விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு/அய்யாவழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அய்யாவழி[தொகு]

அய்யாவழி கட்டுரை நல்ல கட்டுரைதான். எனினும் அதில் சில குறைபாடுகள் உண்டு. அவற்றை விரைவில் முன்வைக்கின்றேன். அக்கட்டுரையை சிறப்பு கட்டுரை ஆக்க முன்மொழிவதன் மூலம் பிறருடைய கவனத்தையும் இக்கட்டுரை மீது வரவழைத்து, மேம்படுத்தி சிறப்பு கட்டுரையாக்கலாம் என்று நம்புகின்றேன். --Natkeeran 05:41, 9 ஜூன் 2006 (UTC)

சிறப்புக் கட்டுரையாக்கப்படுவதற்கு நல்ல வாய்ப்புள்ள கட்டுரை. தகுதிகளில் இனி, வெளிமேற்கோள்களைக் கட்டாயமாக்கலாம் என்று கருதுகிறேன். வைகுண்ட ராஜா இங்கே தந்துள்ள மேற்கோள்களை இங்கே தேவையான இடங்களில் தந்தோமானால் நன்று. -- Sundar \பேச்சு 07:11, 9 ஜூன் 2006 (UTC)
இக்கட்டுரை முழுக்க ஒரே பயனரால் எழுதப்பட்டிருப்பதாலும். இதில் உள்ள தகவல்களை உறுதி செய்ய நடுநிலையான வெளியிணைப்புகள், ஆதாரங்கள் எதுவும் இல்லாததாலும், கட்டுரையின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வாய்ப்பில்லை. தவிர, கட்டுரையில் எண்ணற்ற எழுத்துப் பிழைகள், கருத்து முரண்பாடுகள் உள்ளன. மேற்கண்ட குறைகளை போக்க வைகுண்ட ராஜா முயலலாம். அதுவரை, இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக ஆக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. --ரவி 08:39, 9 ஜூன் 2006 (UTC)
பயனர் ரவி எடுத்துரைத்த குறைபாடுகள் இக்கட்டுரையில் இருப்பதை ஒப்புக்கொள்கிறேன், நிவிர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.
மேலும் எனது கருத்துக்களை ஏற்றுக்கொள்வீர்களானால் ஒன்றைக் கூற முயல்கிறேன். சிறப்புக் கட்டுரைகளாக தேர்ந்தெடுக்கப்படுபவைகளுக்கு மேலும் ஒரு விதிமுறையை அமலாக்கினால் நன்று என்று நினைக்கிறேன். அதாவது, சிறப்பு கட்டுரையாக்க கோரப்படுபவை, சிவப்பு இணைப்புகள் (Red Links) அற்றவைகளாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு கட்டுரையை முழுமையாக ஒருவருக்கு புரியவைப்பதில் அக்கட்டிரையின் உள்ளிணைப்புகளுக்கு பெரும்பாலும் முக்கிய பங்கு உண்டு. அவ்வகையில் சிறப்புக் கட்டுரை இன்னும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஏனெனில் தமிழ் விக்கிபீடியாவின் 2,901 (தற்போதய நிலவரம்)கட்டுரைகளில் சிறந்த கட்டுரை ஒரு நபருக்கு அது தொடர்புடைய விடயங்களை சிறந்த முறையில் கற்பிக்க (Should be best informative)வேண்டும் - வைகுண்ட ராஜா 22:40, 11 ஜூன் 2006 (UTC)

வைகுண்ட ராஜா, சிறப்புக் கட்டுரையில் சிகப்பு இணைப்புகள் இல்லாமல் இருப்பது மிகவும் விரும்பத்தக்க ஒன்று தான். அய்யாவழி போன்ற, பல பயனர்களுக்கு புதிதாக இருக்கும் கருத்துக்களை விளக்கும் கட்டுரைகளில், இது மிகவும் இன்றியமையாததாகும். எனினும், தற்பொழுது விக்கிபீடியாவுக்கான பங்களிப்பளர்கள் மிகவும் குறைவாக இருப்பதனால், இத்தேவையை சிறப்புக் கட்டுரைக்கான தகுதிகளில் ஒன்றாக கொள்வதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. நீண்ட கால நோக்கில், உங்கள் ஆலோசனை முற்றிலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. எனினும், எல்லா கட்டுரைகளிலும், குறிப்பாக சிறப்புக் கட்டுரைகளிலாவது சிகப்பு இணைப்புகளை நீக்க பங்களிப்பாளர்களை வேண்டிக்கொள்வோம்--ரவி 08:35, 16 ஜூன் 2006 (UTC)