பேச்சு:அய்யாவழி
|
சிறப்புக் கட்டுரை
[தொகு]இக்கட்டுரை, விக்கிபீடியா:சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கப்படக் கோரி நியமிக்கப்பட்டிருக்கிறது. இக்கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்களை இதன் நியமனத் துணைப்பக்கத்தில் பதியுங்கள். ஒரு சிறப்புக் கட்டுரை விக்கிபீடியாவின் சிறப்பிற்கு சான்றாய் அமைந்திருக்க வேண்டும். சிறப்புக் கட்டுரைக்கான தகுதிகளைப் பார்க்கவும். |
இந்த சமயத்தை, பெருவாரியான மக்களின் பின்பற்றுதலைக் கொண்ட பிற சமயங்கள் வரிசையில் பட்டியலிடுவதில் எனக்கு அவ்வளவாக உடன்பாடு இல்லை. (நான் எந்த ஒரு வகுக்கப்பட்ட சமயத்திலும் ஈடுபாடு கொள்ளாதவன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.)
இந்த யாஹூ தேடல் மற்றும் இந்த கூகிள் தெடல் ஆகியவற்றைப் பார்க்கும்போது இந்த சமயத்திற்கான அங்கீகாரம் விக்கி பக்கங்களிலிருந்தும் அவற்றின் ஆடிகளிலிருந்தும் மட்டுமே கிடைப்பது தெரிகிறது. மேலும், இந்த விக்கி கட்டுரைகளும் சில சிறிய எண்ணிக்கையிலான பயனர்களால் மட்டுமே தொகுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. -- Sundar \பேச்சு 06:32, 9 ஜனவரி 2006 (UTC)
I also share sundar's opinion word by word--ரவி 09:51, 9 ஜனவரி 2006 (UTC)
நானும் சுந்தரின் கருத்துடன் உடன்படுகிறேன். உண்மையில் இரு தினங்களுக்கு முன் நீங்கள் குறிப்பிடும் பட்டியலிலிருந்து நீக்கினேன். ஆனாலும், மற்றவர்களுடைய கருத்தை அறியாமல் நீக்குவது முறையற்றதாகையால் திரும்பவும் இக் கட்டுரையைப் பட்டியலில் சேர்த்தேன். Mayooranathan 14:58, 9 ஜனவரி 2006 (UTC)
- ஆம். நானும் அதை கவனித்தேன். அதன் பின்னரே, இக்கருத்தை இங்கு எழுப்பினேன். ஆங்கில விக்கியிலும் இதே பயனர் தன் சொந்த கருத்தை அல்லது ஒரு மிகச் சிலரின் கருத்தைப் பரப்பி வருகிறார். -- Sundar \பேச்சு 05:01, 10 ஜனவரி 2006 (UTC)
அய்யாவழி அரசு ரீதியாக தனி சமய அங்கீகாரம் பெறாது இருப்பதால் நீங்கள் வெளியிடும் கருத்து ஞாயமற்றதாக தெரியவில்லை.
ஆனால்
- முதலாவதாக, இச்சமயம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் கெரளாவிலும் (சில பகுதிகள்) சொல்லக்கூடிய வகையில் மக்கள் தொகையை கொண்டுள்ளது. (உத்தேஸமக 10 லட்சத்துக்கு மேல்).
- இரண்டாவதாக, இச்சமயத்தை பின்பற்றுபவர்கள் வேறு எந்த இந்து சமய ஆலயதிர்க்கு செல்வதோ வழிபடுவதோ கிடையது.
- மூன்றாவதாக வைகுண்டரை மட்டுமே வழிபடவேண்டிய கடவுளாக கூறுகிறது. (மற்ற இந்து மதம் இதை ஒத்துக்கொள்வதில்லை).
- அடுத்ததாக சமயச்சடங்குகளையோ, இறையியலையோ, போதனைகளையோ பாற்க எண்ணற்ற வெறுபாடுகள் புலப்படும். மேலும் கந்தபுராணம், ராமாயணம், மஹாபாரதம் உட்பட பல புரணங்களுக்கு அய்யாவழி மறுஉருவம் கொடுப்பதை காணமுடிகிறது.
இவை அனைத்தையும் ஆராயும்போது அய்யாவழி வெறும் இந்து சமயத்தின் உட்பிரிவு என்பது ஏற்புடையதாக தெரியவில்லை. இதற்கு அகிலத்திரட்டில் மேலும் பல எண்ணற்ற சான்றுகள் உள்ளன.
