பேச்சு:ஆங்காங்
இக்கட்டுரை ஒங்கொங் விக்கித் திட்டத்தில் ஒரு பகுதியாகும். இது ஏற்கெனவே உருவாக்கப்பட்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், விரிவாக்கவும், சான்றுகள் சேர்க்கவும், புதிய கட்டுரைகளை உருவாக்கவும் போன்ற திட்டங்களை அடிப்படை நோக்காகக் கொண்டது. இதில் நீங்களும் பங்களிக்கலாம். |
|
ஹொங்கொங் என்பதை விட ஹாங்காங் என்பதே சரியாக இருக்குமென எண்ணுகிறேன் వినోద్ வினோத் 17:02, 2 ஏப்ரல் 2008 (UTC)
அங்கு வசிப்பவர்...அவர் எழுதும் கட்டுரைகளில் ஹொங்கொங் என்று பயன்படுத்தியதனால்தான், அப்படி நகர்த்தினே. அந்தப் பயனரின் கருத்து அறிந்து செயற்படலாம். --Natkeeran 17:06, 2 ஏப்ரல் 2008 (UTC)
இந்திய மற்றும் பாக்கிஸ்தானியர்கள் "ஹாங்காங்" என்றே உச்சரிக்கின்றனர். தமிழீழத் தமிழர்களில் அதிகமானோர் "கொங்கொங்" என்று உச்சரிக்கின்றனர். (நான் எனது வலைப்பதிவுகளிலும் அவ்வாறே எழுதுகின்றேன்) இவை தத்தமது பேச்சு வழக்கின் காரணமாக இருக்கலாம் என்பதே எனது கருத்தாகும். ஆனால் இந்த நாட்டில் வசிக்கும் ஆங்கிலேயர், அவுஸ்திரேலியர், கனடியர், பிலிப்பீன், இந்தோனீசியர், வியட்நாம், தாய்லாந்து, ஆப்பிரிக்கர் என எல்லோருமே "ஹொங்கொங்" என்றே உச்சரிக்கின்றனர். ஹொங்கொங் நாட்டினரான (பெரும்பான்மை) ஹொங்கொங் சீனர்களும், சீனச் சீனர்களும் கூட "ஹொங்கொங்" என்றே உச்சரிக்கின்றனர்.
ஆக "ஹொங்கொங்" என்பது ஒரு சீனச் சொல். அதை ஹொங்கொங் நாட்டினரின் பேச்சு வழக்குக்கு அமைவாகவும், மற்றும் அதிக அயல் நாட்டவர்களின் உச்சரிப்பு முறைக்கு அமைவாகவும் எழுதுவதே பொதுப்படையாக இருக்கும் எனும் கருத்தமைவில் "ஹொங்கொங்" என்றே பயன்படுத்தியுள்ளேன்.
இருப்பினும் இந்திய, பாக்கிஸ்தான் உச்சரிப்பிற்கமைவ "ஹாங்காங்" என கூறுவதே சரியென கருதுவது எல்லோரதும் கருத்து எனில் அவ்வாறு செய்யலாம்.
