பேச்சு:அக்டினோட்டெரிகீயை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@Muthuppandy pandian:இப்பங்களிப்பால் என்ன மாற்றத்தை விரும்புகிறீர்கள்? பொதுவாக அனைத்து உயிரியல் கட்டுரைகளுமே, மேம்படுத்த வேண்டி உள்ளன. எனவே, மேம்படுத்தக்கோருகிறேன். இனிமேல் இதுபோல வார்ப்புரு மட்டும், இடுதலை தவிர்க்கவும். இரு வாரத்தில் அவ்வார்ப்புருவை நீக்க உள்ளேன். அதற்குள் எண்ணமிடுக.உழவன் (உரை) 05:38, 14 செப்டம்பர் 2016 (UTC)

தலைப்பு மாற்ற வார்ப்புரு சேர்ப்பவர்கள் அதற்கான தமது பரிந்துரையை பேச்சுப் பக்கத்தில் தருவது நல்லது.--Kanags \உரையாடுக 08:07, 14 செப்டம்பர் 2016 (UTC)
கீற்றுத் துடுப்பு மீன்கள்? --AntanO 12:54, 14 செப்டம்பர் 2016 (UTC)
உங்களின் 'கீற்று' பரிந்துரையால், மேலும் மீன்துடுப்புகளை பற்றி மீண்டும் படித்தேன். தனிகட்டுரை உருவாக்க வேண்டும். உயிரியலை பல்கலைக் கழக அளவு படித்தமையால், ஆர்வம். விசிறி வாழை என்பது போல, விசிறித் துடுப்பு எனலாம். அதன் அமைப்பும், செயலும், பனை கை விசிறி போன்றுதான், அப்படித்தான் இருக்கிறது. நடுமுள்(முள்ளிடை) என்பதை விட.. உழவன் (உரை) 01:14, 15 செப்டம்பர் 2016 (UTC)
தலைப்பை இப்போதைக்கு அப்படியே விட்டுவிடலாம். இது ஒரு விலங்கின வகுப்பின் அறிவியல் பெயர். இதற்கு இணையான ஏனைய வகுப்புக்களையும் கருத்தில் கொண்டே இதற்குத் தமிழ்ப் பெயர் இட முடியும். இதைத் துறை அறிஞர்களிடம் விடுவதே நல்லது. தலைப்பு மாற்ற வார்ப்புருவை நீக்கிவிடலாம். ---மயூரநாதன் (பேச்சு) 19:40, 14 செப்டம்பர் 2016 (UTC)
உயிரியலை தனிப்பாடமாக, ஆர்வத்துடன் 5 ஆண்டுகள் படித்தமையால் கீழ்கண்டவற்றைத் தெரிவிக்க விரும்புகிறேன். பல்வேறு வாழிடங்களில் வாழும் துறைசார் அறிஞர்கள் தங்களிடையே அறிவை பகிர்ந்து கொள்ளும் போது, பெயர் குழப்பம் வராமல் இருக்கவே, உயிரியல் வகைப்பாடு தோன்றியது. அதனை கிரேக்க, இலத்தீனிய மொழிகளில் தான் குறிப்பிட வேண்டும் என்ற விதியும் உருவாக்கப்பட்டது. நமது விக்கிஇனங்களில் உள்ள தரவுகள், அவ்விதமே உள்ளன. vernacular name என்பது, மேற்கூறியபடி வகைப்பாட்டியலை ஒலியியல் அடிப்படையில் மாற்றுவது அல்ல. ஏனெனில், அது நாடுக்கு நாடு வாழும், நாட்டுக்குள்ளே வாழும் மக்களின் பேச்சு வழக்கப்படி வேறுபடுகின்றன. இன்றளவும், தமிழிலுள்ள துறைசார் அறிஞர்களின் இயலாமையால் தான், ஒலியியல் பெயரிடல் முறை உள்ளது. அதிலும் தரவிதிகள் இல்லாதது கொடுமையே. இந்த ஒலியியல் தரம் இருப்பின், இந்த நிரலாக்க முயற்சியால், நாம் நம் தமிழ் விக்கியைச் செம்மைப்படுத்தலாம். நான் முயற்சிக்கிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 02:17, 1 அக்டோபர் 2016 (UTC)