வி. வழக்கு. --Natkeeran 11:28, 15 ஜூன் 2006 (UTC)

"அவர்கள் ர என்வரிசை எழுத்துக்களை ர (ra) வாக உச்சரிக்காமல், இற்ற (tra) என்பதுபோல உச்சரிப்பர். இதில் எமது பிரதேசத்தில் ற்ற என்பதை தமிழ் நாட்டில் இட்ற என்பதுபோல உச்சரிப்பர். அதனால் தான் யாழ்ப்பாணதமிழர், தமது ஆங்கில சொற்களை தமிழில் எழுதும் முறையில் ரீவீ, ரீ, ரொரான்ரோ என்று தயக்கமின்றி பயன்படுத்துகின்றனர். அவ்வாறு உச்சரிக்காத எம் போன்றவர்களுக்கு இது பெரும் உறுத்தல்தான்." மு.மயூரன் http://mauran.blogspot.com/2005/08/blog-post_23.html --Natkeeran 11:26, 15 ஜூன் 2006 (UTC)


இலங்கை உச்சரிப்பு பின்வருமாறு:
  • ட - da
  • ர - (ra)
  • ற - (Ra)
  • ற் - 'it'
  • யு - (yu)
  • யூ - (yoo)
  • ய - (ya)
  • ஜ - 'ja'
  • ஜி - (ji)

"ற்" உம் "ற" வும் கூட்டாக "ற்ற" என்று வரும்போது தவிர இலங்கை, இந்தியத் தமிழ் உச்சரிப்புகளில் வேறுபாடு கிடையாது. இரு இடங்களிலும் "ற்", "ற" தனித்தனியே வரும்போது உச்சரிப்பு ஒன்றுதான். ஆனால் "ற்" ஐத் தொடர்ந்து வரும் "ற" வை இலங்கையில் "ta" என்பதுபோல் மாற்றி உச்சரிக்க, இந்தியர்கள் வழமைபோல "Ra" என்றே உச்சரிக்கிறார்கள். இலங்கை வழக்கே பழந்தமிழ் மரபு சார்ந்தது என்று சொல்லப்படுகிறது. Mayooranathan 16:51, 15 ஜூன் 2006 (UTC)

இந்த அடிப்படையில் பார்த்தால் "toronto" எப்படி ரொறன்ரோ ஆகும்? நான் கேட்டவரை இலங்கை வழக்கு பழந்தமிழ் வழக்கான சேர வட்டார வழக்கிலிருந்து வந்ததுதான். ஆனால், இந்த 'ற்' விடையத்தில் இது பழந்தமிழ் வழக்கிலிருந்து வேறுபட்டு வளர்ந்து/மாறியுள்ளதாகத் தோன்றுகிறது. (இதனால் தவறு இல்லை. மொழி என்பது இயல்பாக வளரக்கூடியது. பரிந்துரை இலக்கணங்கள் ("prescriptive grammars") நெடுநாள் நீடிக்கமுடியாது. எனினும் மொழி ஆர்வம் கருதி எது பழந்தமிழ் வழக்கை ஒத்தது எனப் பார்க்க முயல்வோம்.) இதுபற்றி தொல்காப்பியம் என்ன சொல்கிறது? உரை இருந்தால் யாராவது பார்த்துக் கூறுங்கள்.
மற்றபடி, இது ஆங்கிலச் சொற்களில் மட்டும்தான் வருகிறது என்பதால் பரவாயில்லை. வடமொழியையே ஏற்றுக்கொள்ளும்போது இலங்கைத் தமிழுக்கென்ன, தமிழகத் தமிழுக்கென்ன. :-)
ஆவல் மிகுதியால் கேட்கிறேன் இலங்கை வழக்கில் சேர வழக்கிலிருந்த அவன், இவன், உவன் என்று படர்க்கையிலே மூன்று நிலைகள் உண்டாமே. மூன்றாமதை எவரேனும் விளக்குங்கள்.
அதேபோல், தமிழகத்தில் நாங்கள், நாம் மற்றும் எங்கள்/எமது, நமது என்பதை வேறுபடுத்துவோம். நீங்கள் அனைத்தையும் "inclusive pronoun" ஆகவே பயன்படுத்துகிறீர்கள் அல்லவா? இது புலம்பெய்ர்ந்தவர்கள் மட்டுமா? இல்லை அனைவரும் இப்படித்தான் பயன்படுத்துவரா? -- Sundar \பேச்சு 09:28, 17 ஜூன் 2006 (UTC)


m என்பது சர்வதேச நியமக் குறியீட்டு முறையில் மீட்டரைக் குறிக்கின்றது. இதை மீ எனபது எனக்குச் சரியாகப் படவில்லை. m என்றே குறிப்பிடலாம் என் தாழ்மையான கருத்து. ஒவ்வொரு நாட்டுக்காரரும் தம் மொழியில் இக் குறியீடுகளை மாற்றினால் கடைசியில் குழபந்தான் மிஞ்சும். --Umapathy 15:07, 23 ஜூலை 2006 (UTC)

