பேச்சு:புனித நீராடும் விழா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புஷ்கரத்தின் முக்கியத்துவத்தை முன்னிட்டு இப்பதிவு, ஆங்கில விக்கிபீடியாவில் Pushkaram என்ற தலைப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பில் சில சொற்கள்/பகுதி தொடர்ந்து மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:38, 31 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

பெயரிடல்[தொகு]

வணக்கம், ஆங்கில வீக்கிபீடியாவில் புஷ்கரம் என்ற தலைப்பிலான கட்டுரையிலிருந்து சில செய்திகள் மொழிபெயர்க்கப்பட்டு இப்பதிவு ஆரம்பிக்கப்பட்டது. வேறு தலைப்பு எதுவாயினும் தெரிவிக்க வேண்டுகிறேன். அவ்வாறே செய்வோம். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:17, 2 செப்டம்பர் 2017 (UTC)

புனித நீராடும் விழா --நந்தகுமார் (பேச்சு) 11:27, 2 செப்டம்பர் 2017 (UTC)
வணக்கம் நந்தகுமார். புனித நீராடும் விழா என்றே அமைப்போம். இருப்பினும் ஒரு ஐயம். புஷ்கரம் தொடர்பான குறிப்பினையோ விவரங்களையோ தேடுகையில் பக்தர்களுக்கும், மக்களுக்கும் எளிதாக இருக்கும் வகையில் (புஷ்கரம்) என்று அடைப்புக்குறிக்குள் போடலாமா? வேறு ஏதேனும் முறை உள்ளதா? மகாமகம் என்பதற்கு மகாமகம் என்றுதான் கூறுகிறார்கள். அந்த தலைப்பில் பதிவு உள்ளது. அதுவும் புனித நீராடலே. (மகாமகம் புனித நீராடல் விழா என்று பயன்படுத்துவதில்லை) தேடுபவர்கள் எளிதில் உள்வாங்கிக் கொள்ளும் வகையில் பதிவின் தலைப்பு அமைந்தால் சிறப்பாக இருக்கும் என கருதுகிறேன். தங்களின் மேலான கருத்தை எதிர்நோக்குகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:44, 2 செப்டம்பர் 2017 (UTC)
வணக்கம். புஷ்கரம் என்பதை வழிமாற்றாக வைத்துக் கொள்ளலாமே. இதனால் தேடுபவர்களுக்கு சிரமம் ஏற்படாது என எண்ணுகிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 11:53, 2 செப்டம்பர் 2017 (UTC)
வணக்கம் நந்தகுமார். வழிமாற்று நிலையில் பக்தர்களோ, மக்களோ, வாசகர்களோ எளிதில் இந்த உரிய பக்கத்தைக் கண்டுபிடிப்பார்கள் என்றால் தாங்கள் கூறியபடி அவ்வாறே வைத்துக்கொள்வோம். வழிமாற்ற ஆவன செய்ய வேண்டுகிறேன். தங்களைப் போன்றோரின் கருத்துகள் எனக்கு உதவியாக உள்ளன. நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:56, 2 செப்டம்பர் 2017 (UTC)
@Kanags: உங்கள் கருத்துகளையும் கூறவும். சரி என்றால் அனைத்து புஷ்கரம் பக்கங்களிலும் புனித நீராடும் விழா என மாற்றிவிடலாம்.வழிமாற்றுகளையும் வைத்துக் கொள்ளலாம்.--நந்தகுமார் (பேச்சு) 12:05, 2 செப்டம்பர் 2017 (UTC)
அவ்வாறே வழிமாற்றுடன் மாற்றலாம். பா.ஜம்புலிங்கம் கூறுவது போல கட்டுரையின் ஆரம்பத்தில் புஷ்கரம் என்ற சொல்லையும் குறிப்பிடலாம்.--Kanags \உரையாடுக 03:15, 3 செப்டம்பர் 2017 (UTC)
வணக்கம், நந்தகுமார் "புனித நீராடும் விழா (புஷ்கரம்) என்பது இந்தியாவில் கொண்டாடப்படுகின்ற, ஆற்றை வணங்குகின்ற விழாவாகும்." என்றவாறு பதிவானது (புஷ்கரம்) என்ற சொல் அடைப்புக்குறிக்குள் தொடங்குவதைக் கண்டேன். தலைப்பில் புனித நீராடும் விழா என்பதை அடுத்து (புஷ்கரம்) என்ற சொல் தேவையில்லையா? என்பதை தெளிவுபடுத்த வேண்டுகிறேன். (புனித நீராடும் விழா என்ற முதன்மைக்கட்டுரையில் மட்டும் தலைப்பில் (புஷ்கரம்) என்ற சொல் அடுத்து அமையும் வகையில் மாற்றத்தை மேற்கொள்வது தொடர்பாக அறிய வேண்டுகிறேன். தங்களின் கருத்து எதுவாயினும் ஏற்கவுள்ளேன். தெளிவிற்காகவே இவ்வேண்டுகோளை வைக்கிறேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:44, 4 செப்டம்பர் 2017 (UTC)
என் கருத்தினைத் தொடர்கிறேன்.....ஆங்கில விக்கிபீடியாவில் Pushkaram, Godavari Maha Pushkaram, Pranahita Pushkaralu, Tungabhadra Pushkaralu என்ற வகையில் தலைப்புகள் காணப்படுகின்றன என்பதை தகவலுக்காகத் தெரிவித்துக்கொள்கிறேன். புஷ்கரலு, புஷ்கரம் என்ற நிலையில்கூட சொற்களை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.மறுபடியும் என் ஐயத்திற்காக இக்கருத்தைத் தெரிவிக்கிறேன் என்பதையும் உங்களின் கருத்து எதுவாயினும் ஏற்பேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.

