பேச்சு:ந. செல்வராஜா

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நூல் தேட்டத் தொகுதிகள் என்றால் என்ன என்பதனை அறிந்துகொள்ள ஆவல்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:42, 31 மார்ச் 2015 (UTC)Reply[பதில் அளி]

அதுவொரு ஆவணவாக்கம் மா. செல்வசிவகுருநாதன் --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:55, 1 ஏப்ரல் 2015 (UTC)Reply[பதில் அளி]
தேடிய தேட்டம் என்ற கட்டுரையையும் பாருங்கள்.--Kanags \உரையாடுக 10:57, 1 ஏப்ரல் 2015 (UTC)Reply[பதில் அளி]

தினேஷ்குமாருக்கும், சிறீதரன் அவர்களுக்கும் நன்றி! முன்னதாக, உரியவரிடம்தான் உதவி கேட்டுள்ளேன் போலும்; தேடிய தேட்டம் என்ற கட்டுரையை மயூரநாதன்தான் எழுதியுள்ளார்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:40, 1 ஏப்ரல் 2015 (UTC)Reply[பதில் அளி]

மா. செல்வசிவகுருநாதன், நான் முதலாம் தேதியில் இருந்து சென்னையில் இருப்பதால், இப்போதுதான் உங்கள் பதிவைப் பார்க்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. நூல் தேட்டத் தொகுதி என்பது இது வரை வெளிவந்த நூல்களின் தொகுப்பைக் குறிக்கிறது. உண்மையில், இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள நூல் தேட்டத் தொகுதி என்பது ஒரு நூல்விபரப் பட்டியல் ஆகும். கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் தேட்டம் என்ற சொல்லுக்கு தேடல், விருப்பம் ஆகிய பொதுப் பொருள்களும், சொத்து என்னும் இலங்கைத் தமிழ் வழக்குப் பொருளும் தரப்பட்டுள்ளன. உண்மையில் இலங்கையில் இது தேடிச் சேர்த்த சொத்தைக் குறிக்கும் ஒரு சொல் எனலாம். அதனால் தான் அறிவுச் சொத்தான நூல்களின் பட்டியலுக்கு நூல் தேட்டம் என்னும் பெயர் வழங்கப்பட்டுள்ளது. --மயூரநாதன் (பேச்சு) 11:29, 5 ஏப்ரல் 2015 (UTC)Reply[பதில் அளி]

விரிவான விளக்கத்துக்கு, மிக்க நன்றி ஐயா! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:35, 5 ஏப்ரல் 2015 (UTC)Reply[பதில் அளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ந._செல்வராஜா&oldid=1834813" இருந்து மீள்விக்கப்பட்டது