பேச்சு:காவிரி ஆற்று நீர்ப் பிணக்கு
தலைப்பு மாற்றம்
[தொகு]பிரச்சினை என்பது வட சொல். ஆகவே, காவிரி நதி நீர்ப் பிணக்கு என்னும் தலைப்புக்குக் கட்டுரையை நகர்த்தினால் என்ன? --மதனாகரன் (பேச்சு) 15:43, 23 ஏப்ரல் 2012 (UTC)
- நதியும் வடசொல் தான் :) காவிரி ஆற்றுநீர் சிக்கல் என மாற்றலாம். --மணியன் (பேச்சு) 15:57, 23 ஏப்ரல் 2012 (UTC)
சிக்கல் என்பதை விடப் பிணக்கு என்பது பொருத்தமானதாகப் படுகிறது. எனவே, காவிரி ஆற்று நீர்ப் பிணக்கு என்பதே எனது பரிந்துரை.--பாஹிம் (பேச்சு) 17:48, 23 ஏப்ரல் 2012 (UTC)
- காவிரி ஆற்று நீர்ப் பிணக்கு எனும் தலைப்புக்குக் கட்டுரை நகர்த்தப்பட்டது. --மதனாகரன் (பேச்சு) 10:21, 24 ஏப்ரல் 2012 (UTC)
- பிணக்கு எனில் கோபம் என்ற பொருள் வரும். இங்கு சிக்கல் என்று சொல்லை ஆளலாம். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:28, 24 ஏப்ரல் 2012 (UTC)
சிக்கல் என்பதை விட சர்ச்சை, மிகப் பொருத்தமாக இருக்கும் என்பது, என்னுடைய தாழ்மையான கருத்து. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:21, 25 ஏப்ரல் 2012 (UTC)
- வடசொல்லைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே பிரச்சினை என்பதிலிருந்து பிணக்கு என்று மாற்றினோம். மீண்டும் சர்ச்சை என்றின்னொரு வட சொல்லைப் பயன்படுத்துதல் பொருத்தமற்றது. --மதனாகரன் (பேச்சு) 07:37, 25 ஏப்ரல் 2012 (UTC)
- ஏற்கனவே விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில் சர்ச்சை என்ற சொல் பயன்படுத்தப் பட்டிருந்தது, அதன் காரணமாக பரிந்துரை செய்தேன், வேறு சொல் தேடுகிறேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:36, 25 ஏப்ரல் 2012 (UTC)
மேற்கோள்கள் தேவை
[தொகு]இக்கட்டுரையில் மேற்கோள்கள் குறைவாக உள்ளன. ஒரு உட்தலைப்புக்கு ஒரு மேற்கோளாவது இருந்தால் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:21, 25 ஏப்ரல் 2012 (UTC)
"நடுவண்/மத்திய அரசு" -> "ஒன்றிய அரசு"
[தொகு]இக்கட்டுரையில் இந்திய நாட்டின் ஒன்றிய அசினை (Union Govt) நடுவண்/மத்திய அரசு (Central Govt) என குறிப்பிட்டிருந்தனர். இந்திய அரசமைப்புச்சட்டமானது இந்தியாவை "ஒன்றியம்" என்றே அழைக்கிறது, அதுபோல அரசையும் ஒன்றிய அரசு, மாநில அரசு என்றே குறிப்பிடுகிறது. மேலும், இந்திய அரசானது பண்புரீதியாகவும் ஒரு "ஒன்றிய அரசே". ஆதலால், "நடுவண்/மத்திய அரசு" என வரும் இடங்களை "ஒன்றிய அரசு" என மாற்றியுள்ளேன் - பத்மாக்சி (உரையாடுக) 8:42, 18 சூன் 2017 (IST)