பேச்சு:மிகைல் இலமனோசொவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மீகயீல் உலோமனசோவ் என்பது தான் சரியான பலுக்கலாகும். மாற்றியருளவும். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:57, 16 மார்ச் 2017 (UTC)

@உலோ.செந்தமிழ்க்கோதை: உலோமனசோவ் என்பது தவறு. நீங்கள் ஆங்கில மொழிப் பெயர்ப்பு செய்கிறீர்கள். லமனோசொவ் Ломоно́сов என்பது தான் உருசிய மொழியில். இங்கு о́ என்பதைக் கவனியுங்கள். அது ஓ என்றவாறு பலுக்கப்படும். ஏனைய உயிரொலிகளுக்கு மேலே கோடு இல்லை என்பதையும் கவனியுங்கள். தமிழில் இலமனோசொவ் என்பதே மிகப் பொருத்தம். மிகயீல் இலமனோசொவ் என்பது எனது பரிந்துரை. @Drsrisenthil:.--Kanags \உரையாடுக 07:07, 30 மார்ச் 2017 (UTC)
கனக்சு அவர்களின் கூற்றிற்கு உடன்படுகின்றேன். Михаи́л Васи́льевич Ломоно́сов = மிகயீல் வசீல்யெவிச் (இ)லமனோசொவ் .

அழுத்தி உச்சரிப்பதை உருசிய மொழியில் Ударение (உதரேனிய) என்பர்.

இரசிய மொழியில் குறில் நெடில் சுட்டப்படுவது அடையாளக் குறியீட்டின் மூலமே (இரசிய மொழியில் உதரேனிய)
எ.கா: 
Аннá : அன்னா(ஆ)
Áнна : ஆன்ன(ா)
ஆனால் உதரேனிய எனப்படும் { ' } குறியானது எழுத்து வழக்கிலோ அச்சுவழக்கிலோ நடைமுறையில் காணப்படுவது அரிது. 

--சி.செந்தி (உரையாடுக) 04:57, 31 மார்ச் 2017 (UTC)

கலந்துரையாடலுக்கும் பலுக்கல் குறித்து தெளிவுபடுத்தியதற்கும் நன்றிகள்!அன்புடன் உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 23:12, 16 ஏப்ரல் 2017 (UTC)மேலும் காண்க[தொகு]