உள்ளடக்கத்துக்குச் செல்

பி. கே. சுமித்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. கே. சுமித்ரா
பிறப்புஏப்ரல் 27, 1941 (1941-04-27) (அகவை 83)
பிலாலுகொப்பா, ஹொரனாடு, கருநாடகம்
இசை வடிவங்கள்திரையிசை, பக்தி இசை, பாவகீதம்
தொழில்(கள்)பின்னணி பாடுதல்
இசைத்துறையில்1965 - தற்போது வரை

பிலாலுகொப்பா கிருஷ்ணய்ய சுமித்ரா (Bilalukoppa Krishnayya Sumitra) பி. கே. சுமித்ரா என்று பிரபலமாக அறியப்படும் இவர் கன்னடத் திரைப்படத்துறையில் பணியாற்றியதற்காக அறியப்பட்ட ஒரு இந்திய பாடகியாவார். இவர் பல பக்தி பாடல்களும் நாட்டுப்புற பாடல்களும் பாடி பிரபலமானவர். [1]

சொந்த வாழ்க்கை

[தொகு]

இந்தியாவின் கர்நாடகாவின் சிக்மகளூரு மாவட்டத்தின் ஹொறநாடு அருகே பிலாலுகொப்பா என்ற ஊரில் கங்கம்மா மற்றும் கிருஷ்ணய்யா ஆகியோருக்கு சுமித்ரா பிறந்தார். குடும்பம் பின்னர் சிவமோகாவுக்குச் சென்றது. அங்கு இவர், நடிகை பண்டரிபாயின் சகோதரரான எம். பிரபாகர் என்பவரிடம் கருநாடக இசையில் பயிற்சி பெற்றார்.

இவர், எம். எல்.சுதாகர் என்பவரை மணந்தார். இவரது மகள் சௌமியா ராவும் ஒரு பின்னணி பாடகராவார். இவரது மகன் சுனில் ராவ் கன்னடத் திரைத்துறையில் நடிகராக இருக்கிறார். [2]

தொழில்

[தொகு]

சுமித்ராவை இசையமைப்பாளர் ஜி. கே. வெங்கடேசு காவலரேடு குலவண்டு (1964) என்ற தனது படத்தில் பாடச் செய்தார். [3] [4] இவர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனது வாழ்க்கையில், ஜி. கே. வெங்கடேசு, ஆர்.சுதர்சனம், விஜய பாஸ்கர், எம். ரங்க ராவ், ராஜன்-நாகேந்திரா, அனூப் சீலின் போன்ற புதிய தலைமுறை இசைக்கலைஞர்கள் உட்பட கிட்டத்தட்ட அனைத்து இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியுள்ளார். மேலும், இசை பட்டறைகளில் பங்கேற்பதிலும், மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் இவர் தீவிரமாக உள்ளார். [5]

குறிப்பிடத்தக்க பாடல்கள்

[தொகு]

குறிப்பிடத்தக்க பாடல்களும் அவை இடம் பெற்ற படமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • நின்னோளுமே ஏமாகிரலி தந்தே - தந்தே மக்களு
  • அ ஆ இ ஈ கன்னடா - கருளின கரெ
  • கரெய கேளி பந்தே - அனுராதா
  • மதுர மதுரவே மஞ்சுலகனா - சதி சுகன்யா
  • சம்பிகே மரதா - உபாசனெ
  • ஓடி பா ஓடோடி பா - சக்ரதீர்த்தா
  • மனெயெ பிருந்தாவனா - பிருந்தாவனா
  • எத்தேளு மஞ்சுநாதா - எத்தேளு மஞ்சுநாதா

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Singer B.K. Sumitra turns 75". https://www.thehindu.com/news/cities/bangalore/singer-bk-sumitra-turns-75/article8521277.ece. பார்த்த நாள்: 15 September 2020. 
  2. "Celebrity B. K. Sumitra". filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 15 September 2020.
  3. https://mfestindia.com/advisory/Sumitra.html#:~:text=In%201992%2C%20she%20has%20been,coaching%20camps%20during%20her%20tour
  4. "Kavaleredu Kula Ondu (1964) Kannada movie: Cast & Crew". chiloka.com. பார்க்கப்பட்ட நாள் 2020-09-13.
  5. "BK Sumitra". Prajavani.

வெளி இணைப்புகள்

[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் பி. கே. சுமித்ரா

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கே._சுமித்ரா&oldid=3599027" இலிருந்து மீள்விக்கப்பட்டது