பேச்சு:நாகம் (பேரினம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆங்கில விக்கிக் கட்டுரையில் en:Indian Cobra தமிழில் நல்ல பாம்பு அல்லது நாஜ பாம்பு என அழைக்கப்படுகிறது என எழுதியிருக்கிறார்கள். அது நாக பாம்பு என்றிருக்க வேண்டுமா? அல்லது தமிழகத்தில் நாஜ பாம்பு என அழைக்கப்படுகிறதா?--Kanags \உரையாடுக 12:44, 12 சூன் 2011 (UTC)[பதிலளி]

தமிழில் நாஜ பாம்பு என்றில்லை. நாக பாம்பே சரி.. நாகர், நாகர் கோவில் என்று கடவுளாக வழிபடப்படுபவை. நல்ல பாம்பு, நல்லது (பாம்பு எனச் சொல்லவும் பயந்து) என்றும் அழைக்கபடுகிறது.--மணியன் 12:49, 12 சூன் 2011 (UTC)[பதிலளி]

முரண்[தொகு]

  • இந்திய நாகம் என்பதற்கே, en:Indian Cobra இந்த இணைப்பு உள்ளது. இக்கட்டுரையிலுள்ள en:Chinese Cobra இணைப்பை நீக்க வேண்டும். இந்தியநாகத்திற்கும், இந்த நல்லபாம்புக்கும் உள்ள வேறுபாடுகளை அறிய ஆவல். படமெடுக்கும் பாம்பினைத் தமிழில், நாகம் என்று அழைப்பரென்று, இக்கட்டுரை இலக்கிய ஆதாரங்களுடன் கூறுகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது, கட்டுரையை நல்லபாம்பு என்று அழைத்தலே சரி.--≈ உழவன் ( கூறுக ) 11:15, 13 சூலை 2013 (UTC)[பதிலளி]
en:Chinese Cobra நீக்கப்பட்டுள்ளது. சரியான இணைப்பு en:Cobra --Anton (பேச்சு) 11:21, 13 சூலை 2013 (UTC)[பதிலளி]

பெயர்[தொகு]

நாகம் என்பதே சரியான பெயர். நாகப் பாம்பு என்றிருக்க வேண்டியதில்லை. நாகம் என்ற பெயரில் வேறு தலைப்புக்களும் இருக்கலாம். எனவே நாகம் (பாம்பு) என்று தலைப்பிடுவதே சாலப் பொருத்தம். ஏனைய தலைப்புக்களில் நாகம் (உலோகம்), நாகம் (மரம்) என்பன உள்ளடங்கும்.--பாஹிம் (பேச்சு) 03:59, 28 பெப்ரவரி 2019 (UTC)

இலக்கணம்[தொகு]

நச்சுள்ள பாம்பு என்று எழுதப்பட்டுள்ளது. நஞ்சுள்ள பாம்பு என்று வர வேண்டும். நச்சு என்பது நஞ்சு என்பதன் பண்புத் தொகை (adjective). நச்சுப் பாம்பு என்றெழுதலாம்.--பாஹிம் (பேச்சு) 04:01, 28 பெப்ரவரி 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நாகம்_(பேரினம்)&oldid=2671710" இலிருந்து மீள்விக்கப்பட்டது