பேச்சு:டக்ளஸ் தேவானந்தா
//டக்லஸ் தேவாந்தா யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய இடங்களில் IT Park ஐ உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர். யாழ்ப்பாணத்தில் உள்ள IT Park இல் யாழ்ப்பாணத்தில் முதன்முறையில் VSAT முறையிலான இணைய இணைப்பு அறிமுகம் செய்யப்பட்டது. வவுனியாவில் புலன்பெயர்ந்தோர் மீள் குடியேற்றத்திற்கான ஒருதொகைக்காணிகளை இலங்கை அரசின் ஒப்புதலுடன் இடம்பெயர்ந்தவர்களுக்கு வழங்கி வீடுகளைக் கட்டுவதற்கும் உதவிகளைப் பெற்றுக்கொடுத்தார்.//
இப்படியான செய்திகள் இங்கு தேவையற்றது. அரசில் ஒரு முக்கிய அமைச்சராயிருப்பவர் தனது அதிகார வரம்பில் இருந்துகொண்டு நிறைவேற்றும் காரியங்களை இங்கு பட்டியலிடத்தேவையில்லை என்பது என் கருத்து. எனவே இவற்றை நீக்கும்படி பரிந்துரைக்கிறேன்.--Kanags 09:03, 7 மார்ச் 2007 (UTC)
அந்தப் பொறுப்பில் எந்த அமைச்சர் இருந்திருந்தாலும் செய்திருக்க வேண்டியதையே அவர் செய்திருக்கிறார். கடமையை செய்வதையே சிறப்பாக குறிப்பிட அவசியம் ஏதும் இல்லை.--Ravidreams 09:20, 7 மார்ச் 2007 (UTC)
இலங்கை அமைச்சர் ஒருவர் "தமிழர்களின் கல்வியை மேமபடுத்துவதற்காக IT Park ஐ அமைத்தது குறிப்பிடத்த விடயமே. வேறெந்த அமைச்சரோ பாராளுமன்ற உறுப்பினரோ நானறிய வடக்குக் கிழக்கில் இந்த வேலைகளைச் செய்யவில்லை. வவுனியாவில் மீள்குடியேற்றத்திற்கு முதலில் செட்டிக்குளமே தீர்மானிக்கப்பட்டிருந்தது ஆயினும் இதற்கு இலங்கை இராணுவத்தினரே முட்டுக்கட்டையாக இருந்தினால் பின்னர் கற்பகபுரத்தில் மீள்குடியேற்றத்திட்டம் நடந்தது. தொடர்ச்சியாகத் தமிழர்கள் அகதிவாழ்வை வாழ்வதைவிடுத்து இவ்வாறான மீள்குடியேற்றத்திட்டங்கள் நடைபெறவேண்டும் என்பதே எனது கருத்து. நான் பல தடவை நலன்புரிநிலையங்களைப் பார்வையிட்டுள்ளேன் இவை தமிழர்களுக்கு இழுக்காகும். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற சங்கத் தமிழன் புறநானூற்றில் கூறியதன்படி அவர்கள் எங்கு தமிழர்கள் சென்றாலும் எல்லோரும் சுற்றத்தவர்களே "எலிவளையானாலும் தனிவளை வேண்டும்" என்பதற்கமைய ஒரு அரை ஏக்கர் காணியில் ஒரு கொட்டில் இருப்பது அகதிமுகாம்களில் இருப்பது சிறந்தது. அகதிமுகாம்களில் உள்ள தமிழர்களை கேவலமாகப் படம்பிடித்து "தாம் தான் உதவுவதாகக்" கூறி பலநாடுகளிலும் உதவி பெற்றுப் சில பன்னாட்டு அமைப்புக்கள் செயற்படுவது வருந்ததக்கது. கட்டுரையில் இவற்றை நீக்காமல் விடுவதே நல்லதென்று நினைக்கின்றேன். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் செயற்படுவது அவரவர் விருப்பம் இதை வேண்டுமானால் நீக்கிவிடலாம். --Umapathy 11:10, 7 மார்ச் 2007 (UTC)
ஒரு அரச ஊளியர் தமது கடமைகளை சரியாக செய்தாரா என்பதை அவர்களின் பணிகளே எடுத்துரைக்க முடியும், எனவே அந்த தகவல்கள் இங்குகிருப்பது பொருத்தமே. --Natkeeran 15:40, 7 மார்ச் 2007 (UTC)
நற்கீரன், தமிழ்நாட்டின் இந்தியாவின் ஒவ்வொரு ச.ம.உ, பா.ம.உ, அமைச்சர் ஆகியோருக்கு இப்படி பட்டியிலிட்டால் தமிழ் விக்கிபீடியாவே பத்தாமல் போகும் அளவுக்கு பட்டியல் இடலாம். வரலாற்று முக்கியத்துவமற்ற தகவல்களை கலைக்களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதால் ஒரு பயனும் இருப்பதாய்த் தோன்றவில்லை. --Ravidreams 21:22, 11 மார்ச் 2007 (UTC)
