பும்தாங் மாவட்டம்
பும்தாங் மாவட்டம் (Bumthang District) பூட்டானிலுள்ள 20 மாவட்டங்களில் ஒன்றாகும். இங்கு வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் பல அமைந்துள்ளன.இங்கு 4 பள்ளத்தாக்குகள் அமைந்துள்ளன. அவை உரா, சும்மி, டாங், சோய்கார் ஆகியன. இம்மாநிலம் ஒட்டுமொத்தமாக பும்தாங் பள்ளத்தாக்கு என்றும் அழைக்கப்படும். பும்தாங் எனில் அழகான நிலம் என்று பொருள்.
பொருளாதாரம்[தொகு]
இங்கே கேழ்வரகு, பால் பொருட்கள், தேன், ஆப்பிள், உருளைக்கிழங்கு, கம்பிளி போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன. பொருளாதாரத்தில் கேழ்வரகு முக்கியப் பங்கு வகிக்கிறது.
மொழிகள்[தொகு]
பும்தாங்கா, ட்ஸோங்கா, கென்ங், கென்ங்கா, குர்டோப்கா, நுப்பிக்கா, ப்ரோக்காட், துர் மற்றும் யாக்கெர்ட் ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன.
ஜிவோக்கள்[தொகு]
கிராமங்களின் தொகுப்பு ஜிவோக்கள்[1] என அழைக்கப்படும். பும்தாங் 4 ஜிவோக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை,
- சும்மே
- சோய்கோர்
- டாங்
- உரா
நகரங்கள்[தொகு]
- சும்மே
- ஜாகர்
- உரா
- டாங்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Chiwogs in Chukha" (PDF). Election Commission, Government of Bhutan. 2011. 2011-10-02 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது (PDF) எடுக்கப்பட்டது. 2011-07-28 அன்று பார்க்கப்பட்டது.