மேலும் இக்கட்டுரைகளுக்கு எனது சொந்த நிழல்படங்களையே பதிவேற்ற நினைத்துள்ளதால் இக்கட்டுரைகளை முழுமைபடுத்தவதின் தாமதத்தைப் பொறுத்துக்கொள்ளவும். நன்றி HK Arun
- ஆங்கொங் என்று எழுதலாமென கருதுகிறேன். எனது பாமர தமிழகத் தமிழனுக்கு புரிந்து எழுத்துக்கள் ஆங்கொங் என்பதே ஆகும். திருநெல்வேலி, கட்டுமரம் என்பது போன்ற அழகியச்சொற்களை, வெள்ளைக்கரான் அவனுக்கு தகுந்த படி மாற்றியது( எம்மொழியழைகைச் சிதைத்தது) போல, நாம் நம் மொழி நடையினையே பின்பற்ற வேண்டும் என்பது என் எண்ணம். இல்லாத ஒலியைக் தமிழுக்கு கொண்டு வருவதைக் காட்டிலும், இருக்கும் தமிழ் ஒளியைப் பின்பற்றுவதே நலமென்பது எமது கருத்து. -(த* உழவன் 14:23, 28 ஜூலை 2009 (UTC))
- ஆங்கொங் பொருத்தமாக உள்ளது. த* உழவனுக்கு நன்றி.--Kanags \உரையாடுக 08:46, 28 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
விக்கிப்பீடியாவில் ஹ ஒலிப்பைக் குறிப்பதற்கு ஃக என எழுதும் வழக்கம் உள்ளதல்லவா? அப்படியானால், ஃகொங்கொங் என்று இதனை எழுத வேண்டும். ஆங்கொங் என்று எழுதுவது தவறு. ஏனெனில், ஆங்கொங் என்பது சீனர்களின் பாரம்பரிய மதங்களுள் ஒன்று கொண்டுள்ள கடவுளர்களுள் ஒருவராகும். அதற்கான ஆங்கிலக் கட்டுரை அதனை ஆங்கொங் எனக் குறிப்பிடுகிறது.--பாஹிம் 02:23, 11 ஏப்ரல் 2011 (UTC)
- சீனம் என்பது ஒரேயொரு மொழியல்ல என்றே கற்கிறேன். சீன வானொலி தமிழ் மூலம் ஒலிகோப்புகளுடன்,சீனத்தை கற்றும் தருகிறது. எனது ஆர்வம் அதிகம் பயன்படும், மண்டரின்சீனத்தைக் கற்பதே ஆகும்.ஒலியில்லாமல், மொழி கற்பது ஆபத்தல்லவா?. அதன்படி இந்த ஒலிகளைக் கேளுங்கள். 1 2.ஒலியிருக்கும் போது, மொழி தேவையில்லை.அந்த கடவுளின் ஒலி மூன்று பகுதிகளை உடையது.இங்கு ஆங்கொங் என்பதன் ஒலி இரு பகுதிகளை உடையதல்லவா? இப்பொழுதுள்ள தலைப்பை பலரும் தவறாகவே ஒலிப்பர் என்பதே எனது முடிவு. இது திருவல்லிக்கேணி என்பதனை ட்ரிப்ளிகேன் என்று சொல்லுவது போல எனக்குள்ளது.≈02:29, 10 சூலை 2011 (UTC)த♥உழவன்+உரை..
உங்கள் குறிப்புக்கு நன்றி, தகவலுழவன். நீங்கள் கொடுத்த முதலாவது சுட்டியில் சீன மொழியில் "சியங் காங்" என்றே கூறுவதைக் கவனித்தேன். எனினும், ஹொங்கொங் என்பதும் சியங் காங் என்பதும் ஒன்றல்ல என்பது தெளிவன்றோ. என்னுடைய சீன நண்பர்களும் வாடிக்கையாளர்களும் ஹொங்கொங் என்றே குறிப்பிடுகின்றனர். மேலும், என் உடன் பிறந்த தம்பி பெய்ஜிங் சீன மொழி மற்றும் கலாச்சாரப் பல்கலைக்கழகத்திலும், பெய்ஹாங் பல்கலைக்கழகத்திலும் ஐந்து ஆண்டுகள் கல்வி கற்றதுடன் பெய்ஜிங்கில் உள்ள எயார்பஸ் நிறுவனத்தில் இளநிலை வான்கல வடிவமைப்புப் பொறியியலாளராகவும் பணியாற்றினார். அவர் சீன (மாண்டரின்) மொழி வழியிலேயே கல்வி கற்றதுடன் மாண்டரின்-ஆங்கிலம்-தமிழ்-சிங்களம் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றுகிறார். அவரும் ஹொங்கொங் என்றே கூறுகிறார். நான் இப்போது இந்தோனேசியாவில் இருக்கிறேன். இன்னும் மூன்று வாரங்களுள் இலங்கைக்குக்குப் பயணிக்க நினைத்துள்ளேன். அப்போது அவரிடம் இது பற்றிக் கேட்டுக் கருத்துக் கூறலாம். மேலும், என் தம்பியுடன் படித்த ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர் என்று என் தம்பி கூறினார். வேண்டுமானால் அவர் பற்றிய விபரமும் பெற்றுத் தரலாம். அப்போது மாண்டரின் மொழிச் சொல் பற்றிய சந்தேகம் தீரும் என நினைக்கிறேன்.--பாஹிம் 01:02, 18 சூலை 2011 (UTC)[பதிலளி]
- மொழியியல் துறையில் உங்களின் அனுபவத்தை, என்னுடைய அனுபவத்தோடு ஒப்பிடும் போது, மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடாகவேத் தோன்றுகிறது. பேச்சுவழக்கில், ஊடகத்துறையில் ஒரு ஒலிப்பானாது மாறுபடும் என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.மற்றொன்று தேடுபொறிகளைக் கணக்கில் கொண்டும், நாம் விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளுக்குத் தலைப்பிட வேண்டுமென்றே உணருகிறேன். ≈06:11, 18 சூலை 2011 (UTC)த♥உழவன்+உரை..
தேடுபொறிகளுக்கு அமைவாகத் தலைப்புக்கள் இருக்க வேண்டும் எனும் உங்களது கருத்து எனக்கும் ஏற்புடையதே. எனினும் ஹொங்கொங் என்பது குறித்து அங்கு வதியும் பயனர் அருண் கூறியுள்ள கருத்துக்களையும் நாம் கவனிக்க வேண்டும். அவ்வாறே, இங்கே இந்தோனேசியாவில் உள்ளோரும் ஹொங்கொங் என்றே கூறுகின்றனர். இங்கும் சீன இனத்தினர் வசிக்கின்றனர். மாண்டரின் வகுப்புக்களும் இருக்கின்றன. சுகர்னோ-ஹத்தா விமான நிலையத்தில் சீன மொழியிலும் அறிவித்தல்கள் செய்யப்படுகின்றன. இங்கு இந்தோனேசியாவில் உள்ள தமிழர்களில் பலருக்குத் தமிழ் தெரியாது அல்லது தமிழ்ப் பேச வராது என்பது கவலைக்குரிய செய்தி. சென்ற வாரம் இந்திய உணவு தேடப் போய், ஒரு தமிழ்க் குடும்பத்தைச் சந்தித்தேன். அவர்கள் நான் இருக்கும் இடத்துக்கு அருகிலேயே கடை வைத்துள்ளனர். அவர்களில் கணவன், மனைவி இருவரும் நன்கு தமிழில் பேசுகின்றனர். அவர்களது பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பேசத் தெரியவில்லை. அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதுமில்லை. இத்தனைக்கும் அவர்களது குடும்பங்கள் சில பத்தாண்டுகளுக்கு முன்னர் சென்னையிலிருந்து இடம்பெயர்ந்தவை. அவர்ளைப் பொறுத்தவரையில் தமிழ், இந்தி அல்லது வேறெந்த இந்திய மொழியானாலும் அது அவர்களுடைய மொழி. எனினும், அதனைக் கற்க வேண்டுமென்ற ஆர்வம் சிறிதும் இல்லாமலுள்ளது.--பாஹிம் 06:37, 18 சூலை 2011 (UTC)[பதிலளி]
