பேச்சு:அடையாளச் சின்னம்
Appearance
இப்பக்கத்தை இலச்சினை என்று மாற்ற பரிந்துரைக்கிறேன்.--−முன்நிற்கும் கருத்து Neechalkaran (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- இலச்சினை தமிழ்ச் சொல் தானா?--Kanags \உரையாடுக 02:59, 6 ஏப்ரல் 2012 (UTC)
- அடையாளச் சின்னம்(ஓரிடத்துப் பொருளைக் குறிக்கிறது) என்பது சரியான சொல் இல்லை என நினைக்கிறேன். இலச்சினை தூய தமிழ்ச் சொல்லா என்று தெரியவில்லை. ஆனால் புழக்கத்தில் லோகோ என்பதை இலச்சினை என்று பயன்படுத்தப்படுகிறது. சென்னை அகராதி ஒன்றிலுமுள்ளது--நீச்சல்காரன் (பேச்சு) 03:49, 6 ஏப்ரல் 2012 (UTC)
- இலச்சினை சமக்கிருதச் சொல். பார்க்க: [1].--Kanags \உரையாடுக 07:33, 6 ஏப்ரல் 2012 (UTC)
- 'இ' என்ற எழுத்து சேர்ந்ததால் தமிழ்படுத்தப்பட்டது என்று நினைத்தேன். சரி இலச்சினை அல்லாத வேறு சொல் தேடலாம் என நினைக்கிறேன். அடையாளச் சின்னம் ஏனோ மனதுக்குள் அடைய மறுக்கிறது.:) --நீச்சல்காரன் (பேச்சு) 01:36, 7 ஏப்ரல் 2012 (UTC)
இழுகுறி
[தொகு]இழுகுறி என்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். --இராச்குமார் (பேச்சு) 11:06, 29 சூன் 2012 (UTC)
- இலகை என்று இராம. கி அய்யா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். --இராச்குமார் (பேச்சு) 11:09, 29 சூன் 2012 (UTC)
- இழுப்புக்குறி, இழுத்தற்குறி என்றும் கூட சொல்லலாம். --இராச்குமார் (பேச்சு) 11:12, 29 சூன் 2012 (UTC)
"இழுகுறி", "இழுப்புக்குறி", "இழுத்தற்குறி" என்பன எவ்வாறு Logo என்னும் பொருளைத் தருகின்றன? Logo என்பது ஒரு "Device for identifying an organization" பொருள் விளக்கம் உள்ள சிறிய சொல் ஒன்று இல்லாவிட்டால் "அடையாளச் சின்னம்" பொருத்தமாக இருக்கும் என்பது எனது கருத்து. ---மயூரநாதன் (பேச்சு) 20:23, 29 சூன் 2012 (UTC)
- its not a device. இது முத்திரை. இலு, இழு, எழுத்து எல்லாம் தொடர்புடையச்சொல். இது எழுதுவதை, அல்லது வரைவதையோ குறிப்பது. குறி என்பது ஒரு அடையாளக் குறியாகக் கூட இருக்கலாமல்லவா? இல்லையேல், வரைந்து வைத்த ஒரு குறி அல்லது சின்னத்தை ஓவியக்குறி எனவும் சொல்லலாம். அடையாள இலக்கம் என்பதை நாம் அறிவோம். இதில் உள்ள இலக்கம் என்ற சொல்லும் பொருந்தும். இலக்கம், இலக்கை, இலகை, இலக்கக்குறி, இலக்கனை, என்பதையும் பார்க்கவும். --இராச்குமார் (பேச்சு) 20:51, 29 சூன் 2012 (UTC)
- இலக்கனை என்பது பொருத்தமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். --இராச்குமார் (பேச்சு) 20:54, 29 சூன் 2012 (UTC)
- இராச்குமார், Device என்னும் பயன்பாடு இங்கே பிழை அல்ல. இச் சொல்லை மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி பின்வருமாறு விளக்குகிறது: "a device, design, or figure used as an identifying mark". Device என்னும் சொல் கருவியை மட்டும் குறிப்பதல்ல. இதற்கு design, pattern போன்ற பொருள் விளக்கமும் உண்டு. நிற்க, புதுச் சொற்களை உருவாக்கும்போது குறித்த விடயத்தின் பொருள் இலகுவாகப் புரியத்தக்க வகையில் இருப்பது நல்லது. ஆராய்ச்சி செய்து அறிய வேண்டிய நிலை இருப்பது நல்லதல்ல. "இழுகுறி", "இழுப்புக்குறி", "இழுத்தற்குறி" என்னும்போது இது எதோ "இழுப்பது" (pull) என்பதுடன் தொடர்புள்ள சொல்லாக இருக்குமோ என்ற எண்ணம் வருகிறதேயொழிய