காந்தாராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காந்தாராவ் தெலுங்கு மொழியில் 400 திரைப்பங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆந்திர மாநிலம் குடிபந்தா என்ற கிராமத்தில் 1923ம் ஆண்டு பிறந்த இவர், 1951ம் ஆண்டு நிர்தோஷி என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். அவர் நடித்த பல திரைப்படங்களில் எம்.ஜி.ஆரைப் போல வாள் சண்டை போடுவார். இதனால் ஆந்திர எம்.ஜி.ஆர். என்று ரசிகர்கள் அழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் விட்டலாச்சாரியா [1]இயக்கத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 22 மார்ச் 2009 அன்று புற்று நோயால் மறைந்தார். [2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. B. Vittalacharya
  2. பழம்பெரும் நடிகர் காந்தா ராவ் காலமானார்
  3. பழம்பெரும் நடிகர் காந்தா ராவ் காலமானார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தாராவ்&oldid=2618869" இருந்து மீள்விக்கப்பட்டது