டக்ளஸ் தேவானந்தா சனசமூக நிலையங்களுக்குக் காசு கொடுத்தார். கோயில்களுக்குக் காசு கொடுத்தார் என எல்லாவற்றையும் பட்டியலிட வாழ்த்துக்கள். இதுக்கு மேல் கொழும்பில் இருந்து எதுவும் எழுத முடியாது. --கோபி 15:46, 7 மார்ச் 2007 (UTC)
இலங்கையில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானியத்தின் பெப்ரவரி 2007 கணக்குப்படி தற்போது 200, 000 இடம்பெயர்ந்தவர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருமே சொந்த இடத்திலோ அல்லது வேறு ஓர் இடத்திலோ மீளக்குடியேற்றவேண்டியவர்களே. அகதிமுகாம், நனல்புரிநிலையங்கள் எல்லாமே இலங்கையில் இழுத்துமூடவேண்டும். அப்போதுதான் தமிழர்களுக்கு விமோசனம் கிடைக்கும். அகதி என்ற சொல் அகராதியிலேயே இருக்கக் கூடாது. நானும் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து இடர்பாடுகளைச் சந்தித்துள்ளேன். "இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன" யாருடைய ஆட்சியில் இருந்தாலும் அகதிமுகாமோ நலன்புரி நிலையங்களோ இருக்கவே கூடாது. இடைத்தங்கல் முகாமைத்துவிட்டு காலதாமதமின்றி அவர்கள் சொந்த விடத்திற்கோ அதுசரிவராவிட்டால் வேறு ஓர் பொருத்தமான இடத்திலோ குடியேற்ற வேண்டும். இதுவே எனது நிலைப்பாடு. --Umapathy 16:52, 7 மார்ச் 2007 (UTC)
உமாபதி, உங்கள் நிலைப்பாட்டை புரிந்துகொள்ள முடிகின்றது. நீங்கள் கூறிய அனைத்தையும் ஆமோதிக்கின்றேன். --Natkeeran 16:59, 7 மார்ச் 2007 (UTC)
உமாபதி, உங்கள் தனிப்பட்ட நிலைப்பாடுகளை, அரசியல் கொள்களைகளை விக்கிபீடியாவில் எழுதுவதற்கான தேவைகளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. --Ravidreams 21:22, 11 மார்ச் 2007 (UTC)
- மீள் குடியேற்ற அரசியல், மீள் குடியேற்றப்படுபவர்கள் தெரிவு, மீள்குடியேற்றங்களுக்குத் தெரிவு செய்யப்படும் இடங்கள் பற்றியெல்லாம் சொல்லப் பல விடயங்கள் உள்ளன. அதற்கான இடம் இதுவல்ல. இலங்கை அரசு தொலைநோக்கில் திட்டமிட்டுச் செய்து வரும் நடவடிக்கைகள் தொடர்பில் விளங்கிக் கொள்ள முடியாதவர்கள் விளங்கிக் கொள்ள முடியாதவர்களாக இருந்து விட்டுப் போங்கள். அவற்றை சம்பந்தமில்லாத இடங்களில் நியாயப்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். கோபி 17:28, 7 மார்ச் 2007 (UTC)
டக்ளஸ் தேவானந்தா பற்றிய ஆங்கிலக் கட்டுரையில் அவர் பெயர் தமிழில் குறிப்பிடப்படவில்லை. இந்திக் கட்டுரையில் தமிழிலோ ஆங்கிலத்திலோ இல்லை. ஆனால் தமிழரான அவரது பெயர் அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏன்? கோபி (பேச்சு) 12:59, 16 சனவரி 2015 (UTC)
- ஆங்கில, இந்திக் கட்டுரைகளில் தமிழ்ப் பெயர் எழுதப்படாமைக்கு குறிப்பான கொள்கை எதுவும் இல்லை, எவரும் எழுத முன்வரவில்லை என்பதே காரணம். நான் இப்போது தந்திருக்கிறேன். இங்கு நாம் ஆங்கிலப் பெயர் தந்துள்ளதற்கு முக்கிய காரணம், ஆங்கிலத்தில் எழுதித் தேடுபவர்களுக்கு தேடுபொறியில் அகப்படும் என்பது தான். மேலும் டக்ளஸ் என்பது தமிழ்ப் பெயரில்லையே:)--Kanags \உரையாடுக 13:19, 16 சனவரி 2015 (UTC)
நன்றி :) கோபி (பேச்சு) 14:51, 19 சனவரி 2015 (UTC)