தமிழ் யாருடைய சொத்து
[தொகு]ஹொங்கொங் என்பது தான் சரியானது. தமிழ் 2000 ஆண்டுகளுக்கு முன் கிரந்தம் பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம். அது அந்த ஆதிகாலத்திற்கு பொருத்தமாக இருக்கும். அதன்பிறது தமிழ் படிப்படியாக வளர்ந்ததன் பின்னர் தான், ஆதிகால தமிழில் இல்லாத உச்சரிப்புகளுக்கு கிரந்தம் உருவாக்கப்பட்டது. எதற்கு எடுத்தாலும் தொல்காப்பியத்தை உதாரணமாக கூறுவோர், தொல்காப்பியம் உருவான காலத்தில் இருந்த எழுத்து இன்று எந்தளவு மாறி இருக்கிறது என்பதை பார்க்கவேண்டும். எழுத்தில் உருவமே மாறும் போது, இன்னும் தொல்காப்பிய முறைகளையே பிடித்து தொங்கிகொண்டு இருப்பவர்கள் மனநோயாளிகள். 2000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் இருக்கவில்லை. கிறிஸ்த்தவர்கள் இருக்கவில்லை. இன்று தமிழ் மொழி பல்வேறு மதப்பிரிவினரையும் உள்ளடக்கிய மொழி. அது எல்லா மதத்தினருக்கும் சொந்தம். இன்னும் இந்துவாகவே இருப்பவர்கள் நினைப்பது போன்று மொழியை மாற்ற முடியாது. அதற்கென்று முஸ்லீம்கள் தனிதமிழ் பெயரெல்லாம் வைக்கமுடியாது. மொஹமட் என்பதை "முகமது", அஹமட் என்பது "அகமுது" என்றெல்லாம் எழுதமுடியாது. கிரந்தம் கலந்து எழுதக்கூடாது என ஒரு கட்டாயம் வந்தால், தமிழ் மேலும் இரண்டாக உடையும் அல்லது அழியும். --மொஹமட் 03:33, 11 ஏப்ரல் 2011 (UTC)
ஹொங்கொங் என்பது சரியானது. இந்தியர்களுக்கு ஒ வராது அதனால் ஹாங்காங் என்கிறார்கள். கிரந்தம் தவிர்ந்து எழுதுவதாக நினைத்து இந்திய பேச்சின் படி ஆங் ஒரு பாதியும், இலங்கை பேச்சின் படி கொங் ஒரு பாதியும் கலந்து (ஒரு இந்திய தமிழரும் ஒரு இலங்கை தமிழரும் சேர்ந்து) ஒரு நாட்டின் பெயரை திண்டிக்கிறார்கள். இதை பார்த்தால் சிரிப்புதான் வருது. --மொஹமட் 03:40, 11 ஏப்ரல் 2011 (UTC)
இந்த எழுத்துச் சீர் திருத்தங்களைக் காரணம் காட்டி விக்கிபீடியாவுக்குப் பங்களிக்க மறுப்பவர்களும், தமிழ் விக்கிபீடியாவில் அதிருப்தி கொள்பவர்களும் கணிசமாக உள்ளனர்.
--Chandravathanaa 07:14, 18 சூலை 2011 (UTC)[பதிலளி]
தமிழ்விக்கிபீடியா பற்றி ஒரு எழுத்தாளர் எனக்கு எழுதியதின் ஒரு பகுதி
தமிழில் கிரந்த எழுத்துக்களை களைவதில் எனக்கு உடன்பாடில்லை. ஷேக்ஸ்பியரை செகப்பிரியர் என்றும் ஜேர்மனியை சேர்மனி/யேர்மனி என்றோ எழுதப்புகின் அடுத்த தலைமுறையில் அவை வேறு ஏதோ நாடுகள், மனிதர்கள் என்ற குழப்பத்தை ஏற்படுத்தும் அபாயம் உண்டு. இன்னும் Jahn Paul Satre ஐ=> ழான் போல் சாத்தர் என்றும் எழுதுகிறார்கள். ஆனால் Juliet ஐ=> ழூலியற் என்று எழுதுவதில்லை...