மேலும் இச்சமயம் பற்றிய கருத்துக்கள் விக்கிபீடியாவில் மட்டுமே உள்ளது என்று பயனர் சுந்தர் கூறுவது தவறானதாகும். இதற்கு ஆங்கில விக்கிபீடியாவில் 3 external link-கள் கொடுக்கப்பட்டுள்ளதை காண்க. - வைகுண்ட ராஜா 22:07, 22 ஜனவரி 2006 (UTC)
- தங்கள் விளக்கமான மறுமொழிக்கு நன்றி, வைகுண்ட ராஜா. அய்யாவழி என்ற தனிப்பட்ட கட்டுரை இடம்பெறுவதை குறித்து எனக்கு எந்த தயக்கமுமில்லை. ஆனால், அதிகாரப்பூர்வமாக பின்பற்றுவோர் எண்ணிக்கை அறியப்படாத இச்சமயத்தை உலக சமயங்கள், இந்திய சமயங்கள் பட்டியலில் சேர்ப்பதில் தான் எனக்கு உடன்பாடில்லை. ஆங்கில விக்கிபீடியாவில் கொடுக்கப்பட்டுள்ள வெளி இணைப்புகளும் ஒரு பக்கச்சார்புடையனவாய் தோன்றுகிறதே தவிர, நடுநிலைத்தன்மை வாய்ந்ததாய் தோன்றவில்லை. --ரவி 03:19, 23 ஜனவரி 2006 (UTC)
அய்யாவழி பற்றிய கட்டுரை இருப்பது பற்றி ஆட்சேபணை அதிகம் இருக்காது என்று நினைக்கிறேன். ஆனால் சமயங்களின் பட்டியலில் இடம் பெறச் செய்வதற்கு அதற்குப் பரவலாகப் போதிய அங்கீகாரம் இருக்க வேண்டியது அவசியம். Mayooranathan 14:12, 23 ஜனவரி 2006 (UTC)
ஆக அனைவரும் தனி சமய அங்கீகாரம் ஒன்றையே குறையாக கருதுகிறீர்கள். அல்லவா?
எனில், நீங்கள் சொல்வது 'உலகின் முக்கிய சமயங்கள்' (Major World Religions) என்ற பட்டியலுக்கே பொருந்துவதாகத்தெரிகிறது. ஏனெனில் அது ஒன்றெ பின்பற்றுவோரின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டியலிடப்படுகிறது. எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டியலிடப்படும் ஒன்றுக்கே அரசு பதிவும், அரசு அங்கீகரம் பெற்ற பின்பற்றுவோரின் பட்டியலும் அவசியம். 'சமயங்கள்' (Religions) என்ற பட்டியலுக்கல்ல. ஏனெனில் சமயம் என்பது அதன் வழிமுறைகளும் கோட்பாடுகளும் மாற மாற புது வடிவம் பெறும் அல்லவா? அவ்வாறு புது வடிவம் பெற்ற ஒன்றை பழைய நிலைக்குரிய பெயரிட்டு அழைப்பது தவறானதாகும். - வைகுண்ட ராஜா 20:14, 23 ஜனவரி 2006 (UTC)
- வைகுண்ட ராஜா, உங்கள் கேள்வி சரியே. ஆனால், பெரிய பின்பற்றுதலைக் கொண்ட சமயங்களிடையே அயாவழியை மட்டும் சேர்த்தால் அது தவறான கருத்தை வெளிப்படுத்தக் கூடும். வேண்டுமானால் அப்பட்டியலை இரண்டாகப் பிரித்துவிடலாம்.
மேலும், நீங்கள் இக்கட்டுரையை தமிழாக்கம் செய்தது நன்று. -- Sundar \பேச்சு 05:21, 26 ஜனவரி 2006 (UTC)
Dualism என்ற ஆங்கில வார்த்தையை 'இருகூறிறையியல்' என தமிழில் கொள்ளுதல் சரியானது தானா? - வைகுண்ட ராஜா 21:32, 26 ஜனவரி 2006 (UTC)
How about இரு பொருள் வாதம், இரு பொருள் உண்மை? --Natkeeran 22:03, 26 ஜனவரி 2006 (UTC)
- தாங்கள் கூறுவது (இரு பொருள் வாதம்) இன்னும் பொருத்தமானதாக தெரிகிறது. இதற்கு மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள்? - வைகுண்ட ராஜா 00:26, 29 ஜனவரி 2006 (UTC)
- வேறு எந்த கருத்துக்களும் இல்லாததால் உங்கள் கருத்தை (இரு பொருள் வாதம்) பயன்படுத்துகிறேன். நன்றி - வைகுண்ட ராஜா
உரையாடல்கள்
[தொகு]அய்யாவழி - நற்கீரன் வைகுண்ட ராஜா உரையாடல்கள்
கேள்விகள், முரண்கள்
[தொகு]இந்து சமயத்திலிருந்து வெகுவாக வேறுபடுவதாலும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதன் கடும் வளர்ச்சி காரணமாகவும் இது தனி சமயமாக கருதப்படுகிறது.
