மகசா அமினியின் மரணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகசா அமினி
தாய்மொழியில் பெயர்مهسا امینی
பிறப்பு22 சூலை 2000[1][2] அல்லது 20 செப்டம்பர் 1999[3]
சகேசு, ஈரான்
இறப்பு (அகவை 22)
தெகுரான், ஈரான்
இறப்பிற்கான
காரணம்
கடும் வதை காரணமான மண்டையோட்டு எலும்புமுறிவு[4][5][6]
கல்லறைசாகேசு, ஈரான்
மற்ற பெயர்கள்
  • ஜினா அமினி
  • ழினா அமினி

மகசா அமினி ( Mahsa Amini பாரசீக மொழி: مهسا امینی‎), தவிரவும் ஜினா அமினி அல்லது ழினா அமினி (பாரசீக மொழி: ژینا امینی‎, குர்தியம்: ژینا ئەمینی) எனவும்[7]அறியப்படும் 22 அகவை நிரம்பிய ஈரானியப் பெண் செப்டம்பர் 16, 2022 அன்று ஈரானின் தெகுரான் நகரில் காவல்துறையின் வன்செயல் என குற்றஞ்சாட்டுவகையில் ஐயத்திற்குரிய சூழலில் மரணமடைந்தார்.[8][9]

ஈரானின் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் சட்ட செயலாக்க காவற்படையின் அங்கமான ஒழுக்கப்பண்பு வழிகாட்டுப் படை அரசு விதிமுறைகளுக்கேற்றவாறு ஹிஜாப் அணியாதமைக்காக அமினியைக் கைது செய்தது. காவல்துறையின் கூற்றுப்படி அமினிக்கு காவல்நிலையத்தில் திடீரென்று இதய நிறுத்தம் ஏற்பட்டு தரையில் விழுந்தார்; இரண்டு நாட்கள் ஆழ்மயக்க நிலையில் இருந்து பின் மரணமடைந்தார்.[10][11] அவருடன் கைதானவர்களும் பிற நேரடி சாட்சிகளும் அமினி மிகக் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறினர்; இவற்றையும் கசிந்த மருத்துவ வருடி அறிக்கைகளையும் கொண்டு[4] அமினிக்கு பெருமூளை இரத்த ஒழுக்கு மற்றும் பக்கவாதம் ஏற்பட்டிருந்ததாக தனிப்பட்ட நபர்கள் கருதினர்.[12]

அமினியின் மரணம் நாடுதழுவிய போராட்டங்களுக்கு வித்திட்டது; இது உலகநாடுகளின் கவனத்தை ஈர்த்தது.அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் ஈரானின் இசுலாமியக் குடியரசில் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது.[13][14][15][16] உலகெங்கும் பல தலைவர்களும் அமைப்புக்களும் பிரபலங்களும் இந்நிகழ்வைக் கண்டித்ததுடன் போராட்டக்காரர்களுக்கு ஆதரவளித்தனர்.[17]

