மகசா அமினியின் மரணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகசா அமினி
தாய்மொழியில் பெயர்مهسا امینی
பிறப்பு22 சூலை 2000[1][2] அல்லது 20 செப்டம்பர் 1999[3]
சகேசு, ஈரான்
இறப்பு (அகவை 22)
தெகுரான், ஈரான்
இறப்பிற்கான
காரணம்
கடும் வதை காரணமான மண்டையோட்டு எலும்புமுறிவு[4][5][6]
கல்லறைசாகேசு, ஈரான்
மற்ற பெயர்கள்
  • ஜினா அமினி
  • ழினா அமினி

மகசா அமினி ( Mahsa Amini பாரசீக மொழி: مهسا امینی‎), தவிரவும் ஜினா அமினி அல்லது ழினா அமினி (பாரசீக மொழி: ژینا امینی‎, குர்தியம்: ژینا ئەمینی) எனவும்[7]அறியப்படும் 22 அகவை நிரம்பிய ஈரானியப் பெண் செப்டம்பர் 16, 2022 அன்று ஈரானின் தெகுரான் நகரில் காவல்துறையின் வன்செயல் என குற்றஞ்சாட்டுவகையில் ஐயத்திற்குரிய சூழலில் மரணமடைந்தார்.[8][9]

ஈரானின் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் சட்ட செயலாக்க காவற்படையின் அங்கமான ஒழுக்கப்பண்பு வழிகாட்டுப் படை அரசு விதிமுறைகளுக்கேற்றவாறு ஹிஜாப் அணியாதமைக்காக அமினியைக் கைது செய்தது. காவல்துறையின் கூற்றுப்படி அமினிக்கு காவல்நிலையத்தில் திடீரென்று இதய நிறுத்தம் ஏற்பட்டு தரையில் விழுந்தார்; இரண்டு நாட்கள் ஆழ்மயக்க நிலையில் இருந்து பின் மரணமடைந்தார்.[10][11] அவருடன் கைதானவர்களும் பிற நேரடி சாட்சிகளும் அமினி மிகக் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறினர்; இவற்றையும் கசிந்த மருத்துவ வருடி அறிக்கைகளையும் கொண்டு[4] அமினிக்கு பெருமூளை இரத்த ஒழுக்கு மற்றும் பக்கவாதம் ஏற்பட்டிருந்ததாக தனிப்பட்ட நபர்கள் கருதினர்.[12]

அமினியின் மரணம் நாடுதழுவிய போராட்டங்களுக்கு வித்திட்டது; இது உலகநாடுகளின் கவனத்தை ஈர்த்தது.அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் ஈரானின் இசுலாமியக் குடியரசில் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது.[13][14][15][16] உலகெங்கும் பல தலைவர்களும் அமைப்புக்களும் பிரபலங்களும் இந்நிகழ்வைக் கண்டித்ததுடன் போராட்டக்காரர்களுக்கு ஆதரவளித்தனர்.[17]