அளவுகள் தான் தரப்படுத்தப்பட்டுள்ளன, குறியீடுகள் அவ்வம்மொழியிலே இருப்பதில் தவறில்லை. உருசிய மொழியை பாருங்கள். உர்ரொமானிய எழுத்துக்களால் எழுதப்படாத மொழிகளில் தம் தம் மொழிகளில் அவ் அளவீடுகளைக் குறிக்கலாம். ஒரு நொடி என்பதை அனைத்துல அலகு என்ன என்பதைத் துல்லியமாய் வரையறை செய்கின்றது. நேரத்தைன் அடிப்படை அலகாக இது பயன்படுத்தப் படுகின்றது, ஆனால் அதனை நொடி என்று தமிழில் அழைப்பதில் தவ்று இல்லை, குறியீடும் நொ என்று குறிப்பதிலும் தவறு இல்லை (உருசியர்கள் c என்னும் எழுத்தை நொடிக்கு ஆளுகிறார்கள்). அதே போல மீட்டர் என்பதை மீ என்ற குறியீட்டால் குறித்தால் தவறு இல்லை, ஆனால் மீட்டர் என்பது என்ன, எப்படி துல்லியமாய் அளப்பது, அறிவது என்பதை அனைத்துலக முறை அலகுகள் குறிக்கும். --C.R.Selvakumar 15:37, 23 ஜூலை 2006 (UTC)செல்வா
செல்வாவின் கருத்துடன் உடன்படுகிறேன். மீ என்று அழைப்பதில் எந்த தவறும் குழப்பமும் இல்லை. கி.மீ போன்ற சுருக்கங்கள் நன்கு புழக்கத்தில் உள்ளன--ரவி 16:29, 23 ஜூலை 2006 (UTC)

மீட்டர் சரியா மீற்றர் சரியா? இங்கு இந்த விவாதம் அவசியமானதே என நான் கருதுகிறேன், சில வேளைகளில் இலங்கை தமிழும், இந்தியத் தமிழும் பல் வேறு இடங்களில் மாறி ஒலிப்பதைக் கண்டுருக்கிறேன். இலங்கைத் தமிழர்கள் தமிழ் உச்சரிப்பில் கவனமாகவும், சரியாகவும் உச்சரிப்பதைப் பார்த்துள்ளேன். மீட்டர் மீற்றர் பிரச்சனை கையாளுவதில் ஏன் உங்களுக்கு இவ்வளவு சிக்கல். இது சில ஆங்கில சொற்களை அமெரிக்கர் ஒரு மாதிரியும், இங்கிலாந்தினர் ஒரு மாதிரியும் உச்சரிக்கின்றனர், எழுதும் போதும் அவ்வாறே வேறுபடுகின்றன. புத்தகங்களில் இப்பிரச்சனை வரமால் இருக்க ஒரு சொல்லின் இன்னொரு ஒலியன்களை அடைப்புக்குறிக்குள் எழுதுவது உண்டு. அவ்வாறே இங்கும் எழுதலாம் . ஆங்கிலம் பேசுவோர் அமெரிக்காவில் தான் அதிகம் அதனால் இங்கிலாந்தின் உச்சரிப்புக்களை அவர்கள் உதாசீனம் செய்வதில்லையே. ஒரு வழக்கை விடுத்து அவர்களை தனிமைப் படுத்துவது பல்வேறு பின்விளைவுகளைக் கொண்டுவரலாம். இவ்வாறான அணுகுமுறைகளால் தான் தமிழ்-மலையாளம் மொழிகள் பிரிந்தன, அவ்வாறன நிலை மீண்டும் வருவதை நாம் வழிவகுக்க கூடாது. நன்றி. இக்பால் செல்வன் http://mapleilai.wordpress.com/ --99.254.242.12 07:17, 22 ஜனவரி 2010 (UTC)

ஈட்டு என்பதையும் ஈற்று என்பதையும் பலுக்கும்போது ஈகாரத்தில் வேறுபாடுண்டல்லவா? அது போலவே, மீட்டர் என்பதிலுள்ள ஈகாரத்தை ஈட்டு என்பதிலுள்ள ஈகாரம் போன்றே பலுக்க வேண்டும். அதிலே Metre என்ற பலுக்கல் வராது. மீற்றர் என்று பலுக்கும்போதே Metre என்ற உச்சரிப்பு வரும். --மதனாகரன் (பேச்சு) 10:04, 17 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

சரியான எடுத்துக்காட்டு மதனாகரன்.--Kanags \உரையாடுக 20:12, 17 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மீட்டர்&oldid=1260314" இலிருந்து மீள்விக்கப்பட்டது