கையொப்பமிட மறந்துவிட்டேன் பொறுத்துக்கொள்க.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:49, 4 செப்டம்பர் 2017 (UTC)

வணக்கம்,பா.ஜம்புலிங்கம். கட்டுரையின் ஆரம்பத்தில் புஷ்கரம் உள்ளது. தலைப்பு தமிழில் இருப்பதே சரியாகப்படுகிறது.மிக அவசியம் எனில் தலைப்பில் புனித நீராடும் விழா என்பதை அடுத்து (புஷ்கரம்) என்ற சொல் வைக்கலாம்.@Kanags: உங்கள் கருத்துகளையும் கூறவும்.--நந்தகுமார் (பேச்சு) 03:34, 4 செப்டம்பர் 2017 (UTC)
வணக்கம், நந்தகுமார். நான் ஆரம்பத்தில் கூறியது போல மகாமகம் பதிவில் புனித நீராடல் விழா என்று விக்கிபீடியாவில் குறிக்கப்படவில்லை. ஆங்கில விக்கிபீடியாவில்கூட தெலுங்கான புஷ்கரலு என்பதை முதன்மைத்தலைப்பாகக் கொண்டுள்ளார்கள். அவ்வாறு தமிழ் விக்கிபீடியாவில் மகாமகம் மகாமகமாகவே உள்ளது. (இங்கு பக்தர்களின், மக்களின் வாசிப்புக்கும், அவர்களுடைய தேடலின்போது அவர்களுக்கு எளிதாகக் கிடைக்கும் வகையிலும் நாம் துணை நிற்க வேண்டும் என்ற கருத்தைத் தெரிவிக்க விழைகிறேன்). தலைப்பில் புனித நீராடல் விழா என்று மட்டும் இருந்தால் எளிதாக நம்மவர்கள் உள்வாங்கிக் கொள்வார்களா என்பது ஐயமே. நிற்க. தமிழ்நாட்டில் நீர் பெருகி வருகின்ற ஆடிப்பெருக்கன்றும் புனித நீராட்டு செய்கிறார்கள். புனித நீராடல் விழா என்றால் ஆடிப்பெருக்கு என்றுகூட நினைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. உங்களுடைய மற்றும் பிறருடைய கருத்தின் அடிப்படையில் உங்களின் எவ்வித கருத்தையும் ஏற்க தயாராக உள்ளேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:10, 4 செப்டம்பர் 2017 (UTC)