புபுது தசநாயக்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புபுது தசநாயக்க
இலங்கையின் கொடி இலங்கை
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை -
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 11 16
ஓட்டங்கள் 196 85
துடுப்பாட்ட சராசரி 13.06 10.62
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 36 20*
பந்துவீச்சுகள் - -
விக்கெட்டுகள் - -
பந்துவீச்சு சராசரி - -
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/ஸ்டம்புகள் 19/5 9/4

பிப்ரவரி 9, 2006 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

புபுது பாத்தியா தசநாயக்க (Pubudu Bathiya Dassanayake, பிறப்பு: சூலை 11, 1970), கனடாத் துடுப்பாட்ட அணியின் பயிற்றுனர். இவர் இலங்கை, கண்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1993 முதல் 1994 வரை இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 16 ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணிக்காக விளையாடினார். 1993 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தேர்வுப் போட்டித் தொடரில் முதள் தடவையாக இலங்கை அணிக்காக குச்சுக் காப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலாவது போட்டியில் ஏழு ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தார். இலங்கை அணியின் 94/95 நியூசிலாந்துப் போட்டித் தொடரில் விளையாட இவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. எனினும் இவர் இலங்கையில் முதல்தரப் போட்டிகளில் பங்குபற்றினார். 1998 இல் இலங்கை ஏ அணியில் சேர்ந்து பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடினார். அதன் பின்னர் இவர் கனடா துடுப்பாட்ட அணிக்காக உலகக்கிண்ணத் தெரிவுப் போட்டிகளில் பங்குபற்றி சராசரியாக 15.2 ஓட்டங்களை எடுத்தார்.

2007 ஆகத்து 29 ஆம் நாளில் இவர் கனடா அணியின் நிரந்தரப் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டார் [1][2].

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புபுது_தசநாயக்க&oldid=2625459" இருந்து மீள்விக்கப்பட்டது