பெங்களூர் இலதா
பெங்களூர் இலதா | |
---|---|
பிறப்பு | பெங்களூர், மைசூர் அரசு, (தற்போது கருநாடகம்), இந்தியா |
இசை வடிவங்கள் |
|
தொழில்(கள்) |
|
இசைக்கருவி(கள்) | வாய்பாட்டு |
இசைத்துறையில் | 1962–1990 |
வெளியீட்டு நிறுவனங்கள் | சுயாதீனக் கலைஞர் |
பி. ஆர். லதா (B. R. Latha) பிரபலமாக பெங்களூர் லதா (Bangalore Latha) எனப்படும் இவர் தென்னிந்திய திரையுலகில், முக்கியமாக கன்னடம் மற்றும் தெலுங்கில் பணியாற்றிய இந்திய பாடகராவார்.[1] [2] [3]
ஆரம்ப ஆண்டுகள்
[தொகு]இவர், ராஜ்குமார், கிருஷ்ண குமாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து 1962ஆம் ஆண்டு வெளியான மகாத்மா கபீர் என்ற கன்னட மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.[4]
இவர், பி. பி. ஸ்ரீனிவாஸ்,[1] எஸ். பி. பாலசுப்பிரமணியம்,[5] எம். பாலமுரளி கிருஷ்ணா, ராஜ்குமார், எஸ். ஜானகி, வாணி ஜெயராம், பி. கே. சுமித்ரா, முசிறி கிருஷ்ணமூர்த்தி, சங்கர் நாக், விஷ்ணுவர்தன் ஆகியோருடன் இணைந்து பாடல்களை பாடியுள்ளார்.[6]
தெலுங்கு
[தொகு]இவர், தனது சில சிறந்த பாடல்களை தெலுங்கிலும் வழங்கியுள்ளார். எஸ். தட்சிணாமூர்த்தி இசையமைத்து 1963ஆம் ஆண்டு வெளியான "நர்த்தனாசாலா" படத்தில் இடம் பெற்ற சலலிதா ராக சுதரச சாரா என்ற பாடலை எம். பாலமுரளிகிருஷ்ணாவுடன் இணைந்து பாடியது மிகவும் பிரபலமானது.
சொந்த வாழ்க்கை
[தொகு]இவர், பெங்களூரில் பிறந்தார். இவர் நடிகரும் பாடகருமான தக்காளி சோமுவை மணந்தார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Voices of Karnataka. பார்க்கப்பட்ட நாள் 31 Oct 2020.
- ↑ "Bangalore Latha on Moviebuff.com". Moviebuff.com.
- ↑ Karnataka State Gazetteer: Bangalore District Gazetteer of India Volume 20. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2020.
- ↑ "Mahatma Kabir films cast and crew". chiloka.com. பார்க்கப்பட்ட நாள் 13 Sep 2020.
- ↑ 5.0 5.1 Actor Tomato Somu story. Shakti Sugar Limited. 1982. p. 68. பார்க்கப்பட்ட நாள் 31 Oct 2020.
{{cite book}}
:|work=
ignored (help) - ↑ "Rudranaga". chiloka.com. பார்க்கப்பட்ட நாள் 13 Sep 2020.