- இந்து சமயமே சரியாக வரையறைக்கு உட்படாத சமயமாக இருக்கும் பட்சத்தில், அய்யாவழி அதிலிருந்து வேறுபடுகிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தவிர, கடும் வளர்ச்சி நீங்கள் குறிப்பிடுவதை அதிகாரப்பூர்வமான நடுநிலையான் புள்ளியியல் தரவுகளை கொண்டு நிரூபிக்க வேண்டும்.
இந்து மதம் ஏற்றுக்கொள்ளும் ஜாதி முறையை இவ்வுகத்துக்கு பொருந்தாதது என நிராகரிக்கிறது.
- இந்து மதம் சாதி முறையை ஏற்கிறது என்பதற்கு என்ன சான்று? சாதி முறையை ஒரு சமூக அவலமாகத் தான் பார்க்க வேண்டும், சமயம் சார்ந்து அல்ல.
அய்யாவழி குரோணி என்னும் அசுரனை கூறுவதன் மூலம் இந்து மதத்திடமிருந்து வெகு தூரம் பிரிந்து செல்கிறது.
- விளங்கிக் கொள்ள இயலவில்லை!!!
அய்யாவழி உதயமாகி 170 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அது ஒரு மாற்று சமய-சமுதாய அமைப்பு முறையாக விளங்குகிறது. மற்ற சமயங்களுக்கு மத்தியில் - வண்ணமயமான வரலாற்றை பெற்றுள்ள இந்து சமயம், புதிதாக அறிமுகமாயிருக்கும் கிறிஸ்தவம், அவ்வளவாக அறியப்படாத இஸ்லாம், ஆழமாக வேரூன்றியுள்ள சிறு தெய்வ வழிபடுகள் - இவைகளுக்கு மத்தியில் அய்யாவழி ஒரு மாற்று சமய-சமுதாய அமைப்பாக அதன் பிறப்பிடத்தில் உருவெடுத்து நிற்கிறது.
- அய்யாவழி 170 ஆண்டுகள் முன்னர் தோன்றியதாக இருக்கும் பட்சத்தில், நிச்சயம் கிறிஸ்தவமும் இஸ்லாமும் அதற்கு முன்னரே கடலோர மாவட்டமான குமரியிலாவது அறிமுகமாகியிருக்க வேண்டும். இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தின் தாக்கத்தை கட்டுரை குறைத்து மதிப்பிடுவதாகவே தோன்றுகிறது
அது மட்டுமல்லமல் சமுதாயப்பார்வை மூலம் பார்த்தால் பொதுவாக சீர்திருத்த அமைப்புகள் இந்தியாவில் ஆங்கிலேயர்களால் ஆதரிக்கப்பட்டிருக்கும்.
- இக்கூற்று மிகைப்படுத்திய பொதுமைப்படுத்தல் ஆகும்.
கட்டுரை ஆசிரியரே இனங்கண்டு திருத்தக்கூடிய, எண்ணற்ற எழுத்துப் பிழைகள் கட்டுரையில் உள்ளன.