--Chandravathanaa 07:22, 18 சூலை 2011 (UTC)[பதிலளி]
- சந்திரவதனா, கிரந்தம் களைப்பு குறித்து எனக்கு தனி கருத்து கிடையாது. கிரந்தம்/கிரந்தமற்ற இரண்டும் இரு வேறு எழ்த்துப்பெயர்ப்பு முறைகள், வேண்டுமென்போர் எதை வேண்டுமென்றாலும் பயன்படுத்தட்டும் என்றே பார்க்கிறேன். இதில் ஒன்றை பயன்படுத்துவது ஒன்றும் சிரமமல்ல. நான் விக்கிப்பீடியாவுக்கு வெளியில் எழுதும் போது முழுக்க கிரந்தத்தைத் தான் பயன்படுத்துகிறேன். இங்கு எழுதும் போது தவிர்த்து விடுகிறேன். ஆங்கில விக்கிப்பீடியாவில் manual of style விதிகள் இதை விடக்கடுமையானவை. அங்கெல்லாம் ஆட்கள் எழுதிக்கொண்டு தானே இருக்கிறார்கள். நம்மாட்களிடம் நாம் எழுதுவதைப் பிறர் மாற்றுவதை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை குறைவு, அதனால் தான் கிரந்தத்தை மாற்றினால் கோபம் வருகிறது. இவர்களேல்லாம் கிரந்தம் எழுத விட்டால் விக்கிப்பீடியாவில் பங்களிப்பார்கள் என்பது மாயை. நமக்கு அன்னியமான ஒரு manual of style க்காக நமது மொழி நடையை விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லையேல் அவர்களால் என்றுமிங்கு எழுத இயலாது.
- jean paul sartre இல் வரும் “ஜா”வும் juliet இல் வரும் “ஜா”வும் ஒன்றல்ல. jean paul, j வுக்கு கிரந்தத்திலும் எழுத்து கிடையாது. இதில் ஜ வைப் பயன்படுத்தினாலும் வேறு ஒலி தான் ழ வைப் பயன்படுத்தினாலும் வேறு ஒலி தான். பிரெஞ்சு தமிழறிஞர் Jean-Luc Chevillard தன் பெயரை ழான் என்று தான் எழுதிக் கொள்கிறார். புதிய ஒலிகளைக் குறிக்க கிரந்தம் தான் பயன்படுத்தவேண்டுமென்று தேவையில்லை (f ஐக் குறிக்க ஆய்தத்தைப் பயன்படுத்தி பழகவில்லையா. இது 1940 களில் கொண்டுவரப்பட்ட மாற்றமே). கிரந்தக் களைப்பாளர்கள் செய்யும் வேலை ஒரு புறம் எரிச்சலைக் கொடுத்தாலும், கிரந்த ஆதரவாளர்கள் செய்வது இன்னொரு புறம் எரிச்சலை ஏற்படுத்துகிறது. தமிழை முழுமையாக்க கிரந்தம் ஏதோ சர்வ ரோக நிவாரணி போல இங்கு பரிந்துரைக்கப்படுகிறது. Nazi யை “நாஜி” யாக்குவது, ச வுக்கு பதில் பாம்பு போல “ஸ்” போட்டு எழுதுவது (சில இடங்களில் ஷ வேறு) போன்ற வேலைகளையும் அவர்கள் செய்து வருகின்றனர். இதைவிடக் கொடுமை, உங்கள் ஊர் யொஹானை இங்கு ஜொஹான் என்று தான் எழுதுவது என்று அடம்பிடிப்போர் இருப்பது தான். --சோடாபாட்டில்உரையாடுக 10:16, 18 சூலை 2011 (UTC)[பதிலளி]
//இவர்களேல்லாம் கிரந்தம் எழுத விட்டால் விக்கிப்பீடியாவில் பங்களிப்பார்கள் என்பது மாயை.//
+1. தவிரவும், இங்கு கிரந்தம் எழுதக்கூடாது என்று எந்தக் கொள்கையும் வற்புறுத்தலும் இல்லை. கிரந்தம் தவிர்க்கலாமே என்று சில பயனர்கள் பேச்சுப் பக்கத்தில் செய்தி விடுக்கலாம். அதை ஏற்பதும் தவிர்ப்பதும் பயனர்களின் தனிப்பட்ட தெரிவே. கிரந்தப் பிரச்சினையால் தமிழ் விக்கியில் எழுதுவதில்லை என்பவர்கள் கிரந்தம் கலந்தும் எழுதும் வாய்ப்புகள் குறைவே. தமிழ் விக்கிக்கு வெளியேவும் கூட இதே போன்ற அறிவு சார் கட்டுரைப் படைப்புகளில் அவர்கள் ஈடுபடுவதில்லை. இங்கு கிரந்தப் பிரச்சினை என்பது ஒரு மேலோட்டமான குற்றச்சாட்டும் ஒரு சாக்குப் போக்கும் மட்டுமே--இரவி 10:52, 18 சூலை 2011 (UTC)[பதிலளி]
உங்கள் பதில்களுக்கு நன்றி.--Chandravathanaa 20:42, 18 சூலை 2011 (UTC)[பதிலளி]
உங்கள் ஊர் யொஹானை இங்கு ஜொஹான் என்று தான் எழுதுவது என்று அடம்பிடிப்போர்
இது புரியவில்லை.
