பெண்களின் நிலை குறித்த ஐக்கிய நாடுகள் ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெண்களின் நிலை குறித்த ஐக்கிய நாடுகள் ஆணையம்
சுருக்கப்பெயர்CSW
உருவாக்கம்21 சூன் 1946; 77 ஆண்டுகள் முன்னர் (1946-06-21)
வகைசர்வதேச அமைப்பு, ஒழுங்குமுறை அமைப்பு, ஆலோசனை குழு
சட்டப்படி நிலைActive
தலைமையகம்நியூயார்க்கு நகரம், அமெரிக்கா
தலைவர்
பெண்களின் நிலை குறித்த ஐ.நா ஆணையத்தின் தலைவர்
 ஆர்மீனியா
மெகர் மர்காகர்யன்[1]
மேல் அமைப்பு
ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை
இணையதளம்CSW at unwomen.org

பெண்களின் நிலை குறித்த ஆணையம் ( United Nations Commission on the Status of Women ) என்பது ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபையின் ஒரு செயல்பாட்டு ஆணையமாகும். இது ஐக்கிய நாடுகள் அவையின் முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும். இது பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஐ.நா.வின் உறுப்பு என விவரிக்கப்பட்டுள்ளது.[2] ஒவ்வொரு ஆண்டும், உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் கூடி, முன்னேற்றம் பாலினச் சமனிலையை மதிப்பீடு செய்யவும், சவால்களை அடையாளம் காணவும், உலகளாவிய தரங்களை அமைக்கவும், பாலினச் சமனிலை மற்றும் உலகெங்கிலும் உள்ள பெண்களின் முன்னேற்றத்தை மேம்படுத்தவும் உறுதியான கொள்கைகளை உருவாக்குகின்றனர். ஏப்ரல் 2017 இல்,சபை நான்கு ஆண்டு காலத்திற்கு 2018-2022 க்கு 13 புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தது.[3] புதிய உறுப்பினர்களில் ஒன்றான சவூதி அரேபியா பெண்கள் உரிமைகளை மோசமாக நசுக்குவதாக விமர்சிக்கப்பட்டது .

ஈரான் இசுலாமிய குடியரசின் வெளியேற்றம்[தொகு]

டிசம்பர் 2022 இல், மகசா அமினியின் மரணம் மற்றும் ஈரானில் மனித உரிமை எதிர்ப்பாளர்களுக்கு எதிரான வன்முறை ஒடுக்குமுறையைத் தொடர்ந்து, பெண்கள் நிலை குறித்த ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் உறுப்பினரிலிருந்து ஈரான் இசுலாமியக் குடியரசு வெளியேற்றப்பட்டது. ஆணையத்தின் வரலாற்றில் பெண்களை நடத்தும் விதத்தில் உறுப்பினர் ஒருவர் வெளியேற்றப்படுவது இதுவே முதல் முறை.[4][5][6]

குறிப்பு[தொகு]

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]