எழுதுதல், வரைதல் போன்ற பொருள் புலப்படுவதில்லை. அத்தோடு "எழுதுதல்", "வரைதல்" போன்றவை கூட Logo என்பதுடன் நேரடியான பொருட் தொடர்பு கொண்டவை அல்ல. பொருளைச் சுற்றி வளைத்து எடுத்துக்கொண்டாலும் கூட எழுதுகின்ற அல்லது வரைகின்ற குறிகள் எல்லாமே Logoக்கள் அல்ல. அடிப்படையில் இது ஒரு "identifying mark". இப்பொருள் விளங்கக்கூடியதாக ஒரு சொல் கிடைத்தால் நல்லது. அதுவரை "அடையாளச் சின்னம்", "அடையாளக் குறி" போன்ற ஒன்றைப் பயன்படுத்துவது நல்லது. "குறி" என்பதே குறித்து நிற்பது என்ற உட்பொருள் கொண்டது. ஆனால் குறி என்னும் சொல் பலவாறாகப் பயன்படுவதால் அதை Logoவை மட்டும் குறிக்கப் பயன்படுத்துவது குழப்பமாக இருக்கும். இதனால், வளைந்திருப்பது என்ற பொருளில் "வளையம்", "வளையல்" போன்ற சொற்கள் உருவாவதுபோல, குறித்து நிற்பது என்பதால் "குறியம்", "குறியல்" போன்ற ஏதாவது ஒன்றைக் கூடப் பயன்படுத்தலாம். "இழுகுறி" போன்றவற்றைவிடக் கூடிய பொருட் தெளிவு இருக்கும். ---மயூரநாதன் (பேச்சு) 06:31, 30 சூன் 2012 (UTC)
- மயூரநாதனுடன் உடன்படுகிறேன். அண்மையில் தமிழ் விக்கிப்பீடியா தமிழில் கலைக்களஞ்சியமாக இல்லாது தமிழ்க் கலைக்களஞ்சியமாக மாறுகிறதோ எனும் மயக்கம் ஏற்படுகிறது. குறியம் நல்ல சொல்லாக்கமாக படுகிறது.--மணியன் (பேச்சு) 12:38, 30 சூன் 2012 (UTC)
- இராச்குமார், Device என்னும் பயன்பாடு இங்கே பிழை அல்ல. இச் சொல்லை மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி பின்வருமாறு விளக்குகிறது: "a device, design, or figure used as an identifying mark". Device என்னும் சொல் கருவியை மட்டும் குறிப்பதல்ல. இதற்கு design, pattern போன்ற பொருள் விளக்கமும் உண்டு. நிற்க, புதுச் சொற்களை உருவாக்கும்போது குறித்த விடயத்தின் பொருள் இலகுவாகப் புரியத்தக்க வகையில் இருப்பது நல்லது. ஆராய்ச்சி செய்து அறிய வேண்டிய நிலை இருப்பது நல்லதல்ல. "இழுகுறி", "இழுப்புக்குறி", "இழுத்தற்குறி" என்னும்போது இது எதோ "இழுப்பது" (pull) என்பதுடன் தொடர்புள்ள சொல்லாக இருக்குமோ என்ற எண்ணம் வருகிறதேயொழிய எழுதுதல், வரைதல் போன்ற பொருள் புலப்படுவதில்லை. அத்தோடு "எழுதுதல்", "வரைதல்" போன்றவை கூட Logo என்பதுடன் நேரடியான பொருட் தொடர்பு கொண்டவை அல்ல. பொருளைச் சுற்றி வளைத்து எடுத்துக்கொண்டாலும் கூட எழுதுகின்ற அல்லது வரைகின்ற குறிகள் எல்லாமே Logoக்கள் அல்ல. அடிப்படையில் இது ஒரு "identifying mark". இப்பொருள் விளங்கக்கூடியதாக ஒரு சொல் கிடைத்தால் நல்லது. அதுவரை "அடையாளச் சின்னம்", "அடையாளக் குறி" போன்ற ஒன்றைப் பயன்படுத்துவது நல்லது. "குறி" என்பதே குறித்து நிற்பது என்ற உட்பொருள் கொண்டது. ஆனால் குறி என்னும் சொல் பலவாறாகப் பயன்படுவதால் அதை Logoவை மட்டும் குறிக்கப் பயன்படுத்துவது குழப்பமாக இருக்கும். இதனால், வளைந்திருப்பது என்ற பொருளில் "வளையம்", "வளையல்" போன்ற சொற்கள் உருவாவதுபோல, குறித்து நிற்பது என்பதால் "குறியம்", "குறியல்" போன்ற ஏதாவது ஒன்றைக் கூடப் பயன்படுத்தலாம். "இழுகுறி" போன்றவற்றைவிடக் கூடிய பொருட் தெளிவு இருக்கும். ---மயூரநாதன் (பேச்சு) 06:31, 30 சூன் 2012 (UTC)
- நீங்கள் சொல்வது சரி தான். குறியம் என்பது சரியாக இருக்கும். அதையே நானும் பரிந்துரைக்கிறேன். --இராச்குமார் (பேச்சு) 12:45, 30 சூன் 2012 (UTC)