பெ. இரா. சாயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெ. இரா. சாயா
சாயா 2019-இல்
பின்னணித் தகவல்கள்
பிறப்புஅக்டோபர் 16, 1969 (1969-10-16) (அகவை 54)
பெங்களூர், கருநாடகம்
இசை வடிவங்கள்சுகம சங்கீதம், பின்னணி பாடகர்
தொழில்(கள்)பாடகர், தொழில்முனைவர்
இசைக்கருவி(கள்)குரல் பாடல்
இசைத்துறையில்1983–முதல்
இணையதளம்brchaya.com

பெ. இரா. சாயா (B. R. Chaya) என்று அழைக்கப்படும் பெங்களூரு இராமமூர்த்தி சாயா ஓர் இந்திய, கன்னடப் பின்னணி பாடகர், மேடை நடிகர் மற்றும் கருநாடகாவினை சேர்ந்த பிரபலமான சுகம சங்கீதா பாடகர் ஆவார்.[1] இவர் பாப், நாட்டுப்புறம், பக்தி மற்றும் பாவகீதே (மெல்லிசை) ஆகிய இசைநிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். கருநாடக மாநில அரசிடமிருந்து ராஜ்யோத்சவ பிரசஸ்தி விருதையும், சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான கருநாடக மாநில திரைப்பட விருதையும் பெற்றுள்ளார்.[2][3]

இளமை[தொகு]

இராமமூர்த்தி மற்றும் எஸ். ஜி. ஜானகிக்குச் சாயா மகளாகப் பிறந்தார்.[4][1]. ஆர். வி. கல்லூரியில் கடிகாரக் கலையியல் கல்வி பயின்ற பிறகு இந்துசுதான் எந்திர கருவிகள் நிறுவனத்தில் கடிகார சில ஆண்டுகள் கடிகார கம்மியராகப் பணியாற்றினார். பின்னர் சென்னையில் நடந்த தூர்தர்ஷன் தேசிய போட்டியில் கருநாடகத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1] தமிழ் மொழி திரைப்படமான ஜோதி (1983) மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார். மேலும் புட்டண்ணா கனகலின் அம்ருதா காளிகே (1984) மூலம் கன்னடத்தில் அறிமுகமானார்.

தற்போது கானா சந்தனா நிகழ்ச்சியின் நடுவராக உள்ளார், மேலும் கோவிட்-19 தொற்றின் போதிலிருந்து மெய்நிகர் கச்சேரிகளைச் செய்து வருகிறார்.[1]

1988ஆம் ஆண்டில் "காடினா பெங்கி" திரைப்படத்தில் "ருதுமனா சம்புதடி" பாடலுக்காகச் சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதைப் பெற்ற முதல் பாடகி சாயா ஆவார்.[5]

விருதுகள்[தொகு]

  • 2010 – கர்நாடகா ராஜ்யோத்சவ பிரசஸ்தி[6]
  • 1988 – சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான கருநாடக மாநில திரைப்பட விருது - பாடல்: ருத்துமன சம்புத்தடி இருந்து காடினா பெங்கி[7]
  • 1995 – சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான கர்நாடக மாநில திரைப்பட விருது - பாடல்: இப்பானி தபிடா இலியலி இருந்து ராஷ்மி

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "B R Chaya: I was never burdened with household work". Deccan Herald (in ஆங்கிலம்). 2021-02-13. பார்க்கப்பட்ட நாள் 2021-11-23.
  2. "Pupora - ESCUCHAR MUSICA ONLINE GRATIS SIN DESCARGAR". pupora.com. பார்க்கப்பட்ட நாள் 2021-03-27.
  3. "On My Pinboard: B R Chaya" (in en). 4 July 2019. https://www.deccanherald.com/metrolife/metrolife-lifestyle/on-my-pinboard-b-r-chaya-744847.html. 
  4. "BR Chaya". www.brchaya.com. பார்க்கப்பட்ட நாள் 2021-03-27.
  5. "Ruthumana Samputadi (Full Song) - Kadina Benki - Download or Listen Free - JioSaavn".
  6. "On My Pinboard: B R Chaya". Deccan Herald (in ஆங்கிலம்). 2019-07-04. பார்க்கப்பட்ட நாள் 2023-06-19.
  7. "YouTube". www.youtube.com.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._இரா._சாயா&oldid=3912115" இலிருந்து மீள்விக்கப்பட்டது