புனித கிறிஸ்தோபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித கிறிஸ்தோபர்
மறைசாட்சி
பிறப்புகானான் (மேற்கத்திய மரபு) அல்லது மார்மரிக்கா (கிழக்கத்திய மரபு)
இறப்புசுமார் 251
அனத்தோலியா
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை
கிழக்கு மரபுவழி திருச்சபை
லூதரனியம்
ஆங்கிலிக்கம்
திருவிழா
சித்தரிக்கப்படும் வகைமரம், கிளை, குழந்தை இயேசுவை தூக்கிக்கொண்டு ஆற்றை கடப்பது போல்
பாதுகாவல்திருமணமாகாதோர், போக்குவரத்து பணியாளர், நெடுந்தூரம் பயணம் செய்வோர், புயற்காற்று, செயிண்ட் கிட்சு தீவு, வில்னியஸ், கால்-கை வலிப்பு, தோட்டக்காரர், நல்ல மரணம், பல்வலி

புனித கிறிஸ்தோபர் (கிரேக்க மொழி: Ἅγιος Χριστόφορος, Ágios Christóforos) என்பவர் கிறிஸ்தவ பிரிவுகளில் மறைசாட்சியாக வணங்கப்படுபவர் ஆவார். இவர் மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த உரோமை பேரரசர் தெசியு (அட்சிக்காலம் 249–251) அல்லது பேரரசர் இரண்டாம் மேக்சிமுஸ் தாசியு (அட்சிக்காலம் 308–313) என்பவரால் கொல்லப்பட்டிருக்கலாம். எவ்வாறாயினும் இவருக்கு செலுத்தப்படும் வணக்கம் மிகவும் பின் நாட்களிலேயே தொடங்கியதொன்றாகும். இது மேற்கத்திய திருச்சபையில் மத்திய காலத்தின் பிற்பகுதியில் பரவத் தொடங்கியது. எனினும் இவரின் பெயரால் ஏழாம் நூற்றாண்டு முதலே மடங்களும் ஆலயங்களும் கட்டப்பட்டன.

இவர் உண்மையிலேயே வரலாற்றில் வாழ்ந்த நபரா அல்லது இப்பெயர் பலரை குறிக்கப் பயன்படுத்தப்பட்ட செல்லா என்பது குறித்து அறிஞரிடையே ஒத்த கருத்தில்லை.

கிரேக்கத் தொன்மவியலின் சாயலில் அமைந்த ஒரு மரபுவழி கதையின்படி இவர் கிறிஸ்துவை தன் தோளில் சுமந்து ஆற்றை கடக்க உதவியதாக நம்பப்படுகிறது. ஆகவே இவர் பயணம் செய்வோருக்கு பாதுகாவலராக கருதப்படுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. (கிரேக்கம்) Ὁ Ἅγιος Χριστοφόρος ὁ Μεγαλομάρτυρας. 9 Μαΐου. ΜΕΓΑΣ ΣΥΝΑΞΑΡΙΣΤΗΣ.
  2. https://st-takla.org/Saints/Coptic-Orthodox-Saints-Biography/Coptic-Saints-Story_879.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனித_கிறிஸ்தோபர்&oldid=2715571" இலிருந்து மீள்விக்கப்பட்டது