பேசிக்-256

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேசிக்-256
உருவாக்குனர்இயன் லார்சன் & ஜேம்சு எம்.ரினீ
அண்மை வெளியீடு2.0.0.1 / ஏப்ரல் 28, 2020; 3 ஆண்டுகள் முன்னர் (2020-04-28)
இயக்கு முறைமைபன்னியக்குதளம்
மென்பொருள் வகைமைநிரலாக்க மொழி
உரிமம்குனூ பொதுமக்கள் உரிமம்
இணையத்தளம்basic256.org

பேசிக் -256 (Basic-256) என்பது கணினி நிரலாக்கத்தின் அடிப்படைகளை கற்றுக் கொள்ள உதவும் ஒரு திட்டமாகும். டேவிட் பிரின் எழுதிய "ஒய் ஜானி கேனாட் கோட்" என்ற கட்டுரையால் அகத் தூண்டல் பெற்ற இந்த திட்டம் 2007 இல் தொடங்கியது. நடுத்தர / உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கணினி நிரலாக்கத்தின் அடிப்படைகளை அறிய எளிய மற்றும் விரிவான சூழலை வழங்குவதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். [1]

பேசிக்-256 என்பது முதலில் பேசிக் (நிரல் மொழி)எனும் ஓர் எளிய பதிப்பாகத் துவங்கப்பட்டது. குறியீடு உரை, உரை வெளியீட்டுச் சாளரம் மற்றும் வரைகலைக் காட்சி சாளரம் ஆகிய அனைத்தும் ஒரே திரையில் தெரியும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அடுத்தடுத்த பதிப்புகள் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டன. அதாவது:

  • கோப்புகள் (Eof, Size) - பதிப்பு 9.4d
  • சுட்டி நிகழ்வுகள் - பதிப்பு 9.4 டி
  • தரவுத்தள செயல்பாடுகள் - பதிப்பு 0.9.6y
  • முனையங்கள்- பதிப்பு 0.9.6.31
  • வரைபடங்கள் (அகராதிகள்) - பதிப்பு 2.0.0.1

முழுமையான ஆவணங்கள் ஆங்கிலம், உருசிய மொழி, இடச்சு, எசுப்பானியம் மற்றும் போர்த்துகீசிய மொழிகளில் கிடைக்கின்றன.

இவற்றையும் காண்க[தொகு]

பேசிக் (நிரல் மொழி)

சான்றுகள்[தொகு]

  1. http://basic256.org/

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேசிக்-256&oldid=3712615" இலிருந்து மீள்விக்கப்பட்டது