மேற்கண்ட கேள்விகள், முரண்கள், குறைகளை நீக்க முயன்று பின்னர் மீண்டும் சிறப்புக்கட்டுரைத் தகுதி கோரி நியமிக்கலாம். நம்பத் தகுந்த , பக்க சார்பற்ற வெளியிணைப்புகள், ஆதாரங்களைத் தர வேண்டியது இன்றியமையாததாகும்--ரவி 09:07, 9 ஜூன் 2006 (UTC)
- அய்யாவழி பற்றிய பல விமர்சனங்கள் ஆங்கில விக்கிபீடியவில் எழுந்து தற்போது நிறைவடைந்து வருவதாக தோன்றுகிறது. நான் தற்போதைய ஆங்கில அய்யாவழி கட்டுரையை இங்கே மொழிபெயர்த்து கொடுப்பதன் மூலம் இப்பிழைகளை திருத்தவும் இக்கேள்விகளுக்கு விடையளிக்கவும் முடியும். விரைவில் செய்கிறேன். - வைகுண்ட ராஜா
- இந்து சமயத்தில் ஜாதி முறை வருணாஸ்ரம தர்மம் என்னும் பெயரில் அறியப்படுகிறது. வருணாஸ்ரம தர்மம் இந்து சமயத்தின் புனித நூலான மனு நீதியின் கருப்பொருளாகும். ஒரு சமயத்தின் புனித நூலில் அச்சமயத்தின் அடித்தளம் அல்லவா? எனில் வேறு என்ன சான்று வேண்டும்?
- மேலும் அய்யாவழியின் தனித்துவம், ஆங்கில விக்கிவில் பல்கலைக்கழாகா வேளியீடுகளீலிருந்துஆதாரா காட்ட்டப்பட்டு உள்ளன. இங்கே அவை மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன.
- அய்யாவழி உதயமாகி 170 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அது ஒரு மாற்று சமய-சமுதாய அமைப்பு முறையாக விளங்குகிறது. மற்ற சமயங்களுக்கு மத்தியில் - வண்ணமயமான வரலாற்றை பெற்றுள்ள இந்து சமயம், புதிதாக அறிமுகமாயிருக்கும் கிறிஸ்தவம், அவ்வளவாக அறியப்படாத இஸ்லாம், ஆழமாக வேரூன்றியுள்ள சிறு தெய்வ வழிபடுகள் - இவைகளுக்கு மத்தியில் அய்யாவழி ஒரு மாற்று சமய-சமுதாய அமைப்பாக அதன் பிறப்பிடத்தில் உருவெடுத்து நிற்கிறது.
- இச்சொற்றொடர்கள் குமரி மாவட்டத்தின் பார்வையிலிருந்து எல்லா சமயங்களையும் பார்ப்பதாக அமைந்திருக்கிறது. அதாவது இம்மாவட்டத்தில் இந்து சமயத்துக்கு வண்ணமயமான வரலாறு உண்டு. கிறிஸ்தவம் ,இஸ்லாம் ஆகின (இந்து சமயத்துடன் ஓப்பிடுகையில்) புதிது. இதனூடன்ன் அய்யாவழி ஒப்பிடப்ப்பட்டிருக்கிறது. ஆவ்வளவு தான். ஒரு சமயத்தையும் குறைத்து மதிப்பீடு செய்யவில்லை.
- மேலும்,
- அது மட்டுமல்லமல் சமுதாயப்பார்வை மூலம் பார்த்தால் பொதுவாக சீர்திருத்த அமைப்புகள் இந்தியாவில் ஆங்கிலேயர்களால் ஆதரிக்கப்பட்டிருக்கும்.
- இச்சொற்றொடரில் வெளிப்படுவது எனது சொந்த கருத்து அல்ல பல்கலைக்கழக வெளியீட்டினது, கட்டுரையில் ஆதாரம் காட்டப்பட்டுள்ளது. - வைகுண்ட ராஜா 18:43, 2 ஜனவரி 2007 (UTC)
61.1.210.139
[தொகு]இவர் மூன்று உசாத்துணகளையும் மேலும் சில வசனங்களையும் நீக்கியுள்ளார்.--டெரன்ஸ் \பேச்சு 02:34, 19 ஆகஸ்ட் 2006 (UTC)
புற இணைப்புகள்
[தொகு]- [1]
- [2]
- [3] - இவ்விணைப்புஒரு பொது அலசலானாலும் இதிலும் சில பயனுள்ள தகவல்கள் இருப்பது போல் தோன்றுகிறது. இவ்விணைப்பில் "அய்யா", "வைகுண்டர்" ஆகிய பதங்களை தனித்தனியாக Search செய்து படித்தால் எளிதாக இருக்கும்.
- [4] - இவ்விணைப்பிலும் அய்யா பகுதியை search செய்து பார்க்கவும்.
- [5] இதில் அய்யாவழி என்னும் பதத்தை தேடல் செய்து Pஅர்க்கவும்.
- [6] அய்யாவழி சமய வரலாறு.
பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
[தொகு]தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!