பேச்சு:கஜா புயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@Kanags: இலங்கை பரிந்துரைத்த Gaja எனும் பெயரே இந்தப் புயலுக்கு சூட்டப்பட்டுள்ளது. இதற்கு யானை எனப் பொருள் என தமிழக ஊடகங்கள் கூறுகின்றன (கஜமுகன் - பிள்ளையார்). இலங்கையில் இச்சொல் தமிழில் பயன்பாட்டில் இருக்கிறதா அல்லது சிங்களத்தில் பயன்பாட்டில் இருக்கிறதா? அங்கு எவ்விதம் உச்சரிக்கிறார்கள்? கஜா அல்லது கஜ? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:23, 11 நவம்பர் 2018 (UTC)

சிங்களத்தில் இச்சொல் இதே பயன்பாட்டில் உள்ளது. தனித்து எவ்வாறு உச்சரிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஆனாலும், தமிழில் கஜ என உச்சரிக்க முடியாது. தமிழில் கஜா என்பதே சரியான ஒலிப்பாக இருக்கும். இவ்வாறு பல சிங்களப் பெயர்கள் தமிழ் முறையில் இலங்கையில் எழுதும் வழக்கம் உள்ளது (உ+ம்: அம்பாந்தோட்ட, அம்பாந்தோட்டை).--Kanags (பேச்சு) 08:55, 11 நவம்பர் 2018 (UTC)

👍 விருப்பம்; தெளிவான விளக்கத்துக்கு நன்றி! வானிலை ஆய்வு நடுவத்தின் இயக்குனரிடம் "எப்படி உச்சரிக்க வேண்டும்" என நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், "இது இலங்கை தந்த பெயர்... G-a-j-a. நீங்கள் முடிவு செய்துகொள்ளுங்கள்" என பதிலளித்தார்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:01, 11 நவம்பர் 2018 (UTC)

Kanags சொன்னது போல் தமிழில் கஜ என உச்சரிக்க முடியாது. (கஜபதி, கஜேந்திரன்) இவ்விரு பெயர்களைக் கொண்டோர் தங்கள் பெயரை சுருக்கமாக கஜா என்று தான் குறிப்பிடுவார்களோ தவிர கஜ என்னும் பெயரில் குறிப்பிடுவதில்லை. அது சரியான ஒலிப்பாக இருக்காது.--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 09:10, 11 நவம்பர் 2018 (UTC)

@Gowtham Sampath: முடிந்தளவு துல்லியமாக தகவல்களைத் தருவது நமது கடமை. புயலுக்கான பெயர் அலுவல்முறையில் இலங்கையால் வழங்கப்பட்டது. எனவே அந்நாட்டில் எவ்விதம் இப்பெயர் வழக்கத்தில் உள்ளது என்பதனை அறிந்துகொள்ள அவரிடம் கேட்டேன். கஜபதி, கஜேந்திரன் போன்றோர் அவர்களை எவ்விதம் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள் என்பதனை வைத்து கட்டுரைக்கான தலைப்பினை நாம் தீர்மானிக்க இயலாது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:21, 11 நவம்பர் 2018 (UTC)

@Selvasivagurunathan m: தாங்கள் மேலே குறிப்பிட்ட கஜமுகன் (யானை) என்னும் பெயரை சுறுக்கமாக எப்படி கூறலாம் என்று ஒரு எடுத்துக்காட்டுக்கு தான் இப்பெயரைத் இங்கு பதிவிட்டேன், இப்பெயரை வைத்து கட்டுரைக்கான தலைப்பினை தீர்மானிக்க வேண்டும் என நான் குறிப்பிடவில்லையே. நான் மேலே குறிப்பிட்டது கஜ என்பது தமிழில் சரியான ஒலிப்பாக இருக்காது, கஜா என்பது தான் சரியாக இருக்கும் என குறிப்பிட்டேன். --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 09:33, 11 நவம்பர் 2018 (UTC)

கஜமுகன் என்ற சொல்லாடலை நான் ஏன் பயன்படுத்தினேன் என்பதனை மீண்டும் படித்துப் பார்த்தால் நீங்கள் புரிந்துகொள்ளலாம். இது குறித்து மேலும் பேசுவதற்குப் பதிலாக, கட்டுரையில் விரிவாக்கம் செய்வதில் கவனத்தை செலுத்த இருக்கிறேன்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:04, 11 நவம்பர் 2018 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கஜா_புயல்&oldid=2599524" இருந்து மீள்விக்கப்பட்டது