பெக்கா பள்ளத்தாக்கு
பெக்கா பள்ளத்தாக்கு (Beqaa Valley), லெபனான் நாட்டின் கிழக்கில் பால்பெக்-கர்மேல் ஆளுநரகத்தில் அமைந்துள்ளது. இது பெய்ரூத் நகரத்திற்கு கிழக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் மேற்கில் லெபனான் மலையும், கிழக்கில் எதிர்-லெபனான் மலையும் அமைந்துள்ளது.[1]இப்பள்ளத்தாக்கின் பெரிய நகரம் பால்பெக் ஆகும்.
ஜோர்டா பிளவு பள்ளதாக்கின் வடக்கின் தொடர்ச்சியான பெக்கா பள்ளத்தாக்கு, பெரும் பிளவுப் பள்ளத்தாக்குகின் பகுதியாக உள்ளது. பெக்கா பள்ளத்தாக்கு 120 கிலோ மீட்டர் நீளமும்; 16 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. இப்பகுதி நடுநிலக்கடல் சார் வானிலை கொண்டது.[2]
புவியியல், தட்ப வெப்பம் & பொருளாதாரம்
[தொகு]மழை மறைவு பிரதேசத்தில் அமைந்த பெக்கா பள்ளத்தாக்கில் குறைவான மழைப் பொழிவு கொண்டுள்ளது. இதன் வடக்கில் ஆண்டு சராசரி மழைப்பொழிவு 230 மில்லி மீட்டராக உள்ளது.[3] இப்பள்ளத்தாக்கில் இரண்டு ஆறுகள் உற்பத்தியாகிறது. அசி ஆறு சிரியா மற்றும் துருக்கி பகுதியில் பாய்கிறது. லித்தானி ஆறு பள்ளத்தாக்கின் தெற்கில் பாய்ந்து, லெவண்டைன் கடலில் கலக்கிறது. பெக்கா பள்ளத்தாக்கின் மொத்த நிலத்தில் 40% விளைநிலங்களாக உள்ளது.[4] மேலும் கோதுமை, சோளம், பருத்தி மற்றும் காய்கறிகள் பயிரிடப்படுகிறது. பெக்கா பள்ளதாக்கில் போதை தரும் அசீஷ் மற்றும் அபினி செடிகள் மற்றும் திராட்சைக் கொடிகள் பயிரிடப்படுகிறது. பள்ளத்தாக்கின் வடக்கில் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்களாக உள்ளது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Masri, Rania (1997-01-01), "Environmental Challenges in Lebanon", Challenging Environmental Issues (in ஆங்கிலம்), Brill, pp. 73–115, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1163/9789004475076_006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-47507-6, பார்க்கப்பட்ட நாள் 2024-06-10
- ↑ Neal, Mark (2019-05-23), "Beqaa Valley", A Dictionary of Business and Management in the Middle East and North Africa (in ஆங்கிலம்), Oxford University Press, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/acref/9780191843266.001.0001, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-184326-6, பார்க்கப்பட்ட நாள் 2024-07-29
- ↑ "Beqaa, LB Climate Zone, Monthly Weather Averages and Historical Data". weatherandclimate.com. பார்க்கப்பட்ட நாள் 2024-07-29.
- ↑ "Lebanon's Neglected Agricultural Potential - a Story of Baalbek". welthungerhilfe.org.tr (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-29.