- "ஆங்கொங்" என்று தலைப்பிடுவது தவறு; ஆங்கொங் எனும் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் உள்ளது. கந்தோனிசு மொழியில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ஒலிப்புச்சொற்கள் நிறையவே உள்ளன. ஒரே ஒலிப்பு சொல்லை ஒன்பது தொனியில் (Cantonese has 9 tones and 3 base tone levels.) ஏற்ற இறக்கத்துடன் ஒலிக்கப்படும் மொழி கந்தோனிசு மொழி. (மந்தரின் கொஞ்சம் எளிது) ஒலிப்பு சற்று மாறுபட்டால் பொருள் வேறாகிவிடும். இதன் ஒலிப்புகள் அனைத்தையும் ஐபிஎல் எழுத்துக்கள் கொண்டும் எழுதிகாட்ட முடியாது. தாய்மொழி அல்லாதோருக்கு அடித்துப் போட்டாலும் பிழையின்றி இம்மொழியை ஒலிக்கமுடியாது, அந்தளவு ஒலிப்பு கடினமான மொழி. பார்க்க: Tone Conversion
- எழுத்தளவிலும் hongkong, ongkong, hangkong, hangkang, angkong, hungkong, hungkand என பல சொற்கள் உள்ளன. பார்க்க:
- ஹாங்கொங் (ஆங்கொங்) Nanchang Hangkong University Hangkong
- ஹங்காங்' Hung Kang Teochew Restaurant Hung Kang
- ஆங்கொங் சீன ஆண் பெயர் Ang kong
- அதனாலேயே நான் "ஹொங்கொங்" என்றே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றேன். இருப்பினும், கிரந்தம் களைந்து எழுதுவதாக இருந்தால் இலங்கை ஒலிப்பு வழக்கிற்கு அமைய (Holland> ஒல்லாந்து என்பது போன்று) ஹொங்கொங்> ஒங்கொங் எனவும், இந்திய ஒலிப்பு வழக்கிற்கு அமைய ஹாங்காங்> ஆங்காங் எனவும் எழுதலாம் என பரிந்துரைக்கின்றேன். (ஏனைய வழிமாற்றுகளும் அவசியமில்லை) --HK Arun (பேச்சு) 11:14, 2 சனவரி 2013 (UTC)[பதிலளி]
- அப்படியே வழிமாற்றின்றி நகர்த்தியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 11:31, 2 சனவரி 2013 (UTC)[பதிலளி]
- எல்லாம் சொல்லி விட்டு கடைசியில் கட்டுரை முழுதும் ஒங்கொங் என்றே எழுதப்பட்டிருக்கிறதே! ஊர்ப் பெயர்களை அப்படியே ஹாங்காங் என்பது போலவே விட்டு விடலாம் --பயனர்:மாயவரத்தான்