பேச்சு:கலன்றாவரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆங்கிலத்தில் தாவரவியலில் tracheophytes என்று அழைக்கப்படும் Vascular plants என்பதைத்தான் திரக்கேயோபீற்றா என்று தலைப்பிட்டு ஆக்கியுள்ளார்கள். செடிகளுக்குத் தேவையான நீர், ஊட்டப்பொருள் முதலியவற்றை, நீர்ம வடிவில் நுண்குழாய் போன்ற இழை வடிவ உள்ளமைப்பு வழியாக எடுத்துச் செல்லும் அமைப்புள்ள தாவரங்கள். tracheo என்பது குழாயைக் குறிப்பதே (குழாய் போன்று நீர்மப் பொருளைக் கடத்தும் இழையங்கள் (திசுக்கள்) கொண்டது). ஆகவே இக்கட்டுரையின் தலைப்பை குழாயகத் தாவரங்கள் எனப்பெயரிடலாமா? திரக்கேயோபீற்றா என்றால் ஒன்றும் விளங்கவில்லை. --செல்வா 17:07, 25 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

கலன் தாவரம் எவ்வாறு கலன்றாவரம் ஆனது:-).--Kanags \உரையாடுக 11:08, 5 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

திரக்கேயோபீற்றா இருந்த தலைப்பை நான்தான் கலன்றாவரம் என்று மாற்றியிருக்கிறேன் போலுள்ளது. திரக்கேயோபீற்றா என்பதை மாற்றும் நோக்கில் தமிழ் விக்சனரியில் பார்த்தபோது, இந்தச் சொல் இருக்கக் கண்டு மாற்றினேன். தவறெனின் மாற்றி விடுங்கள். --கலை (பேச்சு) 22:27, 5 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
கலன் தாவரம் இவ்வாறு தமிழில் புணருமாவெனத் தெரியவில்லை. இதனை எவ்வாறு வ்ளங்கிக் கொள்வது என முதலில் எனக்குப் புரியவில்லை. ஆனாலும், செல்வா சொல்வது போல் குழாயகத் தாவரங்கள் எளிமையாக உள்ளது.--Kanags \உரையாடுக 22:35, 5 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

எனக்கும் கலன் தாவரம் என்று படித்தது நினைவுக்கு வருகின்றது. அதே நேரம் கலன் தாவரம் என்பது கலன்றாவரம் எனப் புணருமா எனத் தெரியாது. யாராவது இலக்கணம் தெரிந்தவர்கள்தான் சொல்ல வேண்டும். காழ், உரியம் என்பவற்றைக் கொண்ட தாவரங்களைக் குழாயகத் தாவரங்கள் என்று கூறும்போது எளிமையாக உள்ளது, உண்மைதான். அதே நேரம் நாம் ஏற்கனவே கற்ற கலன் தாவரம் என்ற பெயர் எப்படி வந்தது என்று அறிய ஆவலாக உள்ளது. ஏனெனில் தமனி, சிரை என்பவற்றையும் குருதிக் கலன்கள் என்று படித்திருக்கின்றோம். அதனால் கலன் என்பதற்கும் குழாய் என்பதற்கும் ஏதாவது தொடர்பு உண்டா எனத் தெரியவில்லை. கலன் என்பது குழாயைக் குறிக்குமா என்பதனை அறிய வேண்டும்.--கலை (பேச்சு) 20:41, 7 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

இலங்கை பாடநூல்களில் கலன் தாவரம் எனும் பதமே பயன்படுத்தப்படுகின்றது. குருதிக் கலன்கள் என்றும் குருதிக் குழாய்களுக்குப் பயன்படுகின்றது. ஆகவே கலன்=குழாய்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:26, 7 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

கலன்றாவரம் என்று வருவது சரியானதே. னகரத்தின் முன் வரும் தகரம் றகரமாகத் திரிபடையும் (ஆதாரம்-138). பிரிமென்றகடு என்ற சொல்லும் ஏற்கெனவே வழக்கிலுள்ளது. இலங்கையில் னகர மெய்யை அடுத்துத் தகரம் வரின், அதனைற் றகரமாக எழுதுவது வழக்கிலுள்ளதே. --மதனாகரன் (பேச்சு) 10:45, 8 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

தகவற்பெட்டியில் மேம்பாடு[தொகு]

ஆங்கில விக்கியின் கட்டுரையிலுள்ள தகவற்பெட்டியை இங்கு பயன்படுத்தி இருந்தாலும், பல தகவல்கள் இங்கு தெரியவில்லை. உழவன் (உரை) 13:22, 14 சனவரி 2024 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கலன்றாவரம்&oldid=3868012" இலிருந்து மீள்விக்கப்பட்டது