பேச்சு:சீத்தலைச் சாத்தனார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல்
WikiProject iconஇந்தப் பக்கம் விக்கிப்பீடியாவிலுள்ள ஒரே பெயர் கொண்ட பக்கங்களை கட்டமைத்து நிர்வகிக்கும் பக்கவழி நெறிப்படுத்தல் எனும் விக்கித்திட்டத்தின் கீழ் உள்ளது. நீங்கள் இந்த உரையாடல் பக்கத்துடன் இணைந்துள்ள பக்கத்தைத் தொகுத்து உதவலாம். மேலும் திட்டப்பக்கத்திற்குச் சென்று திட்டத்தில் இணைந்து உரையாடலில் பங்கேற்றும் பங்களிக்கலாம்.
 

ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையை எழுதிய சீத்தலைச் சாத்தன் எனும் மாபெரும் கவியை கொச்சைபடுத்தும் வகையில் அவர்தம் பெயர் விளக்கம் கூறுங்கால், பாட்டு எழுதுகையில் தவறு நேர்ந்துவிடும்பொழுது எழுத்தாணியைக் கொண்டு தலையில் குத்திக்கொள்வார் என்றும் அதன் பயனாய் தலையில் புண் ஏற்பட்டு பிறகு சீழ் பிடித்துக்கொள்ளும் என்பதலால் அவர் "சீழ்தலைச் சாத்தன்" (இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய மணிமேகலை காப்பியத்துள் இந்து/சமணத் துறவிகளை அதிகம் விமர்சித்தும் புத்த மதக்கொள்கைகளை உயர்த்தியும் எழுதி உள்ளமையால் அவர் பால் வெறுப்புற்றவர்கள் இவ்வாறு விமர்சித்திருக்கலாம்) என்று அழைக்கப்பட்டு அதுவே பின் நாளில் "சீத்தலைச்சாத்தன்" என்று ஆனதாககச் சொல்லப்பட்டு வருகின்றது.

உண்மைக் காரணம் அதுவல்ல,

வெண்பா, ஆசிரியப்பா,கலிப்பா,வஞ்சிப்பா- இவற்றுள் எந்த வகையான பாட்டு எழுத வேண்டும் என்றாலும் சீரும் தளையும் தப்பாமல் வறுவி வர வேண்டும்.இவற்றுள் சீர் தப்பினாலும், தளை தப்பினாலும் பாட்டில் பிழை வந்துவிடும். பிழையில்லாமல் பாட்டு எழுதுவதில் வல்லவரான சாத்தன் அசை,சீர், தளை ஆகிய பாட்டிலக்கண உருபுகளை பயன்படுத்துவதில் வல்லவர் என்பதால் இவரை சீர் தளை என்ற அடைமொழியுடன் "சீர்தளைச்சாத்தன்" என்று அழைக்கல்லாயினர் அதுவே பின் நாளில் "சீத்தலைச்சாத்தன்" என்று அழைக்கப்பட காரணமாயிற்று. --−முன்நிற்கும் கருத்து Kathirmohanraj (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

மணிமேகலை நூலின் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார். எனவே இக் கட்டுரை தக்க இடத்தில் சீர் செய்து இணைக்கப்பட வேண்டும். --Sengai Podhuvan (பேச்சு) 06:41, 9 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

இணைக்கலாம், ஆனால் ஆதாரம் ஏதும் தரப்படவில்லையே. இது பயனரின் சொந்தக் கருத்துப் போல் தெரிகிறது. அவ்வாறென்றால் இதனை நீக்கப் பரிந்துரைக்கிறேன்.--Kanags \உரையாடுக 06:55, 9 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]
அன்புள்ள கனகசீர்! தங்கள் கருத்தினை வழிமொழிகிறேன். என்றாலும் புதியவர்களின் ஊக்கம் குன்றாமல் இருக்கக் கட்டுரையை வழிமாற்றம் செய்துவிடுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 07:20, 9 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]
சீழ்த்தலை என்பதற்கும் ஏதும் தக்க சான்றுகள் இல்லை (கட்டுக் கதைகளைத் தவிர). கதிர்மோகனராசு குறிப்பிட்ட அதே மாற்றுக் காரணப்பெயரையும் கேட்டிருக்கின்றேன். ஆனால் இதுவும் ஒரு கட்டுக் கதையாகவோ, பொருந்தக் கூறிய இட்டுக்கட்டாகவோ இருக்கலாம். இரண்டு கதையும், சீத்தலைச் சாத்தனாரின் பெருமையையே சுட்டுகின்றன (கல்வியின் பாலும் பிழைநேராதிருக்கும் ஒழுக்கத்தின் பாலும் உள்ள ஈடுபாட்டைக் காட்டுகின்றன).--செல்வா (பேச்சு) 05:29, 10 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]