புராணசிங்கபாளையம் திரௌபதியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு திரௌபதியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விழுப்புரம்
அமைவிடம்:மெயின் ரோடு, புராணசிங்கபாளையம், விழுப்புரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:வானூர்
மக்களவைத் தொகுதி:விழுப்புரம்
கோயில் தகவல்
மூலவர்:திரௌபதியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:தீமிதி திருவிழா
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

புராணசிங்குபாளையம் திரௌபதியம்மன் கோயில் சுற்றுவட்டார பகுதிகளில் முதன்மையான கோவிலாக விளங்குகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலானது தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில், புதுச்சேரி மாநில எல்லைக்கு அருகில் அமைந்துள்ள புராணசிங்குபாளையம் (பி. எஸ். பாளையம்) என்னும் ஊரில் உள்ள அம்மன் கோயிலாகும்.[1] இங்கு வசிக்கும் வன்னிய குல மக்களின் குலதெய்வமாக திரௌபதியம்மன் கோவில் உள்ளது.

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் பாண்டவர்களின் மனைவி திரௌபதியம்மன் சன்னதியும், போத்தராசா, விநாயகர், அய்யப்பன் மற்றும் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. சித்திரை மாதம் தீமிதி திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.மகாபாரத நிகழ்வுகளை நினைவுகொள்ளும் வகையில் அரக்குமாளிகை எரிப்பு, பகாசூரனுக்கு பீமன் உணவு வழங்குதல் மற்றும் வதம் செய்தல், கிருஷ்ணரின் தலைமையில் அருச்சுனன்-திரௌபதி திருகல்யாணவைபோகம், கிருஷ்ணரின் கருடவாகன சேவை, விஸ்வரூப சேவை, குதிரைவாகன சேவை, மஞ்சள்நீராட்டு ,அரவான் பலி போன்ற திருவிழாக்கள் மிகவும் பிரசித்திபெற்றது. பத்து நாட்கள் புராணசிங்குபாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களும் விழாக்கோலம் கொண்டிருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)