பூலோக ரம்பை
Appearance
Boologa Rambai பூலோக ரம்பை | |
---|---|
இயக்கம் | டி. யோகானந்த் |
கதை | அரு.ராமநாதன் விரிதாய் நா.ராமசாமி |
திரைக்கதை | கே.ராம்நாத் |
இசை | சி. என். பாண்டுரங்கன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் அஞ்சலி தேவி பி. எஸ். வீரப்பா எம். என். நம்பியார் ராஜசுலோச்சனா |
ஒளிப்பதிவு | ஜெ. ஜி. விஜயம் |
படத்தொகுப்பு | பி.ஜி.மோகன் |
வெளியீடு | 14 ஜனவர் 1958[1] |
ஓட்டம் | 168 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பூலோக ரம்பை (Boologa Rambai) என்பது 1958ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இயக்குனர் டி.யோகானந்த் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். அசோகா பிச்சர்சு என்ற நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. அரு. ராமநாதன் மற்றும் விரிதை நா. இராமசாமி ஆகியோர் இத்திரைப்பட வசனங்களை எழுதியுள்ளனர். கே. ராம்நாத் திரைக்கதையை எழுதியுள்ளார். சி. என். பாண்டுரங்கன் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ஜெமினி கணேசன், அஞ்சலி தேவி, பி. எஸ். வீரப்பா, மா. நா. நம்பியார் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜசுலோசனா, கே. ஏ. தங்கவேலு, ஏ. கருணாநிதி ஆகியோரும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.[2][3]
நடிகர்கள்
[தொகு]- இளவரசர் புவனேந்திரனாக, ஜெமினி கணேசன்
- இளவரசி பூலோக ரம்பையாக, அஞ்சலி தேவி
- பொது வீர கேசரியாக, பி. எஸ். வீரப்பா
- புத்தி சிகாமணியாக, மா. நா. நம்பியார்
- இளவரசி மேகலாவாக, ராஜசுலோசனா
- வர்ணமாக, கே. ஏ. தங்கவேலு
- பூங்காவணமாக, ஈ. வி. சரோஜா
- மகோதரணாக ஏ. கருணாநிதி
- பூபதியாக, பி. எஸ். வெங்கடாசலம்
- நாகசூரனாக, ஈ. ஆர். சகாதேவன்
- சிரா கேசரியாக, கே. சாய்ராம்
- சொர்ணமாக எம். சரோசா
- சூனியக்காரி ரங்கமாவாக, சி. கே. சரசுவதி
- புவனேந்திரனின் தந்தையாக, கே. நடராசன்
- புவனேந்திரனின் தாயாக, இலட்சுமி பிரபா
- மாய மோகினியாக, இரீட்டா
குழுவினர்
[தொகு]- தயாரிப்பாளர் டி. யோகானந்த்
- கலை: மகாதேவன் பிள்ளை மற்றும் சோமையா
- நிழற்படம்: ஆர்.வெங்கடாச்சாரி
- செயலாக்கம்:ஆர்.கிருசுணன் மற்றும் எஸ்.வி. வெங்கடரமணன்
- கேட்பலை வரைவு: வி. எஸ். ராகவன், என். ராமசந்திரன்,கிருட்டிணையர், டி. எஸ். ரங்கசாமி மற்றும் கோவிந்தசாமி
- கேட்பலை வரைவு (உரையாடல்): ஆர். எஸ். ராசன்
- நடனம்: மகாதேவன், வி. பி. பலராம், சோகன்லால், மற்றும் பசுமர்த்தி கிருட்டிணமூர்த்தி
ஒலிப்பதிவு
[தொகு]பூலோக ரம்பை | |
---|---|
ஒலிப்பதிவு
| |
வெளியீடு | 1958 |
ஒலிப்பதிவு | 1958 |
இசைப் பாணி | சரீகம |
மொழி | தமிழ் |
இசைத் தயாரிப்பாளர் | சி. என். பாண்டுரங்கன் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-08-21. பார்க்கப்பட்ட நாள் 2021-06-24.
- ↑ "boologa rambai". spicyonion. பார்க்கப்பட்ட நாள் 2016-02-16.
- ↑ http://tamilrasigan.com/boologa-rambai-1958-tamil-movies-online-watch-free/