புதுக்கோட்டை மாவட்ட மருத்துவமனைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் இயக்குநரகத்தின் கீழ் 31 அரசு மருத்துவமனைகள் 1 மருந்தகம் 77 தொடக்கநிலை நல்வாழ்வு நிலையங்கள் 258 நலவாழ்வுத் துணை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.[1]

மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி[தொகு]

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த மாவட்டத் தலைமை மருத்துவவைமனை புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் 200 கோடி ரூபாய் செலவில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி 2017-18ஆம் கல்வியாண்டு முதல் 150 மாணவர்கள் சேர்க்கையுடன் தொடங்க கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன [2]. இதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள ஒரு சிறப்பு அலுவலர்- முதல்வர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கப்பட்டு வகுப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.[3]

அரசு மருத்துவமனைகள்[தொகு]

2015-2016 ஆண்டு புள்ளி விவரப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 15 அரசு மருத்துவமனைகளும் 15 சித்த மருத்துவமனைகளும் 1 ஓமியோபதி மருத்துவமனை என மொத்தம் 31 அரசு மருத்துவமனைகள் செயல்படுகின்றன.[4]

அரசு தொடக்கநிலை நலவாழ்வு நிலையங்கள்[தொகு]

2015-2016 ஆண்டு புள்ளி விவரப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 64 அரசு தொடக்கநிலை நலவாழ்வு நிலையங்களும், 2 ஆயுர் வேத மருத்துவத்திற்கான தொடக்கநிலை நலவாழ்வு நிலையங்களும், 11 சித்த மருத்துவத்திற்கான தொடக்கநிலை நலவாழ்வு நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. மேலும் ஊரக அளவில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 258 துணை நலவாழ்வு நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.[4]

ஒன்றிய வாரியாக தொடக்கநிலை நலவாழ்வு நிலையங்களின் எண்ணிக்கை[தொகு]

ஒன்றியம் /நகராட்சியின் பெயர் அரசு தொடக்கநிலை நலவாழ்வு நிலையங்கள் துணை நலவாழ்வு நிலையங்கள்
புதுக்கோட்டை 3 13
கந்தர்வக்கோட்டை 3 15
அரிமளம் 5 15
திருமயம் 5 16
பொன்னமராவதி 3 20
விராலிமலை 4 21
அன்னவாசல் 7 22
குன்றான்டார்கோவில் 4 18
திருவரங்குளம் 8 29
கரம்பக்குடி 5 19
அறந்தாங்கி 6 26
ஆவுடையார்கோவில் 4 15
மணமேல்குடி 4 13
மொத்தம் 61 242
அறந்தாங்கி நகராட்சி (நகர ஆரம்ப சுகாதார நிலையம்) 1 4
புதுக்கோட்டை நகராட்சி (நகர ஆரம்ப சுகாதார நிலையம்) 2 12
மொத்தம் 3 16
பெரு தொத்தம் 64 258

மருத்துவப் பணியாளர்களும் வசதிகளும்[தொகு]

அரசு மருத்துவைமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தமாக புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் 1761 படுக்கை வசதிகளும் 372 அரசு மருத்துவர்களும் 657 செவிலியர்களும் மற்றும் குறிப்பிடத்தக்க அளவில் பிற மருத்துவப் பணியாளர்களும் பணிபுரிகின்றனர்.

சிகிச்சை விவரம்[தொகு]

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் 2015-2016 ஆம் ஆண்டில் நோய் வாரியாக சிகிச்சை பெற்றோர் விவரம் பின்வருமாறு:

வரிசை எண் நோய் புத்தறிவியல் மருத்துவ முறையில் சிகிச்சை பெற்றோர் (அலோபதி) சித்த மருத்துவ முறையில் சிகிச்சை பெற்றோர்
1 இயல்பான காய்ச்சல் 13080 567
2 தைபாய்டு காய்ச்சல் 17 -
3 காசநோய் 1496 -
4 தொழுநோய் 97 -
5 வாத நோய் - 503
6 மிகை அழுத்த நோய்கள் 3013 -
7 இரத்த ஓட்டத் தடை, இதய நோய்கள் 654 -

மேற்கோள்கள்[தொகு]

  1. District Statistical Hand Book 2015-16. Pudukkottai: Pudukkottai District Administration. 2015-2016. பக். 292. http://www.pudukkottai.tn.nic.in/pdf/S15HEALTH.pdf. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. http://makkalkural.net/news/blog/2015/10/24/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0/
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-07-21. பார்க்கப்பட்ட நாள் 2017-05-08.
  4. 4.0 4.1 http://www.pudukkottai.tn.nic.in/pdf/S15HEALTH.pdf[தொடர்பிழந்த இணைப்பு]