பெர்நால்டியா பாண்ட்டுரேடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Loroco
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
E. panduratus
இருசொற் பெயரீடு
Echites panduratus
A. DC. (1844)
வேறு பெயர்கள் [1]
  • Amblyanthera pandurata (A.DC.) Müll.Arg. (1860)
  • Angadenia pandurata (A.DC.) Miers (1878)
  • Echites barbatus Sessé & Moc. (1893) not Desv. ex Ham. (1825) nor D. Dietr. (1839)
  • Echites pinguifolius Standl. (1930)
  • Fernaldia brachypharynx Woodson (1932)
  • Fernaldia glabra (Molina) Lundell (1976)
  • Fernaldia pandurata (A.DC.) Woodson (1932)
  • Fernaldia pandurata var. glabra Molina (1952)
  • Mandevilla potosina Brandegee (1912)
  • Mandevilla velutina K.Schum. (1895)
  • Urechites karwinskii Müll.Arg. (1860)

பெர்நால்டியா பாண்ட்டுரேடா (தாவர வகைப்பாட்டியல்: Fernaldia pandurata Echites panduratus)(பொதுவான பெயர்: லோரோக்கோ) என்பது கொடி இரகத்தைச் சேர்ந்த உண்ணத் தகுந்த ஒரு மலரினத்தைச் சேர்ந்ததாகும். இது எல் சால்வடார், குவாத்தமாலா மற்றும் நடு அமெரிக்காவின் பிற நாடுகளிலும், மெக்சிகோவின் சில பகுதிகளிலும் பரவலாக உள்ளது.[1][2][3] "லோரோக்கோ" என்ற பெயர் மெசோ-அமெரிக்கா முழுவதும் இந்த இனத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.[4]

பண்புகள்[தொகு]

கொடி இரகமான குற்றுச்செடி இரகத்தைச் சார்ந்த இதன் இலையின் பரப்பு 4-13 செ.மீ. நீளமாகவும்,1.5-8 செ.மீ அகலமாகவும், இதன் மஞ்சரித் தொகுப்பு இலைப்பகுதியை விட சிறியதாகவும் 8-18 மலர்களை கொண்டதாகவும், மலர்க்காம்பு 4-6மி.மீ. நீளமும், சூலகம் 1-2 மி.மீ, நீளமும், புல்லிவட்டம், அல்லிவட்டம் வெண்மைத்தன்மை கொண்டதாகவும் வெளிப்பகுதியில் பச்சை நிறமாகவும் அமைந்துள்ளது.[4]

பயன்கள்[தொகு]

குவாத்தமாலா, ஹோண்டுராஸ் மற்றும் எல் சால்வடோரில் இத்தாவரம் ஒரு முக்கிய உணவுப் பொருளாகும். இத்தாவரத்தின் மொட்டுகள் மற்றும் பூக்கள் ஆகியவைகளைப் பயன்படுத்தி பல்வேறு உணவுப் பொருட்கள் தயாரித்து உண்ணப்படுகிறது.

சமையலுக்கு வெட்டப்பட்ட மொட்டுகள்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Echites panduratus A.DC. உலகத் தாவரங்கள் இணைநிலை. Retrieved 30 July 2023.
  2. Davidse, G. & al. (eds.) (2009). Flora Mesoamericana 4(1): 1-855. Universidad Nacional Autónoma de México, México, D.F.
  3. Morales, J.F. (2009). Estudios en las Apocynaceae neotropicales XXXIX: revisión de las Apocynoideae y Rauvolfioideae de Honduras. Anales del Jardin Botanico de Madrid 66: 217–262.
  4. 4.0 4.1 Azurdia, César; Loroco (Fernaldia pandurata, Apocynaceae), a Mesoamerican species in the process of domestication
  • León, J., H. Goldbach & J. Engels, 1979: Die genetischen Ressourcen der Kulturpflanzen Zentralamerikas., Int. Genbank CATIE/GTZ in Turrialba, Costa Rica, San Juan de Tibás, Costa Rica, 32 pp.
  • Morton, J. F., E. Alvarez & C. Quiñonez, 1990: Loroco, Fernaldia pandurata (Apocynaceae): a popular edible flower of Central America. Economic Botany 44, 301–310.
  • S. Facciola (1990). Cornucopia. A source book of edible plants. Kampong.