பேசிக் (நிரல் மொழி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பேசிக் (BASIC) துவக்கத்தில் உருவாக்கப்பட்ட நிரல் மொழிகளில் ஒன்றாகும். தட்டச்சுக் கருவியை உள்ளடக்கிய கன்சோல் இரக கணினிகளில் முதன்முதலாக நிரல் மொழியாக பயன்படுத்தப்பட்டது. பேசிக் என்பது Beginner's All-purpose Symbolic Instruction Code என்ற ஆங்கில சொற்றொடரின் முதல் எழுத்துக்களைக் கொண்டு அமைக்கப்பட்ட சுருக்கச் சொல்லாகும்.

வரலாறு[தொகு]

இதனை 1963ஆம் ஆண்டில் ஜான் கெமெனியும் தாமஸ் குர்ட்சும் கீழ்கண்ட எட்டு கொள்கைகளை பின்பற்றுமாறு வடிவமைத்தனர்:

  1. புதியவர்களுக்கும் எளிதாக இருக்க வேண்டும்.
  2. பொதுப்பயன் நிரல் மொழியாக இருக்க வேண்டும்.
  3. பட்டறிவுபெற்ற நிரலாளர்களுக்கு கூடுதல் சிறப்புக்கூறுகளை சேர்க்கக் கூடுமானதாக இருக்க வேண்டும்.
  4. ஊடாட வல்லதாக இருக்க வேண்டும்.
  5. தெளிவான தோழமையான பிழை சுட்டும் செய்திகள்
  6. சிறிய கணினிநிரல்களுக்கு விரைவான முடிவுகள்
  7. கணினி வன்பொருள் குறித்த எந்த அறிவும் தேவைப்படாதிருத்தல்
  8. பயனர் இயக்குதளத்தை தொகுப்பதை தடுப்பது.

இதனை உருவாக்கியோர் நிரலாளர்கள் தங்கள் மொழியை பயன்படுத்த ஆர்வம் கொள்வதற்காக இதற்கான நிரல்மொழிமாற்றியை இலவசமாக வழங்கினர். இதனை அடுத்து பெருமளவில் பல நிரல்மொழிமாற்றிகள் உருவாக்கப்பட்டன.


"http://ta.wikipedia.org/w/index.php?title=பேசிக்_(நிரல்_மொழி)&oldid=1649088" இருந்து மீள்விக்கப்பட்டது