ஈரானிய அரசு இந்தப் போராட்டங்களை ஒடுக்க முயன்றது; போராளிகள் மீது சிறுகுண்டுகள், உலோக சிறுகுண்டுகள், கண்ணீர்ப்புகை மற்றும் நீர்பீரங்கிகளைக் கொண்டு தாக்கியது.[18] இன்ஸ்ட்டாகிராம், வாட்சப் போன்ற சமூக ஊடக நிரலிகளை தடை செய்தும் இணைய அணுக்கத்தைக் கட்டுப்படுத்தியும் போராட்ட ஒருங்கிணைப்பை அடக்கியது. 2019ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட முழுமையான இணைய முடக்கத்திற்குப் பிறகு இதுவே மிகக் கடுமையான கட்டுப்பாடுகளாகும்.[19]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Zhina Amini goes into coma 2 hours after arrest". 2022-09-15 இம் மூலத்தில் இருந்து 15 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220915215035/https://women.ncr-iran.org/2022/09/15/zhina-amini-goes-into-coma/. 
  2. "Mahsa Amini kimdir? M ahsa Amini nasıl öldü?". Cumhuriyet இம் மூலத்தில் இருந்து 25 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220925090940/https://www.cumhuriyet.com.tr/dunya/mahsa-amini-kimdir-m%EF%BB%BFahsa-amini-nasil-oldu-1983516. 
  3. Najdi (نجدی), John (یوحنا). "در روز تولد مهسا امینی؛ دختر به روایت پدر". Deutsche Welle இம் மூலத்தில் இருந்து 24 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220924205928/https://www.dw.com/fa-ir/%D8%AF%D8%B1-%D8%B1%D9%88%D8%B2-%D8%AA%D9%88%D9%84%D8%AF-%D9%85%D9%87%D8%B3%D8%A7-%D8%A7%D9%85%DB%8C%D9%86%DB%8C-%D8%AF%D8%AE%D8%AA%D8%B1-%D8%A8%D9%87-%D8%B1%D9%88%D8%A7%DB%8C%D8%AA-%D9%BE%D8%AF%D8%B1/audio-63197760. பார்த்த நாள்: 23 September 2022. 
  4. 4.0 4.1 "Mahsa Amini's medical scans show skull fractures caused by 'severe trauma': Report". 19 September 2022 இம் மூலத்தில் இருந்து 24 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220924055756/https://english.alarabiya.net/News/middle-east/2022/09/19/Mahsa-Amini-s-medical-scans-show-skull-fractures-caused-by-severe-trauma-Report. 
  5. "Iran protests: Mahsa Amini's death puts morality police under spotlight". BBC News. 23 September 2022 இம் மூலத்தில் இருந்து 23 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220923050009/https://www.bbc.com/news/world-middle-east-62984076. 
  6. "Iran's protesters have had enough after Mahsa Amini's death". Al Jazeera English. 22 September 2022 இம் மூலத்தில் இருந்து 24 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220924205927/https://www.aljazeera.com/news/2022/9/22/irans-protesters-have-had-enough-after-mahsa-aminis-death. 
  7. "Zhina Amini goes into coma 2 hours after arrest" (in en-US). 15 September 2022 இம் மூலத்தில் இருந்து 15 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220915215035/https://women.ncr-iran.org/2022/09/15/zhina-amini-goes-into-coma/. 
  8. Fazeli, Yaghoub (16 September 2022). "Iranian woman 'beaten' by police for 'improper hijab' dies after coma: State media". Al Arabiya இம் மூலத்தில் இருந்து 16 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220916122341/https://english.alarabiya.net/News/middle-east/2022/09/16/Iranian-woman-beaten-by-police-for-not-wearing-hijab-dies-after-coma. 
  9. "IranWire Exclusive: Morality Patrol Beats a Woman into a Coma". 15 September 2022 இம் மூலத்தில் இருந்து 24 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220924205945/https://iranwire.com/en/women/107558-iranwire-exclusive-morality-patrol-beats-a-woman-into-coma/. 
  10. "Three killed in protests over Iranian woman Mahsa Amini's death in custody". 20 September 2022 இம் மூலத்தில் இருந்து 20 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220920132327/http://www.cbc.ca/news/world/iran-amini-death-reaction-1.6588465. 
  11. "Arrest by hijab police leaves woman comatose". 15 September 2022 இம் மூலத்தில் இருந்து 18 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220918215143/https://www.al-monitor.com/originals/2022/09/arrest-hijab-police-leaves-woman-comatose. 
  12. Brase, Jörg (20 September 2022). "Irans Opposition hat vor allem eine Schwäche" (in de) இம் மூலத்தில் இருந்து 24 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220924184813/https://www.zdf.de/nachrichten/politik/iran-protest-mahsa-amini-100.html. 
  13. "نماد زن ایرانی در حکومت جهل و جنون آخوندی!" இம் மூலத்தில் இருந்து 24 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220924205928/https://iran-tc.com/2022/04/08/%D9%86%D9%85%D8%A7%D8%AF-%D8%B2%D9%86-%D8%A7%DB%8C%D8%B1%D8%A7%D9%86%DB%8C-%D8%AF%D8%B1-%D8%AD%DA%A9%D9%88%D9%85%D8%AA-%D8%AC%D9%87%D9%84-%D9%88-%D8%AC%D9%86%D9%88%D9%86-%D8%A2%D8%AE%D9%88%D9%86%D8%AF/. 
  14. "Mahsa Amini is Another Victim of the Islamic Republic's War on Women". 16 September 2022 இம் மூலத்தில் இருந்து 18 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220918164134/https://iranhumanrights.org/2022/09/mahsa-amini-is-another-victim-of-islamic-republics-war-on-women/. 
  15. Falor, Sanskriti (21 September 2022). "Why death of 22-year-old Mahsa Amini sparked protests in Iran". Indian Express Limited இம் மூலத்தில் இருந்து 19 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220919193706/https://indianexpress.com/article/explained/explained-global/why-has-the-death-of-22-year-old-mahsa-amini-sparked-protests-against-irans-morality-police-8159917/. 
  16. "Mahsa Amini: Acting UN human rights chief urges impartial probe into death in Iran" (in en) இம் மூலத்தில் இருந்து 23 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220923031841/https://www.ohchr.org/en/press-releases/2022/09/mahsa-amini-acting-un-human-rights-chief-urges-impartial-probe-death-iran. 
  17. "Condemnations Follow Death Of Young Woman in Iranian Police Custody" இம் மூலத்தில் இருந்து 17 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220917201242/https://www.iranintl.com/en/202209164418. 
  18. "At least 36 killed as Iran protests over Mahsa Amini's death rage: NGO". 23 September 2022 இம் மூலத்தில் இருந்து 23 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220923225456/https://english.alarabiya.net/News/middle-east/2022/09/23/At-least-36-killed-as-Iran-protests-over-Mahsa-Amini-s-death-rage-NGO. 
  19. Bonifacic, Igor (21 September 2022). "Iran restricts access to WhatsApp and Instagram in response to Mahsa Amini protests" இம் மூலத்தில் இருந்து 24 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220924184810/https://www.engadget.com/iran-restricts-internet-access-mahsa-amini-protests-194512075.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகசா_அமினியின்_மரணம்&oldid=3777706" இருந்து மீள்விக்கப்பட்டது