புதுக்கோட்டை மாவட்ட மருத்துவமனைகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் இயக்குநரகத்தின் கீழ் 31 அரசு மருத்துவமனைகள் 1 மருந்தகம் 77 தொடக்கநிலை நல்வாழ்வு நிலையங்கள் 258 நலவாழ்வுத் துணை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.[1]
மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி
[தொகு]புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த மாவட்டத் தலைமை மருத்துவவைமனை புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் 200 கோடி ரூபாய் செலவில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி 2017-18ஆம் கல்வியாண்டு முதல் 150 மாணவர்கள் சேர்க்கையுடன் தொடங்க கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன [2]. இதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள ஒரு சிறப்பு அலுவலர்- முதல்வர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கப்பட்டு வகுப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.[3]
அரசு மருத்துவமனைகள்
[தொகு]2015-2016 ஆண்டு புள்ளி விவரப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 15 அரசு மருத்துவமனைகளும் 15 சித்த மருத்துவமனைகளும் 1 ஓமியோபதி மருத்துவமனை என மொத்தம் 31 அரசு மருத்துவமனைகள் செயல்படுகின்றன.[4]
அரசு தொடக்கநிலை நலவாழ்வு நிலையங்கள்
[தொகு]2015-2016 ஆண்டு புள்ளி விவரப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 64 அரசு தொடக்கநிலை நலவாழ்வு நிலையங்களும், 2 ஆயுர் வேத மருத்துவத்திற்கான தொடக்கநிலை நலவாழ்வு நிலையங்களும், 11 சித்த மருத்துவத்திற்கான தொடக்கநிலை நலவாழ்வு நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. மேலும் ஊரக அளவில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 258 துணை நலவாழ்வு நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.[4]
ஒன்றிய வாரியாக தொடக்கநிலை நலவாழ்வு நிலையங்களின் எண்ணிக்கை
[தொகு]| ஒன்றியம் /நகராட்சியின் பெயர் | அரசு தொடக்கநிலை நலவாழ்வு நிலையங்கள் | துணை நலவாழ்வு நிலையங்கள் |
|---|---|---|
| புதுக்கோட்டை | 3 | 13 |
| கந்தர்வக்கோட்டை | 3 | 15 |
| அரிமளம் | 5 | 15 |
| திருமயம் | 5 | 16 |
| பொன்னமராவதி | 3 | 20 |
| விராலிமலை | 4 | 21 |
| அன்னவாசல் | 7 | 22 |
| குன்றான்டார்கோவில் | 4 | 18 |
| திருவரங்குளம் | 8 | 29 |
| கரம்பக்குடி | 5 | 19 |
| அறந்தாங்கி | 6 | 26 |
| ஆவுடையார்கோவில் | 4 | 15 |
| மணமேல்குடி | 4 | 13 |
| மொத்தம் | 61 | 242 |
| அறந்தாங்கி நகராட்சி (நகர ஆரம்ப சுகாதார நிலையம்) | 1 | 4 |
| புதுக்கோட்டை நகராட்சி (நகர ஆரம்ப சுகாதார நிலையம்) | 2 | 12 |
| மொத்தம் | 3 | 16 |
| பெரு தொத்தம் | 64 | 258 |
மருத்துவப் பணியாளர்களும் வசதிகளும்
[தொகு]அரசு மருத்துவைமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தமாக புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் 1761 படுக்கை வசதிகளும் 372 அரசு மருத்துவர்களும் 657 செவிலியர்களும் மற்றும் குறிப்பிடத்தக்க அளவில் பிற மருத்துவப் பணியாளர்களும் பணிபுரிகின்றனர்.
சிகிச்சை விவரம்
[தொகு]புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் 2015-2016 ஆம் ஆண்டில் நோய் வாரியாக சிகிச்சை பெற்றோர் விவரம் பின்வருமாறு:
| வரிசை எண் | நோய் | புத்தறிவியல் மருத்துவ முறையில் சிகிச்சை பெற்றோர் (அலோபதி) | சித்த மருத்துவ முறையில் சிகிச்சை பெற்றோர் |
|---|---|---|---|
| 1 | இயல்பான காய்ச்சல் | 13080 | 567 |
| 2 | தைபாய்டு காய்ச்சல் | 17 | - |
| 3 | காசநோய் | 1496 | - |
| 4 | தொழுநோய் | 97 | - |
| 5 | வாத நோய் | - | 503 |
| 6 | மிகை அழுத்த நோய்கள் | 3013 | - |
| 7 | இரத்த ஓட்டத் தடை, இதய நோய்கள் | 654 | - |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ District Statistical Hand Book 2015-16 (PDF). Pudukkottai: Pudukkottai District Administration. 2015–2016. p. 292.
{{cite book}}: CS1 maint: date format (link)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ http://makkalkural.net/news/blog/2015/10/24/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-07-21. Retrieved 2017-05-08.
- ↑ 4.0 4.1 http://www.pudukkottai.tn.nic.in/pdf/S15HEALTH.pdf[தொடர்பிழந்த இணைப்பு]