ஈரானிய அரசு இந்தப் போராட்டங்களை ஒடுக்க முயன்றது; போராளிகள் மீது சிறுகுண்டுகள், உலோக சிறுகுண்டுகள், கண்ணீர்ப்புகை மற்றும் நீர்பீரங்கிகளைக் கொண்டு தாக்கியது.[18] இன்ஸ்ட்டாகிராம், வாட்சப் போன்ற சமூக ஊடக நிரலிகளை தடை செய்தும் இணைய அணுக்கத்தைக் கட்டுப்படுத்தியும் போராட்ட ஒருங்கிணைப்பை அடக்கியது. 2019ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட முழுமையான இணைய முடக்கத்திற்குப் பிறகு இதுவே மிகக் கடுமையான கட்டுப்பாடுகளாகும்.[19]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Zhina Amini goes into coma 2 hours after arrest". National Council of Resistance of Iran (in ஆங்கிலம்). 2022-09-15. Archived from the original on 15 September 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-09-18.
  2. "Mahsa Amini kimdir? M ahsa Amini nasıl öldü?". Cumhuriyet (in துருக்கிஷ்). Archived from the original on 25 September 2022. பார்க்கப்பட்ட நாள் 25 September 2022.
  3. Najdi (نجدی), John (یوحنا). "در روز تولد مهسا امینی؛ دختر به روایت پدر". Deutsche Welle. Archived from the original on 24 September 2022. பார்க்கப்பட்ட நாள் 23 September 2022.
  4. 4.0 4.1 "Mahsa Amini's medical scans show skull fractures caused by 'severe trauma': Report". Al Arabiya. 19 September 2022. Archived from the original on 24 September 2022. பார்க்கப்பட்ட நாள் 22 September 2022.
  5. "Iran protests: Mahsa Amini's death puts morality police under spotlight". BBC News. 23 September 2022 இம் மூலத்தில் இருந்து 23 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220923050009/https://www.bbc.com/news/world-middle-east-62984076. 
  6. "Iran's protesters have had enough after Mahsa Amini's death". Al Jazeera English. 22 September 2022 இம் மூலத்தில் இருந்து 24 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220924205927/https://www.aljazeera.com/news/2022/9/22/irans-protesters-have-had-enough-after-mahsa-aminis-death. 
  7. "Zhina Amini goes into coma 2 hours after arrest". National Council of Resistance of Iran (in அமெரிக்க ஆங்கிலம்). 15 September 2022. Archived from the original on 15 September 2022. பார்க்கப்பட்ட நாள் 18 September 2022.
  8. Fazeli, Yaghoub (16 September 2022). "Iranian woman 'beaten' by police for 'improper hijab' dies after coma: State media". Al Arabiya. Archived from the original on 16 September 2022. பார்க்கப்பட்ட நாள் 16 September 2022.
  9. "IranWire Exclusive: Morality Patrol Beats a Woman into a Coma". iranwire.com. 15 September 2022. Archived from the original on 24 September 2022. பார்க்கப்பட்ட நாள் 18 September 2022.
  10. "Three killed in protests over Iranian woman Mahsa Amini's death in custody". CBC.ca. 20 September 2022. Archived from the original on 20 September 2022. பார்க்கப்பட்ட நாள் 22 September 2022.
  11. "Arrest by hijab police leaves woman comatose". Al-Monitor. 15 September 2022. Archived from the original on 18 September 2022. பார்க்கப்பட்ட நாள் 22 September 2022.
  12. Brase, Jörg (20 September 2022). "Irans Opposition hat vor allem eine Schwäche" (in de) இம் மூலத்தில் இருந்து 24 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220924184813/https://www.zdf.de/nachrichten/politik/iran-protest-mahsa-amini-100.html. 
  13. "نماد زن ایرانی در حکومت جهل و جنون آخوندی!" [The symbol of Iranian women in the rule of ignorance and insanity of Akhundi!]. iran-tc.com. Archived from the original on 24 September 2022. பார்க்கப்பட்ட நாள் 22 September 2022.
  14. "Mahsa Amini is Another Victim of the Islamic Republic's War on Women". iranhumanrights.org. 16 September 2022. Archived from the original on 18 September 2022. பார்க்கப்பட்ட நாள் 22 September 2022.
  15. Falor, Sanskriti (21 September 2022). "Why death of 22-year-old Mahsa Amini sparked protests in Iran". indianexpress.com. Indian Express Limited. Archived from the original on 19 September 2022. பார்க்கப்பட்ட நாள் 22 September 2022.
  16. "Mahsa Amini: Acting UN human rights chief urges impartial probe into death in Iran". OHCHR (in ஆங்கிலம்). Archived from the original on 23 September 2022. பார்க்கப்பட்ட நாள் 23 September 2022.
  17. "Condemnations Follow Death Of Young Woman in Iranian Police Custody". Iran International. Archived from the original on 17 September 2022. பார்க்கப்பட்ட நாள் 18 September 2022.
  18. "At least 36 killed as Iran protests over Mahsa Amini's death rage: NGO". 23 September 2022 இம் மூலத்தில் இருந்து 23 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220923225456/https://english.alarabiya.net/News/middle-east/2022/09/23/At-least-36-killed-as-Iran-protests-over-Mahsa-Amini-s-death-rage-NGO. 
  19. Bonifacic, Igor (21 September 2022). "Iran restricts access to WhatsApp and Instagram in response to Mahsa Amini protests". Engadget. Archived from the original on 24 September 2022. பார்க்கப்பட்ட நாள் 22 September 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகசா_அமினியின்_மரணம்&oldid=3777706" இலிருந்து மீள்விக்கப்பட்டது