கிருஷ்ண குமாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிருஷ்ண குமாரி ஒரு தெலுங்கு நடிகை. இவர் 1960-1970 ஆண்டுகளில் பல திரைப்படங்களில் நடித்தார். முன்னணி நடிகர்களான என். டி. ராமாராவ், சிவாஜி கணேசன், காந்தாராவ், ஜக்கையா ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். இவர் சில தமிழ், மலையாளம் மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்தவர்.

இவர் பிரபல நடிகை சௌகார் ஜானகியின் தங்கை ஆவார். தன் இறுதி நாட்களில் பெங்களூரில் வாழ்ந்து வந்த கிருஷ்ணகுமாரி 24 சனவரி 2018 அன்று காலமானார். இவரது கணவர் பெயர் அஜய் மோகன் ஆவார்.[1]

திரைத்துறை[தொகு]

இவர் நடித்த முதல் தெலுங்குத் திரைப்படம் நவ்விதே நவரத்னாலு என்பதாகும். திரும்பிப் பார் என்ற திரைப்படமே இவர் நடித்த முதல் தமிழ்த் திரைப்படம். தொடர்ந்து முப்பதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தார். இறுதியாக, ஜோதி என்ற திரைப்படத்தில் நடித்தார்.[2]

திரைப்படங்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ண_குமாரி&oldid=2717316" இருந்து மீள்விக்கப்பட்டது