பேச்சு:பலக்கரு உயிரணு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Nan: வணக்கம். சினோசைட் என்பது பலக்கருக் கலம் என்பதாக மொழிபெயர்க்கப்பட்டு, இந்தக் கட்டுரைக்குள் பயன்படுத்தப்பட்டுள்ளது. உங்களின் கருத்தை வேண்டுகிறேன். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:59, 13 சனவரி 2024 (UTC)[பதிலளி]

//உயிரணு (இலங்கை வழக்கு: கலம், ஆங்கிலம்:Cell) அல்லது உயிர்க்கலம்// என்பதாக உயிரணு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:17, 13 சனவரி 2024 (UTC)[பதிலளி]

@Selvasivagurunathan m:, வணக்கம். நீங்கள் குறிப்பிட்டவண்ணமே, கலம் = செல் = உயிரணு. ஆனால், தமிழ்நாடு வழக்கில் கலம் என்பது உயிரணுவிற்கு பயன்பாட்டில் இல்லாததால், "சினோசைட்டு" என்பதை வழிமாற்றாகவும் "பலக்கரு உயிரணு" = "பலக்கருக் கலம்" இவற்றில் ஒரு தலைப்புக்கும் நகர்த்தலாம். 'சினோசைட்' என்ற தலைப்பை நீக்கிவிடலாம் என எண்ணுகிறேன். பலக்கரு உயிரணு, பலக்கருக் கலம் என்ற இரண்டையும் கட்டுரையில் பயன்படுத்தலாம் என்பது என் விருப்பம். :@Kanags: உங்கள் கருத்தினைக் குறிப்பிடுங்கள்.--நந்தகுமார் (பேச்சு) 20:50, 13 சனவரி 2024 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கியில் உயிரணு என்ற சொல்லே பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே பலக்கரு உயிரணு என்பதை முதன்மைத் தலைப்பாகவும் ஏனையவற்றை (சினோசைட் உட்பட) வழிமாற்றுகளாகவும் வைக்கலாம். கட்டுரையில் மேலும், கட்டுரையின் தொடக்கத்தில் கல்க் என்று எழுதப்பட்டுள்ளது, அச்சொல் நீக்கப்பட வேண்டும் என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 22:02, 13 சனவரி 2024 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பலக்கரு_உயிரணு&oldid=3867566" இலிருந்து மீள்விக்கப்பட்டது