உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சேரந்தீவின் மூன்று இளவரசர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணிவண்ணன், நீங்கள் ஆர்வமுடன் புதிய கட்டுரைகளை உருவாக்கி வருவது கண்டு மகிழ்ச்சி. ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளைத் தமிழாக்கும் போது முழு ஆங்கிலக் கட்டுரையையும் வெட்டி ஒட்டி இட்டு மொழிபெயர்க்காமல், ஒவ்வொரு பத்தியாக மொழிபெயர்த்து தமிழில் நேரடியாக இடுமாறு வேண்டுகிறேன். இதில் ஏதும் நடைமுறைச் சிக்கல் இருந்தால் உங்கள் மணல்தொட்டி, கணினி notepad முதலியவற்றில் வைத்தும் மொழிபெயர்க்கலாம். பொதுவாக, இப்படி முழு ஆங்கில உரையையும் (சில நிமிடங்களுக்கு என்றாலும்) பக்கத்தில் விட்டு வைப்பதை வரவேற்பதில்லை. கூகுள் முதலிய தளங்களிலும் உடன் இந்த ஆங்கிலப் படி சேமிக்கப்பட்டு விடும். பிற்காலத்தில் விக்கிப்பீடியா கட்டுரை வரலாற்றைப் பார்க்கும் போது குழப்பம் வரலாம். நன்றி.--இரவி (பேச்சு) 16:57, 15 செப்டம்பர் 2014 (UTC)

அடடா, இதை எழுதி முடிப்பதற்குள் எஞ்சிய ஆங்கில உரையை பயனர்:KaNiJan2/மணல்தொட்டி/சேரந்தீவத்தின் மூன்று இளவரசர்கள் பக்கத்துக்கு நகர்த்தி விட்டார்கள் :)--இரவி (பேச்சு) 16:59, 15 செப்டம்பர் 2014 (UTC)
இரவி அவர்களே நகர்த்தியது நான்தான் மணிவண்ணன் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் ஒரு செய்தியையும் விட்டுச்சென்றுள்ளேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:22, 15 செப்டம்பர் 2014 (UTC)
இரவி பிழையான தொகுப்பு வருந்துகிறேன். இனி இது நடக்காது. ஸ்ரீகர்சன் உதவிக்கு நன்றி. இந்தக் கட்டுரையை அழித்து விட்டேன். சேரந்தீவின் மூன்று இளவரசர்கள் என்ற பெயரில் வேறு கட்டுரையை உருவாக்கியுள்ளேன். இதை அழித்து விடலாம். தமிழில் உள்ள புதுக்கட்டுரைகளை ஆங்கிலக் கட்டுரையின் விக்கியிடை இணைப்புகளில் சேர்ப்பதில் எனக்குச் சிக்கல்கள் இருக்கின்றன. உங்கள் இணைப்புக்கு நன்றி. அதைப் பார்த்துச் சரி செய்ய முயல்கிறேன்.
மணிவண்ணன், வருத்தம் எல்லாம் எதற்கு? தமிழ் விக்கிப்பீடியர்களின் இவ்வழக்கம் புதிதாக வருபவர்களுக்குத் தெரியாது என்பதால் சுட்டிக் காட்டினேன். விக்கியிடை இணைப்புகளைச் சேர்ப்பது தொடர்பான சிக்கலுக்கு: வேறு உலாவிகளில் இருந்து முயன்று பாருங்கள். உலாவியில் நீட்சிகள் இருந்தால் அவற்றை முடக்கி விட்டு முயலவும். நன்றி. --இரவி (பேச்சு) 06:03, 16 செப்டம்பர் 2014 (UTC)
மணி, கட்டுரைத் தலைப்பை மாற்றுவதற்கு புதிதாகக் கட்டுரை எழுதத் தேவையில்லை. மேல் பக்கத்தில் உள்ள Menu வில் நகர்த்தவும் என்பதைத் தேர்ந்தெடுத்து விரும்பிய தலைப்புக்கு மாற்றலாம். இதன் மூலம் கட்டுரையின் வரலாறும் பாதுகாக்கப்படும்.--Kanags \உரையாடுக 08:23, 16 செப்டம்பர் 2014 (UTC)