சந்திரிகா குருராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திரிகா குருராஜ்
பிறப்பு4 அக்டோபர் 1959 (1959-10-04) (அகவை 64)
தும்கூர், மைசூர் மாநிலம் (தற்போது கருநாடகம்), இந்தியா
பணி
செயற்பாட்டுக்
காலம்
1989 - தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
குருராஜா
பிள்ளைகள்1
விருதுகள்சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான கர்நாடக மாநில திரைப்பட விருது
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
இசைக்கருவி(கள்)வாய்ப் பாட்டு
வெளியீட்டு நிறுவனங்கள்சுயாதீனக் கலைஞர்

சந்திரிகா குருராஜ் (Chandrika Gururaj) (பிறப்பு 1959), ஓர் இந்திய பின்னணிப் பாடகியாவார். இவர் முக்கியமாக கன்னடத்தில் தனது படைப்புகளுக்கு பெயர் பெற்றவர். திரைப்படப் பாடல்களைத் தவிர, இவர் ஏராளமான பக்திப் பாடல்கள், பாவகீதம், கிராமிய இசைப் பாடல்களையும் பதிவு செய்துள்ளார். ஊர்வசி என்ற கன்னடத் திரைப்படத்தில் "ஓ பிரியத்தமா" என்ற பாடலுக்காக, சந்திரிகா 1994இல் சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதை வென்றார். கர்நாடக அரசு 2010ஆம் ஆண்டில் இசையில் இவரது பங்களிப்புக்காக கர்நாடக ராஜ்யோத்சவா விருதை வழங்கி கௌரவித்தது.[1]

சொந்த வாழ்க்கை[தொகு]

சந்திரிகா 4 அக்டோபர் 1959 அன்று இந்தியாவில் உள்ள கர்நாடக மாநிலத்தின் தும்கூரில் இரங்காராவ் - இலலிதம்மா தம்பதியினருக்கு மகளகப் பிறந்தார்.[2] இவர் மைசூர் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் பட்டம் பெற்றார். பின்னர், இவர் சிறிது காலம் தும்கூர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்.

சந்திரிகா குருராஜ் என்பவரை மணந்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

தொழில்[தொகு]

சந்திரிகா முதலில் நடிகர் சங்கர் நாகால் ஒரு நிகழ்ச்சியில் கவனிக்கப்பட்டார். பின்னர் சங்கர் நாக் இசையமைப்பாளர் அம்சலேகாவிடம் இவரை அறிமுகப்படுத்தினார்.[2] பிரபல பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியத்துடன் சேர்ந்து இந்திரஜித் என்ற திரைப்படத்தில் அம்சலேகா "காதலிக்கே ஓண்டு கோனே ஐடே" என்ற பாடலை பாட வாய்ப்பளித்தார். பின்னர், இவர், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், கே. ஜே. யேசுதாஸ், மனோ, பி. ஜெயச்சந்திரன், எல். என். சாஸ்திரி, ராஜேஷ் கிருஷ்ணன், ரமேஷ் சந்திரா போன்ற பலருடன் பல திரைப்படப் பாடல்களைப் பதிவு செய்துள்ளார்.

இவர், வி. மனோகர், இளையராஜா, இராஜன்–நாகேந்திரா, உபேந்திர குமார், இராஜ்–கோட்டி, சாது கோகிலா, ராஜேஷ் ராம்நாத், சி. அஸ்வத், ஜெயஸ்ரீ அரவிந்த் போன்ற பல இசையமைப்பாளர்களுடன் பணி புரிந்துள்ளார். இவர் 100க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும் 1000க்கும் மேற்பட்ட திரைப்படம் அல்லாத பாடல்களையும் பதிவு செய்துள்ளார்.

இவரது குறிப்பிடத்தக்க பாடல்கள் "பிரேமா பரஹா கோடி தாரஹா", "ஈ ஜோகதா ஜலபாதா", "தட்டோனா தட்டோனா", "மாமரகே இ கோகிலேயா", "பா பரோ ஓ கெலேயா", "சைத்ரதா பிரேமாஞ்சலியா", "அவன்னள்ளி இவல்லி", "சங்கம சங்கமா", "ஓ பந்துவே", "எனிடரேனு ஹென்னடா பாலிகா", "நெனப்புகால அங்கலடி", "ஹோகபெடா ஹடுகி" மற்றும் பல.

2016 கர்நாடக மாநில திரைப்பட விருது குழுவில் நடுவர் குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார்.[3] இவர் நாடு முழுவதும் மேடைகளில் நடிப்பதில் தீவிரமாக உள்ளார். [4] [5] [6]

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Rajyotsava Awards Official website of Karnataka Government". பார்க்கப்பட்ட நாள் 23 May 2021.
  2. 2.0 2.1 "ಕಣಜ: ಅಂತರ್ಜಾಲ ಕನ್ನಡ ಮಾಹಿತಿ ಕೋಶ". Kanaja: Karnataka Information Government official website. பார்க்கப்பட்ட நாள் 23 May 2021.
  3. "Amaravati adjudged film". Deccan Herald. 12 April 2012. https://www.deccanherald.com/content/605936/amaravati-adjudged-film.html. 
  4. "Tribute to the nightingale". The New Indian Express. 27 September 2012. https://www.newindianexpress.com/cities/bengaluru/2012/sep/27/tribute-to-the-nightingale-of-india-409946.html. 
  5. "Confluence of mesmerizing voices". Deccan Herald. 16 February 2010. https://www.deccanherald.com/content/53026/confluence-mesmerising-voices.html. 
  6. "All ears to melodious nostalgic numbers". Deccan Herald. 17 May 2010. https://www.deccanherald.com/content/70077/all-ears-melodious-nostalgic-numbers.html. 
  7. "ರಾಜ್ಯೋತ್ಸವ ಪ್ರಶಸ್ತಿ ಸಂಪೂರ್ಣ ಪಟ್ಟಿ 1966 ರಿಂದ - 2015 ರವರೆಗೆ" (PDF). Kannada Siri. Archived from the original (PDF) on 22 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 May 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சந்திரிகா குருராஜ்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரிகா_குருராஜ்&oldid=3552881" இலிருந்து மீள்விக்கப்பட்டது